புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

Written By:

மிக சவாலான விலையில் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் மிக அசத்தலாக இருக்கின்றன. கொடுக்கும் பணத்திற்கு மிக மிக மதிப்பு வாய்ந்த மாடல் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அந்த வசதிகள் இடம்பெற்றுள்ளன.

வேரியண்ட்டுகள் விபரம்:

வேரியண்ட்டுகள் விபரம்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வசதிகள் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தலா 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

எல்எக்ஸ்ஐ/எல்டிஐ வேரியண்ட்:

எல்எக்ஸ்ஐ/எல்டிஐ வேரியண்ட்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வசதிகள் குறைவான பேஸ் மாடல்[LXi/LDi] 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். ஏஎம்டி என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

எல்எக்ஸ்ஐ/எல்டிஐ வேரியண்ட்:

எல்எக்ஸ்ஐ/எல்டிஐ வேரியண்ட்:

 • விலை குறைவான இந்த வேரியண்ட்டில் ஓட்டுனர் மற்றும் முன்இருக்கை பயணிக்கான இரண்டு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
 • அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி என்ற பாதுகாப்பு நுட்பம் இருக்கிறது.
 • திடீரென பிரேக் பிடிக்கும்போது பிரேக் பேடுகள் பூட்டிக் கொள்வதை தவிர்க்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
 • குழந்தைகளுக்கான இருக்கை பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் சீட் ஆங்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 • வேறு சாவியை போட்டு கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதை தவிர்ப்பதற்கான எஞ்சின் இம்மொபைலைசர் வசதி உள்ளது.
 • பாடி கலர் பம்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 • 14 அங்குல ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
 • ஹீட்டர் வசதியுடன் கூடிய மேனுவல் ஏசி வசதி உள்ளது.
 • ஆம்பர் பேக்லிட் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.
 • டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் சிஸ்டம் உள்ளது.
 • உட்புறத்திலிருந்து ரியர் வியூ மிரர்களை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.
 • ரிமோட் கன்ட்ரோல் மூலமாக பூட் ரூம் மூடியையும், எரிபொருள் டேங்க் மூடியையும் திறக்கும் வசதி உள்ளது.
 • கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் வசதி உள்ளது.
 புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் பேஸ் மாடல் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் பேஸ் மாடல் ரூ.5.99 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். அடிப்படை வசதிகளுடன் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் அசத்துகிறது புதிய மாருதி ஸ்விஃப்ட். குறிப்பாக, ரூ.4.99 லட்சம் விலையில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி நுட்பம் மற்றும் ரிமோட் பூட் லிட் திறப்பு வசதிகள் மதிப்புமிக்க அம்சங்களாகவே கூறலாம்.

விஎக்ஸ்ஐ/விடிஐ வேரியண்ட்:

விஎக்ஸ்ஐ/விடிஐ வேரியண்ட்:

புதிய மாருதி விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகளில் மேற்கண்ட வசதிகளுடன் கூடுதலாக பல முக்கிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 • இந்த வேரியண்ட்டில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும்.
 • கார் திருடுபோவதை தவிர்க்கும் செக்யூரிட்டி சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
 • கார் குறிப்பிட்ட வேகத்தை தாண்டும்போது கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும் வசதி உள்ளது.
 • உட்புறத்தில் பகல் இரவு ரியர் வியூ மிரர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரவு நேரத்தில் பின்னால் வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தை தவிர்த்து, தெளிவாக பார்க்க உதவும்.
 • இன்டிகேட்டர் பொருத்தப்பட்ட ரியர் வியூ மிரர்கள்
 • வெள்ளை வண்ண பேக்லிட் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
 • ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் வெளிப்புற வெப்பநிலையை காட்டும் வசதி
 • எஞ்சின் சுழல் வேகத்தை காட்டும் டாக்கோமீட்டர்
 • சாவியுடன் கார் அருகில் வந்தால் கதவுவகள் தானாக திறக்கும் கீலெஸ் என்ட்ரி வசதி
 • ஒரு பட்டன் கன்ட்ரோல் மூலமாக காரின் அனைத்து கதவுகளையும் பூட்டும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்
 • பட்டன் மூலமாக ஜன்னல் கண்ணாடிகளை மூடி திறக்கும் பவர் விண்டோஸ். ஓட்டுனர் பக்க ஜன்னல் தானியங்கி முறையில் மூடும் வசதி.
 • ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள்
 • 4 ஸ்பீக்கருடன் கூடிய மியூசிக் சிஸ்டம்
 • ரியர் பார்சல் ட்ரே
 • ஏஎம்டி மாடலில் ஓட்டுனருக்கான ஃபுட் ரெஸ்ட் வசதி.
 • மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் வசதி
 புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் நடுத்த விலை கொண்ட இந்த விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகள் பேஸ் மாடலைவிட ரூ.90,000 முதல் ரூ.1.35 லட்சம் வரை கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பவர் விண்டோஸ், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, மியூசிக் சிஸ்டம், டாக்கோமீட்டர் உள்ளிட்ட பல அத்தியாவசிய வசதிகள் இந்த வேரியண்ட்டில்தான் கிடைக்கிறது. இந்த மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைப்பது கூடுதல் சிறப்பு. மாருதி ஸ்விஃப்ட் காரின் அதிகம் விற்பனையாகும் வேரியண்ட்டும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இசட்எக்ஸ்/ இசட்டிஐ வேரியண்ட்:

இசட்எக்ஸ்/ இசட்டிஐ வேரியண்ட்:

பேஸ் மாடல் மற்றும் நடுத்தர விலை வேரியண்ட்டுகளில் இருக்கும் வசதிகளுடன் அதிக வசதிகள் கொண்ட மாடலாக இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்டிஐ வேரியண்ட்டுகள் இருக்கின்றன.

 • இந்த வேரியண்ட்டில் 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்படுகின்றன.
 • லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் உள்ளது.
 • ரிவர்ஸ் எடுக்கும்போது பின்புற தடைகள் குறித்து ஓட்டுனரை எச்சரிக்கும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 • இரண்டு ட்வீட்டர்கள், நான்கு ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
 • பனி விளக்குகள் உள்ளன.
 • சாவி அருகில் இருந்தால் பொத்தானை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி இருக்கிறது.
 • ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி இருக்கிறது.
 • எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
 • குளிர் அல்லது மழை நேரத்தில் பின்புற கண்ணாடியில் வெண் படலத்தை சரிசெய்யும் ரியர் டீஃபாகர் வசதி உள்ளது.
 • பின்புற கண்ணாடியை கழுவி சுத்தம் செய்வதற்கான ரியர் வைப்பர் மற்றும் வாஷர் வசதி உள்ளது.
 • பின் இருக்கையில் ஹெட்ரெஸ்ட்டுகளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உண்டு.
 • 60:40 விகிதத்தில் இருக்கையை மடக்கி விரிக்கும் வசதி இருக்கிறது.
 புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் விஎக்ஸ்ஐ/விடிஐ நடுத்தர விலை வேரியண்ட்டைவிட இந்த இசட்எக்ஸ்ஐ/ இசட்டிஐ வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.70,000 கூடுதல் விலையிலும், ஏஎம்டி மாடல் ரூர.60,000 கூடுதல் விலையிலும் வந்துள்ளது. இந்த கூடுதல் விலைக்கு ஏற்றவாறு 15 அங்குல அலாய் வீல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவை மிகவும் மதிப்புவாய்ந்த வசதிகளாக இருக்கின்றன.

புதிய இசட்எக்ஸ்ஐ ப்ளஸ்/ இசட்டிஐ ப்ளஸ் வேரியண்ட்:

புதிய இசட்எக்ஸ்ஐ ப்ளஸ்/ இசட்டிஐ ப்ளஸ் வேரியண்ட்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் அனைத்து உயர் வசதிகளையும் உள்ளடக்கிய மாடல்தான் இவை. ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கிறது என்பதை மனதில் வைக்கவும்.

 • 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.
 • கவர்ச்சிகரமான 15 அங்குல இரட்டை வண்ண டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்படுகிறது.
 • எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெற்று இருக்கின்றன.
 • எல்இடி பகல் நேர விளக்குகள் உள்ளன
 • ரிவர்ஸ் எடுக்கும்போது பின்புறத்தை பார்ப்பதற்கான ரிவர்ஸ் பாரக்கிங் கேமரா வசதி உள்ளது.
 • தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 • ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாப்ட்வேர்களையும் மிரர்லிங்க் வசதியையும் சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
 • இருள் வரும் வேளைகளில் தானாக ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி உள்ளது.
 • இரவில் காரை நிறுத்தி இறங்கும்போது சிறிது நேரம் ஒளிர்ந்து வெளிச்சம் தந்து அணைந்துவிடும் ஃபாலோமீ லேம்ப் வசதி உள்ளது.
 புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பிரிமியம் வசதிகள் நிறைந்த மாடல் இதுதான். எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவை இந்த மாடலின் மதிப்பை தூக்கிப் பிடிக்கும் அம்சங்கள். இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்டிஐ வேரியண்ட்டுகளைவிட இந்த மாடல் ரூ.80,000 கூடுதல் விலை கொண்டது.

எஞ்சின் விபரம்:

எஞ்சின் விபரம்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை காெண்டது.

மைலேஜ் விபரம்:

மைலேஜ் விபரம்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வண்ணங்கள்:

வண்ணங்கள்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் சிவப்பு, வெள்ளை, சில்வர், அடர் சாம்பல், நீலம் மற்றும் ஆரஞ்ச் வண்ணங்களில் கிடைக்கிறது.

பெட்ரோல் மாடல் விலை விபரம்:

பெட்ரோல் மாடல் விலை விபரம்:

வேரியண்ட் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை
எல்எக்ஸ்ஐ ரூ.4.99 லட்சம்
விஎக்ஸ்ஐ ரூ.5.87 லட்சம்
விஎக்ஸ்ஐ (ஏஎம்டி) ரூ.6.34 லட்சம்
இசட்எக்ஸ்ஐ ரூ.6.49 லட்சம்
இசட்எக்ஸ்ஐ (ஏஎம்டி) ரூ.6.96 லட்சம்
இசட்எக்ஸ் ப்ளஸ் ரூ.7.39 லட்சம்
டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

வேரியண்ட் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை
எல்டிஐ ரூ.5.99 லட்சம்
விடிஐ ரூ.6.87 லட்சம்
விடிஐ (ஏஎம்டி) ரூ.7.34 லட்சம்
இசட்எக்ஸ்ஐ ரூ.7.49 லட்சம்
இசட்டிஐ (ஏஎம்டி) ரூ.7.96 லட்சம்
இசட்டிஐ ப்ளஸ் ரூ.8.29 லட்சம்
English summary
we bring you the new Maruti Swift 2018 variants in detail.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark