மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு குவிகிறது. டெலிவிரி இன்று துவங்குகிறது!

Written By:

ஆட்டோ எக்ஸ்போவில் நேற்றுமுன்தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் எதிர்பார்த்தபடியே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. விலை அறிவிப்பு வெளியானது முதல் முன்பதிவு வேகம் கூடி இருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

இதுவரை புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், விலை அறிவிப்பு வெளியான நிலையில், போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையிலும், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருப்பதால்,

மாருதி டீலர்களில் ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்யவும், விசாரணை போடவும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரத் துவங்கி இருக்கின்றனர்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

தற்போதைய நிலவரப்படி, புதிய மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்தால் 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்பதிவு வேகம் கூடி இருப்பதால் காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

அதேநேரத்தில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கூடிய விரைவாக புதிய ஸ்விஃப்ட் காரை டெலிவிரி கொடுக்க மாருதி திட்டமிட்டுள்ளது. காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைக்கவும் மாருதி முடிவு செய்திருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

முந்தைய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். அந்த சமயத்தில், மாருதி ஆலையில் நடந்த வன்முறை மற்றும் போராட்டம் காரணமாக, ஸ்விஃப்ட் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

ஆனால், இந்தமுறை காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைக்கும் விதத்தில், உற்பத்தியை கூட்டுவதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது. அது முன்பதிவை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமும் மாருதியிடம் இருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

பழைய ஸ்விஃப்ட் காரின் பேஸ் மாடலின் விலையைவிட புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பேஸ் மாடல் விலை ரூ.20,000 மட்டுமே அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற சிறந்த பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், மதிப்புமிக்க மாடலாகவே இருக்கும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

ஏற்கனவே வழங்கப்பட்டும் வரும் 83 பிஎச்பி பவர வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வந்துள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வந்திருப்பது கூடுதல் விசேஷம்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் தலா 6 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டைமன்ட் கட் அலாய் வீல்கள் போன்றவை முக்கிய அம்சங்கள்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிகிறது...!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.5.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

English summary
மாருதி ஸ்விஃப்ட், மாருதி கார், மாருதி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு
Story first published: Saturday, February 10, 2018, 13:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark