புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பற்றிய அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் படிக்கலாம்.

வேரியண்ட்டுகள் விபரம்:

வேரியண்ட்டுகள் விபரம்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் தலா 6 வேரியண்ட்டுகள் வீதம் மொத்தம் 12 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் LXi, VXi, VXi AMT, ZXi, ZXi AMT மற்றும் ZXi+ ஆகிய 6 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

டீசல் மாடல் LDi, VDi, VDi AMT, ZDi,ZDi AMT மற்றும் ZDi+ ஆகிய 6 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஏஎம்டி மாடல் மிகவும் விலை உயர்ந்த ZXi+ மற்றும் ZDi+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்காது.

பெட்ரோல் எஞ்சின்:

பெட்ரோல் எஞ்சின்:

பழைய மாடலில் இருந்த அதே பெட்ரோல், டீசல் எஞ்சின்கள்தான் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டீசல் எஞ்சின்:

டீசல் எஞ்சின்:

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் தேர்வு செய்து கொள்ள முடியும். மேற்குறிப்பிட்டது போல, ஏஎம்டி கியர்பாக்ஸ் சில குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
மைலேஜ் விபரம்:

மைலேஜ் விபரம்:

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜேயும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வலுவான கட்டமைப்பு

வலுவான கட்டமைப்பு

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹார்ட்டெக்ட் என்ற இலகுவான கட்டமைப்பு தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட அதிக உறுதியான கட்டமைப்பையும், அதேநேரத்தில் அதிக வலுவானதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எடை குறைவு:

எடை குறைவு:

புதிய கட்டமைப்பு தாத்பரியத்தின் மூலமாக, பழைய ஸ்விஃப்ட் காரைவிட புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் 85 கிலோ எடை குறைந்துள்ளது. புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வேரியண்ட்டை பொறுத்து, பெட்ரோல் மாடல் 880 கிலோவிலிருந்து 855 கிலோ வரையிலும், டீசல் மாடல் 955 கிலோவிலிருந்து 985 கிலோ வரையிலும் எடை கொண்டுள்ளது.

பரிமாணம்:

பரிமாணம்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் 3,840மிமீ நீளமும், 1,735மிமீ அகலமும், 1,530மிமீ வரை உயரம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வீல் பேஸ் 2,450மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழைய மாடலைவிட புதிய மாடல் 40மிமீ வரை அகலத்திலும், 20மிமீ உயரத்திலும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், நீளம் 10மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது.

பூட் ரூம் இடவசதி:

பூட் ரூம் இடவசதி:

நீளம் குறைக்கப்பட்டு இருந்தாலும், இதன் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், மிகச் சிறப்பான உட்புற இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த காரின் பூட் ரூம் கொள்திறன் 58 லிட்டர் வரை கூடி இருக்கிறது. தற்போது 265 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூமுடன் வந்துள்ளது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் 163மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளது.

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்:

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் டிசைன் பெரிதும் மாற்றம் செய்யப்ப்டடு இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் ஆகியவை காருக்கு புதுப்பொலிவை கொடுத்துள்ளது. ஆனால், பழைய மாடலில் இருந்த அந்த ஈர்ப்பு குறைத்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஸ்விஃப்ட் பிராண்டு இந்த விஷயங்களை மறக்கடித்துவிடும்.

பக்கவாட்டு டிசைன்:

பக்கவாட்டு டிசைன்:

பக்கவாட்டில் பழைய மாடலுக்கும், புதிய மாடலுக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் இல்லை. பக்கவாட்டில் பெரிய மாற்றமாக சி பில்லர் கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டு இருப்பதை கூறலாம். பின்புற கதவில் கைப்பிடிகள் மறைத்திருப்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.

பின்புற டிசைன்:

பின்புற டிசைன்:

பின்புறத்தில் புதிய எல்இடி ஹெட்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் கேட் மற்றும் பம்பர் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், பழைய மாடலின் தாக்கம் அதிகம் இருப்பதை மறுக்க இயலாது.

இன்டீரியர்:

இன்டீரியர்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் இன்டீரியரில் அதிகம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், வட்ட வடிவ ஏசி வென்ட்டுகள், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை முக்கிய அம்சங்கள்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்:

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 7 அங்குல தொடுதிரை கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சப்போர்ட் செய்யும். இந்த சாதனத்தில் மிரர்லிங்க் வசதியும் உண்டு.

ஏசி கன்ட்ரோல் டயல்கள்:

ஏசி கன்ட்ரோல் டயல்கள்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்திற்கான கட்டுப்பாட்டு வசதி வட்ட வடிவிலான டயல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய சிறப்பம்சமாக இருக்கிறது.

முக்கிய தொழில்நுட்ப வசதிகள்:

முக்கிய தொழில்நுட்ப வசதிகள்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் ஸ்மார்ட் கீ, ஸ்டார்ட்- ஸ்டாப் வசதி, ஆட்டோ ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிமோட் கீலெஸ் என்ட்ரி ஆகியவை முக்கிய வசதிகள்.

பாதுகாப்பு வசதிகள்:

பாதுகாப்பு வசதிகள்:

இந்த காரில் முன்வரிசைக்கான இரண்டு ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், குழந்தைகளுக்கான இருக்கை பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கர் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கின்றன.

வண்ணங்கள்:

வண்ணங்கள்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் சிவப்பு, வெள்ளை, சில்வர், சாம்பல், நீலம் மற்றும் ஆரஞ்ச் என 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

முதன்மையான தேர்வு:

முதன்மையான தேர்வு:

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன், ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருப்பது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும்.

விலை விபரம்:

விலை விபரம்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

ஆட்டம் தொடரும்...

ஆட்டம் தொடரும்...

போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருப்பதால், வழக்கம்போல் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை மீண்டும் பெறும் என்று ஆணித்தரமாக கூறலாம்.

பெட்ரோல் விலை விபரம்!

பெட்ரோல் விலை விபரம்!

வேரியண்ட் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை
எல்எக்ஸ்ஐ ரூ.4.99 லட்சம்
விஎக்ஸ்ஐ ரூ.5.87 லட்சம்
விஎக்ஸ்ஐ (ஏஎம்டி) ரூ.6.34 லட்சம்
இசட்எக்ஸ்ஐ ரூ.6.49 லட்சம்
இசட்எக்ஸ்ஐ (ஏஎம்டி) ரூ.6.96 லட்சம்
இசட்எக்ஸ் ப்ளஸ் ரூ.7.39 லட்சம்
டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

வேரியண்ட் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை
எல்டிஐ ரூ.5.99 லட்சம்
விடிஐ ரூ.6.87 லட்சம்
விடிஐ (ஏஎம்டி) ரூ.7.34 லட்சம்
இசட்எக்ஸ்ஐ ரூ.7.49 லட்சம்
இசட்டிஐ (ஏஎம்டி) ரூ.7.96 லட்சம்
இசட்டிஐ ப்ளஸ் ரூ.8.29 லட்சம்

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்த்தபடியே புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 5ம் தலைமுறைக்கான பலேனோ கார் தயாரிக்கப்பட்ட அதே ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தான் 3ம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

ரூ. 11,000 தொடக்க விலையில் புதிய ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிய நாளிலிருந்தே வாடிக்கையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை இந்த கார் பெற்றிருந்தது.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் மாடல்கள் விற்பனையில் பலேனோ கார் முன்னிலை வகிக்கிறது. இந்திய சந்தையில் பலேனோ மற்றும் புதிய ஸ்விஃப்ட் மாடல் இரண்டும் சரிநிகர் போட்டியாக உருவாகலாம் என்பதே பலரது கணிப்பு.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

இந்நிலையில் பலேனோ மாடலின் வடிவமைப்பு, செயல்திறன், அம்சம், கட்டமைப்பு ஆகியவற்றுடன் புதிய ஸ்விஃப்ட் காரை தரம் எவ்வாறு உள்ளது என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

வெளிப்புற கட்டமைப்பு:

வெளிப்புற கட்டமைப்பு:

புதிய ஸ்விஃப்ட் காரின் வெளிப்புற கட்டமைப்பு முற்றிலும் புதிய அம்சங்களை பெற்றுள்ளது. அதன்படி புதிய எல்.இ.டி மற்றும் எல்.இ.டி பகல் நேர விளக்குகள் வெளிப்புற கட்டமைப்பில் உள்ளன.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

அவற்றுடன் புதிய க்ரில். 15 இஞ்ச் அலாய் சக்கரங்கள், புதிய டெயில் விளக்குகள், சி பில்லர் வடிவிலான கதவின் பிடிமானம் உட்பட பல்வேறு அம்சங்கள் புதிய ஸ்விஃப்ட் காரில் கவனமீர்க்கின்றன.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

ஒரு ஸ்போர்ட்டி தரத்தில் தோற்றமளிப்பதாக ஸ்விஃப்ட் கார் இருந்தாலும், பலேனோ மாடல் 3டி அடுக்கு கொண்ட முன்பக்க கிரில், அகலமான ஏர் டேம்ஸ், கிரோம் வடிவம் பெற்ற கதவு பிடிமானம் என ப்ரீமியம் தரத்தின் மொத்த உருவமாக உள்ளது.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

மேலும் இந்த காரின் வெளிப்புற கட்டமைப்பில் 15 இஞ்ச் அலாய் சக்கரங்கள், ஒருங்கிணைந்த பின்புற பகுதிக்கு தேவையான ஸ்பாய்லர் ஆகியவற்றை பலேனோ கார் பெற்றுள்ளது.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

3840மிமீ நீளம், 1735மிமீ அகலம், 1530மிமீ உயரம், 2450மிமீ வீல்பேஸ் மற்றும் 135 கிரவுண்டு கிளியரஸ் ஆகிய அளவீட்டில் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் தயாராகியுள்ளது. பலேனோ ப்ரீமியம் கார் 3995 மிமீ நீளம், 1510மிமீ அகலம், 1510மிமீ உயரம், 2520மிமீ வீல்பேஸ் மற்றும் 170மிமீ கிரவுன்டு கிளயரன்ஸ் ஆகிய அளவீடுகளை பெற்றுள்ளது.

எஞ்சின் செயல்பாடு:

எஞ்சின் செயல்பாடு:

தற்போதைய ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே செயல்திறன் தான் இந்த புதிய தலைமுறை காரிலும் உள்ளன. 1.2 லிட்டர் கே12 பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் ஆகிய எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் வெளிவருகிறது.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

இதன்மூலம் பெட்ரோல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 83 பிஎச்பி பவர் மற்றும் 140 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல டீசல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள பலேனோ மாடலும் இதே எஞ்சின் செயல்திறனையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கியர்பாக்ஸ்:

கியர்பாக்ஸ்:

புதிய ஸ்விஃப்ட் காரின் வேரியன்டுகள் அனைத்திலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்வ ழங்கப்பட்டுள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் சில குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

இதே டிரான்ஸ்மிஷன் தேவைகளில் தான் பலேனோ கார் வெளிவருகிறது. ஆனால் சிவிடி உடன் கூடிய கியர்பாக்ஸ் பலேனோவின் பெட்ரோல் வேரியன்டுகளில் மட்டும் உள்ளன.

தொழில்நுட்பம் & பாதுகாப்பு அம்சங்கள்:

தொழில்நுட்பம் & பாதுகாப்பு அம்சங்கள்:

புதிய ஸ்விஃப்ட் காரின் உள்கட்டமைப்பில் உள்ள 7 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 3 ஸ்போக் உடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

மேலும் பாதுகாப்பு தேவைகளுக்காக டூயல் ஏர்பேகுகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, பிரேக் அசிஸ்ட், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆகிய அம்சங்கள் புதிய ஸ்விஃப்ட் காரின் எல்லா வேரியன்டுகளிலும் உள்ளன.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

பலேனோ காரில் இடம்பெற்றுள்ள இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்பிளே, ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

அதேபோல ஆடியோ கட்டளைகளை கொண்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், கேமரா உடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை, டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் கூடிய ஏபிஎஸ் போன்ற அம்சங்களும் பலேனோ காரில் உள்ளன.

விலை

விலை

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

தற்போது விற்பனையில் உள்ள மாருதி பலேனோ கார் வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு ரூ. 5.35 லட்சம் முதல் ரூ. 8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விலை பெறுகிறது.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

புதிய ஸ்விஃப்ட் காரின் விலை எதிர்பார்த்தபடியான விலைக்குள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு 2018 ஸ்விஃப்ட் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

அதேபோல ப்ரீமியம் தர பலேனோ ஹேட்ச்பேக் கார் சிறந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ப்ரீமியம் ஹேட்ச்பேக் விரும்பிகள் பலேனோவை கடக்காமல் இருக்க முடியாது.

மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களை கணிக்கில் கொண்டு கார் வாங்க நீங்கள் விரும்பினால் ஸ்விஃப்ட் சிறந்த தேர்வாக இருக்கும். அதே சமயத்தில் பட்ஜெட் மற்றும் இடவசதியை வேண்டுபவர்களுக்கு பலேனோ சரியான தேர்வாக இருக்கும்.

Tamil
English summary
Auto Expo 2018: New Maruti Swift launched in India at Auto Expo 2018. Prices for the new Maruti Swift in India start at Rs 4.99 lakhs, ex-showroom (Delhi).
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more