புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

Written By:

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய மினி கன்ட்ரிமேன் கார் டிசைனில் பல மாற்றங்களுடன் வந்துள்ளது. ஹெட்லைட்டுகள் அளவில் சிறியதாகவும், டிசைன் மாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பகல்நேர விளக்குகள் ஆகியவை இந்த காரின் முக வசீகரத்தை கூட்டுகிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

முன்புறத்தை போலவே பின்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட் முக்கிய அம்சமாக கூறலாம். புதிய டெயில்லைட் அமைப்பும், கதவு அமைப்பும் மாற்றம் கண்டிருக்கின்றன.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

முந்தைய மாடலைவிட புதிய மினி கன்ட்ரிமேன் காரின் உட்புற இடவசதி வெகுவாக அதிகரித்துள்ளது. ஆம்பியன் லைட் சிஸ்டம்,க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரிமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இரண்டு பெட்ரோல் மாடல்கள் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் 135 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், 191 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கும்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. புதிய மினி கன்ட்ரிமேன் கார் கூப்பர் எஸ், கூப்பர் எஸ் ஜேஎஸ்டபிள்யூ மற்றும் கூப்பர் எஸ்டி ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதேநேரத்தில், விரைவிலேயே இந்த காருக்கு முன்பதிவு துவங்குவதற்கு மினி கார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் இடையிலான விலையில் இந்த புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்... #மினி #mini #auto expo 2018
English summary
New Mini Countryman unveiled in India at the Auto Expo 2018. The new Mini Countryman will be a 'Made-in-India' product from the company to keep the cost low.
Story first published: Wednesday, February 7, 2018, 21:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark