டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

Written By:

2018 டொயோட்டா கேம்ரி காரின் ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடலின் வெளிப்புற டிசைனில் மாற்றங்கள் இல்லை. பழைய மாடலில் இருந்த அதே க்ரில் அமைப்பு, வட்ட வடிவ பனி விளக்குள், எல்இடி பகல்நேர விளக்குகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்ததப்பட்டு இருக்கின்றன. டெயில் லைட் ஹவுசிங்கை சுற்றிலும் க்ரோம் பீடிங் பொருத்தப்பட்டு இருப்பது கவர்ச்சியை அளிக்கிறது. எனினும், வெளிப்புறத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான மாற்றங்கள் இல்லை.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

உட்புறத்தில் டேன் என்ற விசேஷ வண்ணத்திலான அப்ஹோல்ஸ்ட்ரி இடம்பெற்றிருக்கிறது. இது காரின் மதிப்பை உயர்த்தும் விஷயமாக கூறலாாம். மர அலங்கார தகடுகள் டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் உள்ளது.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டொயோட்டா கேம்ரி காரில் மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. விண்ட்ஷீல்டு திரையில் காரின் வேகம் உள்ளிட்டவற்றை காட்டும் ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே வசதி, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சாய்மான வசதி கொண்ட இருக்கைகள் போன்றவை முக்கிய அம்சங்கள்.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 159 பிஎச்பி பவரையும், 213 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, 142 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மின் மோட்டார் உள்ளது.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

2018 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடலில் 9 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்டட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் பிரேக் சிஸ்டம் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் ரூ.37.22 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹைப்ரிட் கார்களுக்கு சிறப்பு சலுகை திட்டங்கள் இல்லாததால், விலை மிக அதிகமாக நிர்ணயிக்கும் சூழல் நிலவுகிறது.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2018 Toyota Camry Hybrid launched in India. Toyota has introduced the new 2018 Camry Hybrid in India with a price tag of Rs 37.22 lakh ex-showroom (Delhi). The new 2018 Camry Hybrid gets updated interior and additional features.
Story first published: Tuesday, April 10, 2018, 13:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark