ஓலாவிற்கு ஓசியில் ஏசி கார் வழங்கும் டாடா ; உபேர் உர்ர்ர்....

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை கேப் பயன்பாட்டிற்காக களம் இறக்க தயாராகி வரும் நிலையில் டாடா நிறுவனம் ஓலா விற்கு இலவசாக கார்களை கொடுத்து அந்த கார்கள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் பங்கு போட திட்டம்

By Balasubramanian

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை கேப் பயன்பாட்டிற்காக களம் இறக்க தயாராகி வரும் நிலையில் டாடா நிறுவனம் ஓலா விற்கு இலவசாக கார்களை கொடுத்து அந்த கார்கள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் பங்கை எடுத்துகொள்ள முயற்சி செய்து வருகிறது. இது குறித்து இரு நிறுவனங்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

இந்தியாவில் மிகப்பெரிய கேப் நிறுவனமாக விளங்கும் ஓலா நிறுவனம் தங்களது கேப்களில் எலெக்ட்ரிக் கார்களை புகுத்த திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசின் அறுவுரை மற்றும் சலுகையாலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முதலில் நாக்பூரில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பபட்டது.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

நாக்பூரில் எலெக்ட்ரிக் கார்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகாவிட்டாலும் மிக மோசமான நிலையில் இல்லாமல் ஒரளவிற்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களை இயங்குவதில் உள்ள சவால்களை ஓரளவிற்கு ஓலா நிறுவனம் பெற்றுள்ளது.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

தற்போது மக்கள் அளித்த வரவேற்பிற்கான காரணத்தையும், சில மக்கள் ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் ஓலா நிறுவனம் தற்போது சர்வே எடுத்து வருகிறது. தற்போது அந்த அனுபவத்தை வைத்து இந்தியா முழவதும 10 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை கேப்பிற்காக களம் இறக்க தயாராகி வருகிறது.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

இத்திட்டத்தை வரும் 2021ம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்த 10 லட்சம் என்பது கார்கள் மற்றும் இல்லாமல் மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என எல்லா வகையான வாகனங்களையும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

இதற்காக அந்நிறுவனம், நிஸான், ஃபோர்டு, பிஒய்டி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹேந்திரா ஆகிய நிறுவங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஓலா நிறுவனத்திற்கு இலவசமாக எலெக்ட்ரிக் கார்களை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறது.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

ஏன் என்றால் டாடா நிறுவனம் இந்தியா முழுவதும் டாடா பவர் என்ற பெயரில் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதை வைத்து ஓலா நிறுவனங்களுக்கு தாங்கள் விடும் கார்களை அங்கே சார்ஜ் செய்து இயக்க எல்லா வசதிகளையும் செய்ய அந்நிறுவனம் தயாராகவுள்ள இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவன சிஇஓவாக உள்ள ஆன்ந்த மஹிந்திரா என்பவர் தாங்கள் தயாரிக்கும் கார்களை தனித்தனியாக விற்பதை விட மொத்தமாக கேப் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஓசியில் ஏசி கார் வாங்கும் ஓலா

விரைவில் இந்தியாவில் பல்வேறு பகுதியில் வரும் காலங்களில்அதிகஅளவிற்கு எலெக்ட்ரிக் கார்களை பார்க்க முடியும். தற்போது கேப் குறித்து வரும் செய்திகள் எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கும் செய்திகளில் அடிக்கடி ஓலா நிறுவனம் தான் அடிபடுகிறது. அந்நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் உபேர் நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது?.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Ola plans to put 1 million electric taxis on Indian roads: Details. Read in Tamil
Story first published: Saturday, June 16, 2018, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X