2018 ஸ்விஃப்ட் தெறிக்கவிட வருகிறது பீஜோ 208 கார்... தற்போது தீவிர சோதனையில்..!!

Written By:

ஃபிரான்ஸின் பீஜோ நிறுவனம் இந்தியாவில் அடுத்த வருடம் கால்பதிக்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக கார்களை தயாரிக்க அது சிகே பிர்லா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

அதன்படி, இந்தியாவின் பீஜோ வெளியிடும் கார் 208 ஹேட்ச்பேக் மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த காருக்கான சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியிருப்பதாக டீம்-பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark
2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

ஒன்று இரண்டு இல்ல, பல கார்களை பீஜோ நிறுவனம் இந்தியாவில் சோதனை செய்து வருவதாக டீம் பிஎச்பி இணையதளம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

பூனே நகர ஆர்.டி.ஓ எண்களை பெற்றிருந்த அந்த கார்கள், பிசிஏ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பூனே அருகில் பீஜோ நிறுவனம் விரைவில் அதற்கான கார் தயாரிப்பு ஆலையை கட்டமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

பீஜோவின் 208 மாடல் கார்கள் பல முறை இந்திய சாலைகளில் தரிசனம் தந்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் தற்காலிக பதிவு எண் பலகைகள் அவற்றில் பொருத்தப்பட்டு இருந்தன.

Trending On Drivespark Tamil:

தொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு..?? விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..!!

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

208 மாடல் ஒரு என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலாகும். இது ஸ்போர்டியான அதேசமயத்தில் நவீன் கட்டமைப்புகளை வடிவமைப்பில் பெற்றுள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

முன்பக்கத்தில் இருந்து பக்கவாட்டில் வளையும் ஸ்வெப்டேக் முகப்பு விளக்குகள், ப்ரொஜெக்டர் விளக்குகள், கிரோம் சுற்றுப்புறத்தை பெற்ற தடிமனான பெரிய கிரில்,

கிரோம் ஹவுசிங் பெற்ற வட்ட வடிவிலான ஃபாக் விளக்குகள் மற்றும் மூர்க்கமான வடிவம் பெற்ற பம்பர் என 208 மாடல் காரின் முன்பக்கம் நம்மை வசீகரிக்கிறது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

காரின் உள்கட்டமைப்பு முற்றிலும் கருப்பு நிறத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீல், தொடுதிரை திறன் பெற்ற இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், கிரோம் ஏக்சென்டுடன் கூடிய ஏசி வென்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

இவை எல்லாவற்றையும் விட காரின் டாஷ் ஃபோர்டு மிக எளிமையாகவும் அதேசமயத்தில் திருத்தமான வடிவமைப்புகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

டீம் பிஎச்பி தளத்தின் புகைப்படங்களில் இடம்பெற்றிருந்த கார், 208 மாடலின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் என தெரியவந்துள்ளது. இந்த ஹேட்ச்பேக் காரில் பல தொழில்நுட்ப அம்சங்களை பெற்ற கார் கண்ணாடி, மின்சாரத்தால் இயங்கும் ஒஆர்விஎம் உள்ளன.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

பல வித அம்சங்கள் இருந்த போதிலும் பீஜோ 208 காரில் எஞ்சினை இயக்குவதற்கான ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் இல்லை. இது ஒரு குறைபாடாக தெரிய வாய்ப்புள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

பாதுகாப்பு அம்சங்களில் பீஜோவின் 208 டாப்-ஸ்பெக் வேரியன்டில் முன்பக்க டிஸ்க் பிரேக் உள்ளது. மேலும் காரின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டில் டூயல் ஏர்பேகுகள் வழங்கப்பட்டுள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

சோதனையின் போது கண்ணில் பட்ட கார்களின் பதிவு எண்களை ஆராய்ந்த போது, அவை அனைத்தும் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களாக உள்ளது. ஆனால் அவற்றின் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் கிடைக்கவில்லை.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

இந்தியாவில் வெளிவரும் 208 காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் 80 பிஎச்பி பவர் அதிகப்பட்சமாக கிடைக்கும். பெட்ரோல் மாடலாக மட்டுமில்லாமல், இந்த கார் டீசல் தேர்விலும் வெளிவரவுள்ளது.

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

2019ல் கால்பதிக்கும் பீஜோவின் 208 கார், இந்தியாவில் பல நாட்களாகவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கார்களை பூனே நகர ஆர்.டி.ஓ-வில் பீஜோ நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இதன்மூலம் விரைவில் பீஜோ இந்தியாவில் இருந்து கார்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பது நமக்கு தெரியவருகிறது.

Trending On Drivespark Tamil:

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை அமையும் பகுதி இதுதான்..!!

2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..!!

2018 ஸ்விஃப்ட் மாடலை தெறிக்கவிட களமிறங்கும் புதிய பீஜோ 208 கார்..!!

மாருதியின் 2018 ஸ்விஃப்ட் காருக்கு சரியான போட்டியாக பார்க்கப்படும் பீஜோ 208 கார், மிகவும் நவீனமாகவும் மற்றும் ஸ்போர்ட்டி தரத்திலும் தயாராகியுள்ளது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #பீஜோ #peugeot
English summary
Read in Tamil: Peugeot’s Maruti Swift Rival Spotted Testing In India. Click for Details...
Story first published: Saturday, January 6, 2018, 9:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark