இந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..!!

இந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..!!

By Azhagar

Recommended Video

Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

2019ல் ஃபிரான்ஸ் வாகன தயாரிப்பு நிறுவனமான பீஜோ புதிய ரக ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடல்களை அறிமுகப்படுத்தி இந்தியாவில் கால்பதிக்கிறது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!!

பீஜோ உட்பட சிட்ரோன், ஓபெல் மற்றும் டிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு பிஎஸ்ஏ குழுமம் தான் தலைமை நிறுவனமாக உள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!!

பிஎஸ்ஏ குழுமம் 2017 பிப்ரவரியில் ரூ. 80 கோடி மதிப்பில் பழைய மாடல் கார்களில் புகழ்பெற்ற அம்பாஸிடர் பிராண்டில் பங்குதாரார் ஆகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!!

அம்பாஸிடம் பிராண்டில் 50 சதவீத பங்குகளை பிஎஸ்ஏ கைப்பற்றியுள்ள அதே சமயத்தில் மீத 50 சதவீத பங்குகளை சி.கே. பிர்லா குழுமம் வைத்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!!

ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பீஜோ இன்னும் இந்தியாவில் பிரபலமாகவில்லை என்பதால், அம்பாஸிடரை மீட்டுருவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

Trending On Drivespark Tamil:

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!!

ஆனால் இதுபற்றி பீஜோ அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை. என்றாலும், அம்பாஸிடர் என்ற பிராண்டை பல கோடி மதிப்பில் அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!!

இதனால் 'அம்பாஸிடர்' என்ற பெயரில், விரைவில் ஏதோ ஒரு வாகனத்தை பீஜோ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்பது மட்டும் உறுதி.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து வெளியிட பீஜோ நிறுவனம் சிகே பிர்லா நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது.

இது தயாரிக்கும் கார்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் உருவாக்கப்படும்.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

இந்திய சாலைகளுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்கவும், விற்பனை செய்யவும் மற்றும் கார்களில் பொருதப்படவுள்ள எஞ்சின் தொழில்நுட்பங்கள் என பல்வேறு கட்ட பணிகளுக்கு பீஜோ ஏற்கனவே ரூ.700 கோடியை முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

ஹிந்துஸ்தான் ஆலையில் முதலில் 2 லட்சம் வாகனங்கள் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்படும். பிறகு வாடிக்கையாளர்களின் தேவையை கருதி வாகன தயாரிப்பின் எண்ணிக்கை படிபடியாக உயர்த்தப்படும்.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

2019ம் ஆண்டில் பீஜோ இந்தியாவில் கார் தயாரிக்கும் பணிகளை தொடங்குகிறது. கார் தயாரிப்பு மட்டுமின்றி, காருக்கான கியர்பாக்ஸ் உற்பத்தியையும் பீஜோ இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

2019ல் கால்பதிக்கும் பீஜோவின் 208 கார், இந்தியாவில் பல நாட்களாகவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கார்களை பூனே நகர ஆர்.டி.ஓ-வில் பீஜோ நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

மாருதியின் 2018 ஸ்விஃப்ட் காருக்கு சரியான போட்டியாக பார்க்கப்படும் பீஜோ 208 கார், மிகவும் நவீனமாகவும் மற்றும் ஸ்போர்ட்டி தரத்திலும் தயாராகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

இதுதவிர மிட்-சைஸிடு செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடல்களும் இந்திய சந்தைக்காக பீஜோ உருவாக்கி வருகிறது.

பல கார்களை ஒரே ஆண்டில் வெளியிடுவதை காட்டிலும், புதிய தயாரிப்புகளை சரியான தேவைகளில் வெளியிடுவது சிறந்தது என பீஜோ கருதுகிறது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

1960-கள் தொடங்கி 1970-கள் வரை இந்தியாவில் அம்பாஸிடர் கார்கள் பெரிய ஆடம்பர பொருளாக பார்க்கப்பட்டது. மேலும் காரின் தரம் மற்றும் பயன்பாட்டால் இந்தியளவில் பல வாடிக்கையாளர்களை அம்பாஸிடர் தனதாக்கிக்கொண்டது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

நம் நாட்டின் பல்வேறு சாலைகளில் இன்றும் அம்பாஸிடர் கார்களை பார்க்கலாம். தற்போது அதை மீட்டுவாக்கம் செய்யும் பணிகளில் பீஜோ இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சியடையும் அம்பாஸிடர் கார்..!

இந்தியாவின் அதிகப்படியான வரவேற்பு பெற்ற மாடலாகவும், பல கார் ஆர்வலர்களின் மனதில் தனியிடம் பிடித்த வாகனமாகவுள்ள உள்ள ஆம்பாஸிடர் மீண்டும் தயாரிக்கப்படும் செய்தி பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Trending On Drivespark Tamil:

Most Read Articles
மேலும்... #பீஜோ #peugeot
English summary
Read in Tamil: Peugeot Considering Revival Of Ambassador Brand In India. Click for Details....
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X