விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே சி செக்மெண்ட் கிராஸ்ஓவர் காரை வடிவமைத்துவருவது குறித்து செய்து வெளியிட்டிருந்தோம் நடக்கவுள்ள மாஸ்கோ சர்வதேச மோட்டார் ஷோவில் அந்த காரை அறிமுகப்படுத்த ரெனால்ட் நிறுவனம் முட

By Balasubramanian

ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே சி செக்மெண்ட் கிராஸ்ஓவர் காரை வடிவமைத்துவருவது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம் நடக்கவுள்ள மாஸ்கோ சர்வதேச மோட்டார் ஷோவில் அந்த காரை அறிமுகப்படுத்த ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

அதற்கான டீசர் போட்டோவை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அந்த காருக்கு அர்கனா என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

அர்கனா என்ற பெயர் அர்கனம் என்ற லத்தின் சொல்லில் இருந்து திரிபு செய்யப்பட்டது. இந்த சொல்லுக்கு ரகசியம் என்று அர்த்தம். ரெனால்ட் நிறுவனம் ரஷ்ய சந்தைக்காக இந்த காரை தயாரித்தாலும் இதை குளோபல் மாடலாகவே வெளியிடுகிறது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

முதற்கட்டமாக ரஷ்யாவில் இந்த காரின் விற்பனையை துவங்க உள்ள ரெனால்ட் நிறுவனம் விரைவில் மற்ற நாடுகளுக்கும் இதை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கும் இந்த காரின் வருகையை விரைவில் எதிர்பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

ரெனால்ட் நிறுவனம் தற்போது இந்த காரின் டிசைன் குறித்த எந்த தகவலையும் வெளியிட வில்லை. எனினும் தற்போது வெளியிட்டுள்ள டீசர் படத்தை பார்க்கும்போது ரெனால்ட் நிறுவனத்தின் கப்டூர் காரின் அடிப்படையாக கொண்டு இந்த கார் டிசைன் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

இந்தவாரம் ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடக்கவுள்ள கார் ஷோவில் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் காட்சி படுத்தவுள்ளது. இதில் காரை மட்டும் காட்ட முடிவு செய்துள்ளது. விற்பனைக்கு வரும் மாடலில் கார் ஷோவில் காட்டப்படும் மாடலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

இந்த காரை அந்நிறுவனம் மாஸ்கோவில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரிக்கிறது. இந்த காரில் வலதுபுறம் டிரைவ் உள்ள மார்கெட்டிற்கும் ஏற்றபடி அந்நிறுவனம் டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பு செலவை குறிக்க அந்நிவனம் சிஎம்எப்-பி என்ற தளத்தில் இந்த காரை தயாரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

ரெலான்ட் நிறுவனம் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தும் முதல் கிராஸ் ஓவர் கார். இந்த காரின் டிசைனில் , எல்இடி ஹெட்லைட், வித்தியாமான பம்பர், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள டீசர் போட்டோவில் ஸ்பாயிலர் லிப் மற்றும் எல்இடி டெயில் லைட் அமைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது ரெனால்ட் அர்கானா… இந்தியாவிற்கு எப்பொழுது?

மாஸ்கோவில் வரும் 29ம் தேதி நடக்கும் கார் ஷோவில் இந்த கார் குறித்த முழு தகவல்கள் வெளியாகும். இந்த கார் குறித்த முழு தகவல்களை பெற டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்ததுடன் இணைந்திருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Arkana Crossover Teased Ahead Of Global Debut. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X