புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

Written By:

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்புக்கான காரணம் மற்றும் புதிய விலைப் பட்டியலை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மிகச் சிறப்பான தேர்வுகளில் ஒன்று ரெனோ டஸ்ட்டர். ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட புதிய எஸ்யூவி மாடல்களின் வரவால் ரெனோ டஸ்ட்டருக்கு தொடர்ந்து நெருக்கடி நீடித்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை விட மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் விதத்தில் டஸ்ட்டரின் விலை அதிரடியாக குறைத்துள்ளது ரெனோ கார் நிறுவனம்.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கான உள்நாட்டு உதிரிபாகங்கள் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக விளைந்த பணப் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

இதன் மூலமாக, தற்போது ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.7.95 லட்சம் விலையில் இருந்து அதிகபட்ச வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட் ரூ.12.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இனி கிடைக்கும்.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையின் மூலமாக புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.55,925 முதல் ரூ.1,00,761 வரை குறைந்துள்ளது.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

ரெனோ டஸ்ட்டர் புதிய விலைப்பட்டியல்

வேரியண்ட் பழைய விலை புதிய விலை விலை வித்தியாசம்
RXE பெட்ரோல் ரூ.8,50,925 ரூ.7,95,000 ரூ.55,925
RXL பெட்ரோல் ரூ.9,30,816 ரூ.8,79,000 ரூ.51,816
RXS பெட்ரோல் (CVT) ரூ.10,24,746 ரூ.9,95,000 ரூ.29,746
STD 85 PS டீசல் ரூ.9,45,663 ரூ.8,95,000 ரூ.50,663
RXE 85 PS டீசல் ரூ.9,65,560 ரூ.9,09,000 ரூ.56,560
RZS 85 PS டீசல் ரூ.10,74,034 ரூ.9,95,000 ரூ.79,034
RXZ 85 PS டீசல் ரூ.11,65,237 ரூ.10,89,000 ரூ.76,237
RXZ 110 PS டீசல் ரூ.12,49,976 ரூ.11,79,000 ரூ.70,976
RXZ 110 PS AMT டீசல் ரூ.13,09,970 ரூ.12,33,000 ரூ.76,970
RXZ 110 PS AWD டீசல் ரூ.13,79,761 ரூ.12,79,000 ரூ.1,00,761

*அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை (டெல்லி)

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதே டீசல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மற்றொரு ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 108 பிஎச்பி பவரை அளிக்கும் மாடலானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

 புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனையில் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இந்த சூழலில், ரெனோ டஸ்ட்டர் மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ரெனோ தீவிரம் காட்டி வருகிறது.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault India has reduced the price of its Duster compact SUV in India. The price cut has been made owing to the increased localisation.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark