TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
கிராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ க்விட் கார்!!
கிராஷ் டெஸ்ட்டில் ரெனோ க்விட் கார் பூஜ்ய தர மதிப்பீடு பெற்றிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. படங்கள், வீடியோ, கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
காரின் கட்டுமான வலிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வதற்காக கிராஷ் டெஸ்ட் சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்தோனேஷியாவில் விற்பனையாகும் ரெனோ க்விட் காரை ஆசிய என்சிஏபி அமைப்பு அண்மையில் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது.
இந்த கிராஷ் டெஸ்ட் சோதனையில் ரெனோ க்விட் கார் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் இந்த கார் அதிகபட்சமான 36 புள்ளிகளுக்கு வெறும் 10.12 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
இதேபோன்று, சிறுவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் அதிகபட்சமான 49 புள்ளிகளுக்கு வெறும் 14.56 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி, 24.68 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதன்படி, கிராஷ் டெஸ்ட் சோதனையில் வழங்கப்படும் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டில் ஒரு நட்சத்திர மதிப்பீட்டை கூட பெற முடியாமல் பூஜ்யத்தை பெற்றிருக்கிறது.
குறிப்பாக, பாதுகாப்பு வசதிகளில் பூஜ்ய மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் மட்டுமே ரெனோ க்விட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏபிஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட்பெல்ட் ரீமைன்டர் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பதால் பூஜ்ய மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டும் இதேபோன்று குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டிலும் ரெனோ கார் பூஜ்ய மதிப்பீட்டை பெற்றது. அதன்பிறகு 2016ம் ஆண்டு செப்டம்பரில் ஓட்டுனருக்கான ஏர்பேக் சேர்க்கப்பட்டு மீண்டும் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் ஒரு நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது.
எனினும், 2017ம் ஆண்டு பிரேசிலில் விற்பனையாகும் ரெனோ க்விட் காரை லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆசிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்டில் பூஜ்யத்தை பெற்றிருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் ரெனோ க்விட் காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக் மற்றும் சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர் மற்றும் லோடு லிமிட்டர் பாதுகாப்பு வசதிகளானது டாப் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, இந்திய மாடலை கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தினால், என்ன முடிவு வரும் என்பது அனுமானிக்க கூடிய விஷயமாகவே இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் மனம் கவர்ந்த மாடலாக விளங்கும் ரெனோ க்விட் காரில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்பதே இப்போது இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த ஆண்டு புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், நிச்சயம் இந்திய மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
Source:ASEAN NCAP