விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

By Saravana Rajan

வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ க்விட் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களையும், ஸ்பை படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

மூன்று ஆண்டுகளுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கார் இந்தியாவின் சூப்பர் ஹிட் மாடல்கள் வரிசையில் சேர்ந்தது. சிறப்பான வடிவமைப்பு, வசதிகள், பட்ஜெட் விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாகவும், மன நிறைவான மாடலாகவும் மாறியது.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைக்கும் விதமாக, ரெனோ க்விட் காரில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. 2019 மாடலாக வர இருக்கும் ரெனோ க்விட் கார் அண்மையில் ஐரோப்பாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

இதனிடையே, இடைக்கால நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், தற்போது சென்னையில் உள்ள ரெனோ கார் ஆலையில், டீலர்களுக்கு அனுப்புவதற்கான தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

எனவே, வரும் பண்டிகை காலத்தில் புதிய ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. தோற்றத்தில் பெரிய அளவிலான மாறுதல்கள் எதுவும் இல்லை. ஆனால், சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பில் க்ரோம் சட்டத்துடன் கூடிய க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. பம்பர் டிசைனிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

புதிய ரெனோ க்விட் காரில் முக்கிய அம்சமாக, பின்புறத்தில் ரெனோ லோகோவிற்கு நடுவில் ரியர் வியூ கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. இது தனியாக தெரியாத அளவுக்கு மிகச் சிறப்பாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

உட்புறத்தில் புதிய இன்டீரியர் வண்ணக் கலவையும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. உட்புறத்திலிருந்து கதவை திறப்பதற்கான பிடிகள் க்ரோம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின் இருக்கை பயணிகளுக்கு வசதியாக 12 வோல்ட் மொபைல்சார்ஜர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய ரெனோ க்விட் கார் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் தொடர்ந்து கிடைக்கும். 800சிசி எஞ்சின் அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.0 லிட்டர் எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!

போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில், ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கிறது. புதிய மாடலுக்கான விலை சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படும். சந்தைப் போட்டியை சமாளிக்க இந்த புதிய மாடல் அவசியமானதாகவே கருதப்படுகிறது.

Source: Motoroctane

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Facelift Launch Details.
Story first published: Wednesday, July 18, 2018, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X