ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

Written By:

ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

குறைந்த பட்ஜெட் மார்க்கெட்டில் ரெனோ க்விட் கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. இதுவரை 2.2 லட்சம் ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாருதி ஆல்ட்டோ காருக்கு இருக்கும் அளவுக்கு நம்பகத்தன்மையை வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை ரெனோ அறிவித்து வருகிறது.

ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

எனவே, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கும் திட்டத்தை ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

இதன்படி, முதல் இரண்டு ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வரைக்குமான ஸ்டான்டர்டு வாரண்டி திட்டத்தையும், தொடர்ந்து அடுத்த 50,000 கிமீ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தையும் அறிவித்துள்ளது.

ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

இந்த ரக கார்களில் முதலாவது மாடலாக அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வாரண்டி திட்டத்துடன் வரும் முதல் மாடலாக ரெனோ க்விட் கார் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

இந்த வாரண்டி திட்டம் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல்களுக்கு பொருந்தும். இந்த வாரண்டி திட்டத்துடன் சாலை அவசர உதவி திட்டத்தையும் ரெனோ கார் நிறுவனம் வழங்குகிறது.

ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

மாருதிக்கு இணையான விற்பனைக்கு பிந்தைய சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை ரெனோ எடுத்து வருகிறது. ரெனோ செக்யூர், ரெனோ அசிஸ்ட், ஒர்க்ஷாப் ஆன் வீல்ஸ் போன்ற சிறப்பு சர்வீஸ் திட்டங்களுக்கு அடுத்து தற்போது அதிகபட்ச வாரண்டி திட்டத்தை ரெனோ அறிவித்துள்ளது.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault India has announced that the Kwid will be available with a category first warranty of four years or up to 1,00,000km (whichever occurs first) and Roadside assistance.
Story first published: Tuesday, April 10, 2018, 19:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark