ஸ்டீயரிங்கில் கோளாறு: ரெனோ க்விட் கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

Written By:

வாடிக்கையாளர் மத்தியில் அதிக விருப்பத்தையும், வரவேற்பையும் பெற்ற ரெனோ க்விட் காரின் 800சிசி மாடலில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட் 800சிசி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

ரெனோ க்விட் காரின் 800சிசி மாடலின் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளருக்கு அனுப்பட்டு இருக்கும் கடித ஆதாரத்துடன், டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் 800சிசி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

பிரச்னை இருப்பதாக கருதப்படும் க்விட் கார் உரிமையாளர்களுக்கு கடிதம் மூலமாக ரெனோ நிறுவனம் தகவல் அளித்து, டீலரில் பரிசோதனைக்கான நேரத்தை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டி இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Nissan GT-R Crashes On Bangalore-Hyderabad Highway; Left Severely Damaged
ரெனோ க்விட் 800சிசி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

பிரச்னை இருப்பதாக கருதப்படும் கார் உரிமையாளர்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ரெனோ டீலரை தொடர்பு கொண்டு தங்களது க்விட் காரை பரிசோதித்து கொள்ளலாம்.

ரெனோ க்விட் 800சிசி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

பிரச்னை இருக்கும் கார்களில் தொழில்நுட்பக் கோளாறு முற்றிலும் சரிசெய்து பின்னர் வாடிக்கையாளரிடம் தரப்படும். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

ரெனோ க்விட் 800சிசி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் 800சிசி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

மாருதி ஆல்ட்டோ காருக்கு அடுத்து விற்பனையில் சிறந்த தேர்வாக ரெனோ க்விட் கார் மாறி இருக்கிறது. எஸ்யூவி கார் போன்ற தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகள், பட்ஜெட் விலை போன்றவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது.

ரெனோ க்விட் 800சிசி கார் திரும்ப அழைக்கப்படுகிறது!

இந்த நிலையில், இந்த காரின் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக வெளியான தகவல் வாடிக்கையாளர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault India has voluntarily recalled its best-selling Kwid in India reportedly to fix the steering rack of the hatchback.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark