ரெனோ க்விட் காரின் சூப்பர்ஹீரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

Written By:

ரெனோ க்விட் காரின் சூப்பர்ஹீரோ எடிசன் என்ற சிறப்பு பதிப்பு மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட் காரின் சூப்பர்ஹீரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

சூப்பர்ஹீரோ கதையம்சம் கொண்ட கேப்டன் அமெரிக்கா மற்றும் அயன் மேன் ஆகிய ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் விதத்தில் இந்த மாடல்கள் வந்துள்ளன. இதற்காக மார்வெல் நிறுவனத்தின் உடன்படிக்கையுடன் இந்த ஸ்பெஷல் மாடல்களை களமிறக்கி இருக்கிறது.

ரெனோ க்விட் அயன் மேன் எடிசன்:

ரெனோ க்விட் அயன் மேன் எடிசன்:

அயன் மேன் திரைப்படத்தை பிரதிபலிக்கும் பாடி டீக்கெல் மற்றும் பானட், ரியர் வியூ மிரர் மற்றும் பம்பர் ஆகியவற்றில் சிவப்பு, தங்க வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் காரின் சூப்பர்ஹீரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீலில் சிவப்பு வண்ண தகடு மற்றும் தையல்களுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் கருப்பு மற்றும் தங்க வண்ணத்திலான கியர் லிவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
ரெனோ க்விட் காரின் சூப்பர்ஹீரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

பின்புற கதவில் விசேஷ ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்ககிறது. புதிய வீல் கவர்கள் மற்றும் சிறப்பம்சங்கள் இந்த காருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது.

ரெனோ க்விட் கேப்டன் அமெரிக்கா எடிசன்:

ரெனோ க்விட் கேப்டன் அமெரிக்கா எடிசன்:

புதிய ரெனோ க்விட் கேப்டன் அமெரிக்கா எடிசனில், திரைப்படத்தின் சூப்பர்ஹீரோவின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் வகையில், பாடி டீக்கெல் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரியர் வியூ மிரரில் சிவப்பு- வெள்ளை ஸ்டிக்கருடன் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் காரின் சூப்பர்ஹீரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்டீயரிங் வீலில் நீல வண்ண தகடு மற்றும் சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் சிவப்பு - கருப்பு வண்ணக் கலவையிலான கியர் லிவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் காரின் சூப்பர்ஹீரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டைட்டானியம் பிளாக் இன்டீரியர் இந்த காரை மிகவும் பிரிமியமாக மாற்றிக் காட்டுகிறது. கம்பீரமான தோற்றத்தை தரும் புதிய வீல் கவர்கள் மற்றும் விசேஷ பேட்ஜ் ஆகியவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்கள்.

எஞ்சின்:

எஞ்சின்:

ரெனோ க்விட் காரின் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் மாடல்களிலும், மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்து கொள்ள முடியும்.

விலை விபரம்:

விலை விபரம்:

புதிய ரெனோ க்விட் சூப்பர்ஹீரோ எடிசன் கார் ரூ.4.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரெனோ க்விட் காரின் ஆர்எக்ஸ்டி டாப் வேரியண்ட்டை விட இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.29,990 ரூபாய் கூடுதல் விலையில் வந்துள்ளது.

முன்பதிவு:

முன்பதிவு:

ரெனோ க்விட் சூப்பர்ஹீரோ எடிசன் மாடல்களுக்கு இன்றுமுதல் அமேஸான் தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.9,999 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault has launched the Kwid Superhero editions in India at a starting price of ₹ 4.34 Lakh (ex-showroom, Delhi).
Story first published: Monday, February 5, 2018, 15:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark