ஆட்டோ எக்ஸ்போ 2018: ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் காட்சிக்கு அறிமுகம்..!!

Written By:

2016 பாரீஸ் மோட்டார் ஷோவில் முதன்முதலாக ரெனால்ட் நிறுவனம் ட்ரசோர் என்ற புதிய கான்செப்ட் காரை அறிமுகம் செய்தது.

உலக கவனத்தை ஈர்த்த இந்த காரை தற்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளது ரெனோ.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

ட்ரசோர் என்றால் ஃபிரெஞ்சு மொழியில் புதையல் என்று அர்த்தம். ஆம் இந்த கார் ரெனோ நிறுவனத்திற்கான ஒரு புதையல் தான். பணத்தை கொட்டும் புதையல்.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

இந்தாண்டு அக்டோபரில் நடக்கவுள்ள பாரீஸ் மோட்டார் கண்காட்சியில் இந்த கான்செப்ட்டின் இறுதி வடிவத்தை ரெனோ வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ட்ரசோர் காரை ரெனோ நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளரான லாரன்ஸ் வான் டென் அக்கர் வெளியிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு முதல் ரெனோ தயாரித்து வெளியிட்டுள்ள பெரும்பாலான கார்களுக்கு இவர் தான் டிசைனிங் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

ட்ரசோர் காரின் முன்பக்கத்தில் ஆங்கில எழுத்தான சி வடிவத்தில் முகப்பு விளக்குகள் உள்ளது. அதை சுற்றி பெரியளவிலான காற்றை உள்ளிழுக்கும் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

காரின் முகப்பு விளக்குகளை இணைக்கும் விதமாக ஸ்லிம்கிரோம் க்ரில் பெரியளவிலான ரெனோ நிறுவன இலச்சினையுடன் முன்பக்கத்தில் மத்திய பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

காரின் பக்கவாட்டிலிருந்து அளவீடு செய்தால், ட்ரோசரின் உயரம் 1080 மிமீ. இதற்கு 20 இஞ்ச் அளவுகொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் மொத்த உள்கட்டமைப்பையும் தெரியும் விதமாக காரின் ரூஃப் செயல்பாடு உள்ளது.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

மல்டிபிளை டிஸ்பிளேக்கள் பெற்றுள்ளதாக ட்ரசோரின் காரின் உள்கட்டமைப்புகளை ரெனோ உருவாக்கியுள்ளது. இதனுடைய அனைத்து கட்டளைகளும் ஸ்டீயரிங் வீலில் இடம்பெற்றுள்ளது.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

ட்ரசோர் கார் தானாக இயங்கும் திறன் பெற்றது. அதற்கான டிரைவிங் மோடும் இதில் வழங்கப்பட்டுள்ளன. படம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களில் பயணி அல்லது ஓட்டுநர் லயத்து இருக்கும் போது இந்த தானியங்கி டிரைவிங் மோட் பயன்தரும்.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

ரெனோ ட்ரசோர் காரின் பின்புறத்தில் திருத்தமான டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் இரண்டிற்குமிடையில் ரெனோ நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

மின்சார திறன் பெற்ற இந்த காரின் மோட்டார் ரெனோவின் ஃப்பார்மூலா இ ரேஸிங் காரிலிருந்து பெறப்பட்டுள்ளது. இரண்டு வித மோட்டார்களிலிருந்து இந்த மின்சார மோட்டாருக்கு சக்தியூட்டப்படும்.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

துவக்க நிலையிலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார் அதிகப்பட்சமாக 345 பிஎச்பி பவர் மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வழங்கும்.

புதிய ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

இந்த காரிலிருக்கும் பேட்டரிகள் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் பெற்றவை. ஒரு பிரேக் ஆற்றல் மூலம் இயக்கப்படும் இந்த திறன் ஃபார்முலா ஈ காரிலும் உள்ளது.

 ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் அறிமுகம்..!!

ரெனோ ட்ரசோர் கார் சாலையில் செல்லும் போது நிச்சயமாக பலரது கண்ணை பறிக்கும். இதனுடைய டிசைன் மற்றும் ஸ்டைல் திறன், ட்ரசோர் காரை எதிர்கால வாகன துறைக்கான முக்கிய தயாரிப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும்... #ரெனோ #renault #auto expo 2018
English summary
Read in Tamil: Auto Expo 2018 Bewitching Renault Trezor Concept Showcased. Click for Details...
Story first published: Monday, February 12, 2018, 13:12 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark