மத்திய பட்ஜெட் எதிரொலி: இந்தியாவில் ஸ்கோடா கார்களின் விலை அதிரடி உயர்வு..!!

மத்திய பட்ஜெட் எதிரொலி: இந்தியாவில் ஸ்கோடா கார்களின் விலை அதிரடி உயர்வு..!!

By Azhagar

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் இந்திய கிளை வரும் மார்ச் மாதம் முதல் தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான ஸ்கோடா, ஸ்கோடா ஆட்டோ என்ற பெயரில் 2001ம் ஆண்டில் இந்தியாவில் கால்பதித்தது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

இந்தியாவில் அவுரங்காபாத் நகரை தலைமையிடமாக நிறுவி, ஆண்டிற்கு 20,000 கார்களை தயாரித்து நமது நாட்டில் விற்பனை செய்து வருகிறது ஸ்கோடா.

ஹேட்ச்பேக்,எஸ்யூவி என பல்வேறு ரக கார்களை விற்பனை செய்து வரும் ஸ்கோடா, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

இந்நிலையில் இந்தாண்டு மார்ச் 1ம் தேதி முதல் இந்தியாவில் கார்களின் விலையை உயர்த்துவதாக ஸ்கோடா இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

இம்மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கார்களுக்கான சுங்க வரி உயர்த்தப்படுவதாக பொருளாதர துறை அமைச்சர் அருண் ஜெட்லி அறிக்கை சமர்பித்தார்.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

அதை தொடர்ந்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், கார்களின் விலையை மாடலுக்கு ஏற்ப 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

இருந்தாலும், தனது கார்களில் 1 சதவீத விலை உயர்வை மட்டுமே ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி, ஸ்கோடாவின் அனைத்து கார்களும் ரூ. 10,000 முதல் ரூ. 35,000 வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

தொடர்ந்து, ஏற்கனவே ஸ்கோடா கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றொரு ஸ்கோடா காரை வாங்க விரும்பினால் அவர்களுக்கு ரூ. 50,000 வரை போனஸ் சலுகை வழங்கும் திட்டத்தையும் ஸ்கோடா ஆட்டோ அறிவித்துள்ளது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

ஒரு பக்கம் கார்களின் விலை அறிவித்தாலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் இந்த போனஸ் திட்டத்தின் மூலம் இந்தியாவில் விற்பனை திறன் அதிகரிக்கும் என ஸ்கோடா நம்புகிறது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

இந்தியாவில் 17 ஆண்டுகளாக கார் சந்தையில் முன்னணி உள்ள ஸ்கோடா ஆட்டோ, ரூ. 8.32 லட்சம் தொடங்கி ரூ. 34.5 லட்சம் வரை விலை கொண்ட 5 வகையான கார்களை விற்பனை செய்து வருகிறது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

சொகுசான மாடல், உறுதியான கட்டமைப்பு, நம்பகத்தன்மை நிறைந்த விற்பனை, தேர்ந்த சர்வீஸ் ஆகியவற்றால் ஸ்கோடா இந்திய வாடிக்கையாளர்களை பெரிது கவர்ந்து வருகிறது.

பட்ஜெட் எதிரொலியால் இந்தியாவில் விலை உயரும் ஸ்கோடா கார்கள்

தற்போது சுங்க வரி அதிகரித்திப்பட்டு இருப்பதால், இந்தியாவில் கால்பதித்து வாகனங்களை தயாரிக்கும் நிறுவங்களின் எண்ணிக்கை கூடும். இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in Tamil: Skoda Car Prices Increase: Effective Date, Price Hike Details, Models & Loyalty Bonus. Click for Details...
Story first published: Saturday, February 24, 2018, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X