உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

ரோடுகள் மூலம் இணைக்கப்பட்ட உலகின் உயரமான ரெஸ்டாரென்ட், போஸ்ட் ஆபிஸ், ஆகிய பகுதிகளுக்கு ஸ்கோடா கோடியாக் கார் மூலம் டிரைவ்ஸ்பார்க் குழு கரடு முரடான பாதைகள், எண்ணில் அடங்காத கொண்டை ஊசி வளைவுகள்,

By Balasubramanian

ரோடுகள் மூலம் இணைக்கப்பட்ட உலகின் உயரமான ரெஸ்டாரென்ட், போஸ்ட் ஆபிஸ், ஆகிய பகுதிகளுக்கு ஸ்கோடா கோடியாக் கார் மூலம் டிரைவ்ஸ்பார்க் குழு கரடு முரடான பாதைகள், எண்ணில் அடங்காத கொண்டை ஊசி வளைவுகள், - 2 டிகிரி வரைக்கும் சென்ற குளிர் என பல்வேறு சவால்களை சந்தித்து சென்ற சாகச பயணக்கதையை இங்கே பகிர்ந்துள்ளோம். இதை படித்து பாருங்கள் நீங்களே இமயமலை பயணம் செய்த உணர்வை பெறலாம். படிக்கும் போது அதன் குளிர் உங்களிடம் வந்து சேறும்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

ஸ்கோடா எக்ஸ்பெடிஷன் என்றால் புதிய அனுபவம், இடம், போன்ற ஏதோ ஒரு புதிய விஷயத்தை நோக்கமாக கொண்ட பயணம். ஸ்கோடா நிறுவனம் கோடியாக் எக்ஸ்பெடிஷன் என்ற பயணத்தை மேற்கொள்ள டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பை பார்த்ததும் எங்களுக்கு ஒரு த்ரில்லான சாக அனுபவத்தை மேற்கொள் போகிறோம் என்பதை உணர்ந்தோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இந்த பயணம் ஸ்பிட்டி பள்ளதாக்கு பகுதியில் திட்டமிடப்பட்டிருந்தது. ஸ்பிட்டி என்றால் நடுவில் உள்ள பகுதி இந்த பயம் திபெத் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான பகுதியில் அமைந்துள்ளது. இந்த பயணத்தில் உலகின் மோசமாக உள்ள சில சாலைகளை கடக்க வேண்டியது இருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இவ்வாறான பகுதியை கடக்க ஸ்கோடா கோடியாக் கார் சிறந்த காராக இருக்கிறது என்பதை பயணித்தில் இருந்து உணர்ந்தோம். இந்த 7 சீட்டர் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி காரில் பயணத்தின் போது பல கடினமான பகுதிகளையும் எளிதாக கடந்து சென்றது. மேலும் இந்த காரின் பெரிய கேபின் எங்களை பயணித்தில் சவுகரியமாக வைத்திருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

நாள் : 1 சண்டிகர் - மணலி

ஸ்கோடா கோடியாக் பணம் மணலியில் உள்ள ஹிமாலயன் டவுண் ரிசார்ட்டில் இருந்து துவங்கியது. சண்டிகரில் எங்களை வரவேற்று கூட்டி செல்ல ஸ்கோடா கோடியாக் கார்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. ஸ்கோடா நிறுவனம் தான் முழு டிடிஐ ஏடி டிரிம் ஸ்டைலை வழங்குகிறது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

கேடியாக் காரில் உள்ள தனித்துவமான சில அம்சங்களையும், டிரைவிங் நுனுக்கங்களையும் அனுபவக்க எண்ணி எங்களுக்காக வழங்கப்பட்ட காரில் பூட் பகுதியில் எங்கள் லக்கேஜ்களை வைத்தோம், எங்கள் எல்லோரது லக்கேஜ்களையும் வைக்க பெரிய இட வசதி அதில் இருந்தது. லக்கேஜ்களை வைத்த பின்பு எங்களது பயணம் துவங்கியது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

நாங்கள் புறப்பட்ட இடத்தில் இருந்து மணலியை அடைய சுமார் 300 கி.மீ. பயணிக்க வேண்டும். சண்டிகரில் உள்ள வெப்பம், மற்றும் டிராப்பிக்கால் அது ஒன்றும் அவ்வளவு சுலபமாக அமைந்து விடவில்லை. ஆனால் நாங்கள் பயணம் செய்தது ஸ்கோடா கோடியாக் என்பதால் எங்கள் பயணித்தை அது சற்று எளிமையாக்கியது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது நாங்கள் பிலாஷ்பூரை அடைந்து விட்டோம். அங்கு வானிலை தலைகீழாக மாறியது. மழை பெய்ய துவங்கியது. கோடியாக் காரில் இருந்த சன் ரூப் வழியாக மழை பெய்யும் போது பயணம் செய்யும் புது அனுபவத்தை பெற்றோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

தொடர்ந்து பயணத்தில் கரடு முரடான பாதைகள் இருந்தாலும் காரில் இருந்த பிரிமியம் கேன் டான் ஆடியோ சிஸ்டம் பயணத்தின் போது எங்கள் பொழுதை அழகாக கழிக்க வைத்தது. பயணம் அப்படியாக மலைப்பகுதியை அடைந்து மணலியை நோக்கி நீண்டு கொண்டே சென்றது. ஒரு வழியாக நள்ளிரவு மணலியில் நாங்கள் தங்கவுள்ள ஓட்டலை அடைந்தோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

முதல் நாள் பயணம் கரடு முரடான பாதைகளை சாதாரணமாக கடந்து வெற்றி கரமாக முடிந்தது. இப்பொழுது மறுநாள்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

நாள் : 2 மணலி - சந்திரதால்

டிராபிக்கை தவிர்க்க இரண்டாவது நாள் நாங்கள் சீக்கரமாகவே கிளம்ப முடிவு செய்தோம். ரோத்ங் பாஸ் பகுதியில் அதிக டிராபிக் இருக்கும் என எங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்படிருந்ததால் இந்த முடிவை எடுத்தோம். இதனால் அதிகாலை 6 மணிக்கே நல்ல குளிர் இருக்கும் நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து கிளம்ப முடிவு செய்தோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

எங்கள் பயணம் தொடர்ந்து மலை பகுதியில் பயணித்தது. மலை மீது ஏற ஏற காற்று குளிர்வடைந்து கொண்டே வந்ததை எங்களால் உணர முடிந்தது. இந்த பயணத்தின் போது மலை மீது பயணிப்பதால் நன்றாக தண்ணீர் குடித்து கொண்டோம். நீங்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள நினைத்தாலும் இவ்வாறே செய்யுங்கள்

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

தொடர்ந்து கொண்டே இருந்த எங்கள் பயணம் ஒரு பசுமையான ஒரு மலை பகுதிக்குள் சென்றது. இந்த பயணம் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உள்ள கோடியாக் காரால் சுலபமாக சாத்தியமானது. இந்த டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஃபோக்ஸ் வாகன் நிறுவனம் டிசைன் செய்தது. மார்கெட்டில் உள்ள சிறந்த கியர் பாக்ஸில் இதுவும் ஒன்று

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

ரோத்ங் பகுதியை கடந்ததும் நாங்கள் லே- மணலி நெடுஞ்சாலையில் இருந்து கிராம்பு என்ற பகுதியில் வெளியேறினோம். கிராம்புவில் இருந்து நாங்கள் பயணம் செய்த ரோடு கரடு முரடானதாகவும் அதிக சவால் கள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த ரோட்டின் குறுக்கே சினாப் என்ற நதியும் ஒடுகிறது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

எங்கள் பயணத்தின் போது இந்த பாதையில் கொஞ்சாக தண்ணீரும் சென்று கொண்டிருந்தது. இந்த பாதையை நாங்கள் காரிலேயே கடந்து செல்ல வேண்டும். ஸ்கோடா கோடியாக் கார் ஆல் வில் டிரைவ் சிஸ்டம் உள்ள காராக இருந்ததால் இந்த பாதையை எளிதாக எந்த வித ஆபத்தும் இல்லாமல் கடக்க முடிந்தது. கரடு முரடான ரோடுகளுக்கு ஏற்ற சிறந்த காராக இருப்பதாக உணர முடிந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

ஸ்கோடா கோடியாக்கில் 5 விதமாக டிரைவிங் மோடுகள் உள்ளன. எக்கோ, நார்மல், ஸ்போர்ட், இன்டிவிஜூவல், ஸ்நோ ஆகிய மோடுகள் இதில் உள்ளன. மேலும் இதில் உள்ள ஸ்நோ மோடு உறுதியாக இல்லாதரோடுகளிலும், ஆறுகளை கடக்கும் போதும் உதவுகிறது. தொடர்ந்து இந்த பயணத்தில் எங்களுக்கு மதியம் உணவு எங்கேயும் கிடைக்கவில்லை. இதை தேடுவது எங்களுக்கு புதுவித அனுபவத்தை தந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

ஒரு வழியாக உணவை தேடித்தேடி ஒரு இடத்தில் கிடைத்தது. அங்கு மதிய உணவை முடித்து கொண்டு தொடர்ந்து எங்கள் பயணத்தை சந்திரதால் நோக்கி பயணிக்க துவங்கினோம். அங்கிருந்து நாங்கள் பயணம் செய்யும் ரோடு மிகவும் மோசமாகவும், சில இடங்களில் ரோடுகளே இல்லாமலும் இருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

அந்த ரோட்டில் எங்களுடன் பயணித்த மற்ற இரண்டு ஸ்கோடியாக் கார்கள் பஞ்சர் ஆகியது. இதையடுத்து ஸ்கோடா இந்தியா குழுவினர் இது போன்ற சூழ்நிலைகள் நடக்கும் என்பதை உணர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளுடன் வந்திருந்ததால் எளிதாக அதை சரி செய்து பயணத்தில் பெரிய தாமதம் ஏற்படாமல் தொடர்ந்தோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

எங்களது பயணம் சத்ரூ பகுதியை கடந்த பின்பு அங்கு நாங்கள் பார்த்த காட்சிகள் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. பனிகள் சூழ்ந்த மலைகளை எங்களால் பார்க்க முடிந்தது. அந்த பகுதியில் பயணங்களும் மிகவும் கடுமையாக இருந்தது. இன்று மாலை நாங்கள் பத்தல் என்ற பகுதியை அடைந்தோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

அங்கு டீ பிரேக் எடுத்து கொண்டோம் கடும் குளிரில் உள்ள வானியில் இந்த சூடான டீ நிச்சயம் எங்களுக்கு தேவைபட்டது. அது இதமான அனுபவத்தை எங்களுக்கு அளித்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

தொடர்ந்து நேரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்ப அளவு குறைந்து குளிர் அதிகரத்து கொண்டே சென்றது. குளிர் எந்த அளவிற்கு இருந்தது என்றால் எங்களது ஸ்வட்டர், ஜெர்க்கினையும் துளைத்து எங்கள் உடலால் அந்த குளிரை உணர முடியும் அளவிற்கு இது இருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இரவு சுமார் 7 மணிக்கு எங்களது கேம்பை அடைந்ததோம். இன்று சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகக பயணம் செய்து சுமார் 120 கிலோ மீட்டரை மட்டுமே நாங்கள் கடந்தோம் அந்த அளவிற்கு மோசமான ரோடுகள், மற்றும் கரடுமுரடனா பாதைகள் இருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

நாங்கள் கேப் சைட் போட்ட இடத்தில் டென்ட்கள் அமைத்து அங்கு தங்கினோம். அந்த பகுதியில் வெப்ப நிலை சுமார் -2 டிகிரிக்கும் குறைவாக சென்றது. இதனால் எங்களுக்கு டென்டிற்கு உள்ள நடுக்கம் ஏற்பட்டது. இரவு முழுவதும் தூக்க முடியாமல் தவித்தோம். மறு காலையில் எப்பொழுது சூரிய உதயம் இருக்கும் என்பதை எதிர்பார்த்தோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இருந்தாலும் நட்சத்திரம் சூழ்ந்த வானம், குளிரும் அமைதியும் நிரைந்த மலைகள், என இயற்கையில் அழகு எங்களை இந்த குளிரையும் மீறி அதை ரசிக்கவைத்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

நாள் : 3 சந்திரதால் - காஸா

பயண திட்டத்தின் படி முன்றாம் நாள் சந்திரதால் லேக் பகுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து நேராக காஸாவிற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். தூக்கமே இல்லாத இரவுகளாக நேற்றைய இரவுகள் கழிந்தாலும், அதிகாலையிலேயே பயணத்திற்காக தயாரானானோர்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

கேப் சைட் பகுதியில் இருந்து வெறும் 20 நிமிட பயணத்தில் நாங்கள் ஏரி அமைந்திருக்கும் பகுதியை அடைந்தோம். ஆனால் ஏரியை பார்க்க நாங்கள் காரை நிறுத்தி விட்டு 10 நிமிட நடை பயணம் செய்ய வேண்டும். அந்த 10 நிமிடம் நாங்கள் 10 மணி நேரம் போல எங்களுக்கு அமைந்தது. கடும் குளிர் எங்களை வாட்டி எடுக்க துவங்கியது. நாங்கள் ஏரியை அடைந்த போது எங்களால் சுவாசிக்க கூட மிக சிரமமாக இருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

ஏரியை அடைந்த போது ஏரியின் நீல நிற தண்ணீர் பின்னணியில் பனி மலைகள் என எங்களைது இந்த முயற்சிக்கு நிச்சயம் வீணாகவில்லை என்று உணர்ந்தோம். அந்த அளவிற்கு எங்கள் கண்களை கொள்ளை யடிக்கும் அளவிற்கு அதன் அழகு அமைந்திருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு பெயர் தான் சந்திரா, தால் என்றால் ஏரி என்பதால் இந்த இடத்தை சந்திரதால் என்பார்கள், அதன் அழகும், பிரம்மாண்டமும் எங்களுக்கு ஒரு விதமான உத்வேகத்தை அளித்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

தொடர்ந்து அங்கிருந்து காஸாவிற்கு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இந்த பாதையில் பல வித சவால்களை சந்திக்க வேண்டியது இருந்தது. குறிப்பாக நாங்களும் எங்களுடன் பயணம் செய்ய சிலரும் மிகுந்த சிரமத்திக்கு இடையில் பயணத்தை தொடர்ந்தோம். குன்சாம் பாஸ் என்ற பகுதியை கடக்க முடியாமல் திணறினோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

குறுகலான ரோடுகள், செங்குத்தான பள்ளதாக்குகள், என எங்கள் பயணம் மிக கடினமாகவே தொடர்ந்தது. ஆனால் பயணி காட்சிகள் எல்லாம் எங்களுக்கு புது வித அனுபவத்தை தந்ததை எங்கிருந்த மலைகள் எல்லாம் காண வித்தியாசமாக இருந்தன. இதனால் எங்களது கடினம் அவ்வளவாக எங்களுக்கு தெரியவில்லை.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இந்த பயணம் தொடரும் வழியில் ஒரு காலி இடத்தை பாத்தோம் எங்கு ஸ்கோடா கோடியாக் காரை வைத்து சில ஃபன் செய்யலாம் என்று முடிவு செய்தோலம். இது தான் எங்கள் பயணத்தின் நாங்கள் எதிர்பார்த்த தருணமாக அமைந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

அப்பொழுது ஸ்கோடா கோடியாக் காரில் டிராக்ஸன் கண்ட்ரோலை ஆப் செய்து விட்டு அங்கு சில காரை ஓட்டினோம். அப்பொழுது அந்த கார் வழக்கத்தை விட வேகமாக செயல்பட்டது. அந்த காரின் பாடியும் மிக சிறப்பாக இருந்தால் எங்களுக்கு சிறந்த அனுபவமாக அது இருந்தது. தொடர்ந்து இதை முடித்து கொண்டு காஸாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மாலையில் சென்றோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

நாள் : 4 காஸா

நான்காம் நாள் சற்று ஒய்வாயாக துவங்கியது. காஸாவில் சில இடங்களில் சுற்றி திரிந்தோம். எங்களுக்கு எங்கு எல்லாம் செல்ல வேண்டுமே அங்கு எல்லாம்சென்றோம். எங்களது முதல் பயணம் அங்குள்ள தங்கர் மடத்திற்கு சென்றோம். எங்கு செல்லும் பாதை எண்ணில் அடங்கா கொண்டை ஊசி வளைவுகளை கொண்டிருந்தது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இந்தியாவையும், திபெத்தையும் இடையேயான ஸிபிட்டி பள்ளதாக்கில் உயரமான பகுதியாக இந்த பகுதி தான் உள்ளது. இந்த பகுதி தான். ஸிபிட்டியின் தலைமை பகுதியாகவும் உள்ளது. அங்கு சில நேரம் செலவலித்து விட்டு அங்கிருந்து தபோ என்ற மடத்திற்கு புறப்பட்டோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இது தபோ என்ற கிராமத்தில் இருக்கிறது. அங்கு எங்கள் மதிய உணவை சாப்பிட முடிவு செய்தோம்.ஆனால் அங்கு வித்தியசமாக அந்த பகுதியில் மட்டும் கிடைக்கும் உணவுகிடைத்தது. அதன் பின் அங்கிருந்து உலகின் உயரமான இடத்திற்கு செல்ல முடிவு செய்தோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

முதலில் உலகின் உயரமான போஸ்ட் ஆபிஸ் இருக்கும் ஹிக்கீம் என்ற பகுதிக்கு சென்றோம். அங்கிருந்து எங்கள் வீடுகளுக்கு தபால் எழுதி போட்டோம். அது எங்களுக்கு வீடு திரும்பி பின் பெரும் நினைவு பொருளாக இருக்கிறது. அடுத்தாக கோமிக் என்ற ரோடுகளால் இணைக்கப்பட்ட உலகின் உயரமான கிராமத்திற்கு சென்றோம். இது கடல் மட்டத்தில் இருந்து 4587 கி.மீ. உயரத்தில் இருக்கிறது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இந்த கிராமத்தில் தான் உலகின் உயரமான ரெஸ்டாரன்ட் இருக்கிறது. (அந்த ரெஸ்டாரண்ட் பெயர்பலகையில் highest என்ற ஆங்கில சொல்லை தவறாக எழுதியிருந்தார்கள்.) அங்கிருந்து நாங்கள் கிளம்பும் போது நேரம் கிட்டத்தட்ட மாலை 6 மணியாகிவிட்டது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

நாங்கள் கீ என்ற மடத்திற்கு செல் விரும்பினோம் ஆனால் அந்த பகுதிக்கு செல்வதற்கும் இருட்டாகிவிட்டது. அதனால் அந்த மடத்தின் கீழ் பகுதியில் உள்ள மலையுடன் முடித்து அங்கிருந்து காஸாவிற்கு சென்றோம். அங்கிருந்து ஸ்பிட்டி பள்ளதாக்கின் எங்கள் பயணத்தை முடித்து கொண்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். ஐந்து மற்றும் ஆறாம் நாள் நாங்கள் திருப்பும் பயணத்தை மேற்கொண்டோம்.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

ஆறாம் நாள் நாங்கள் கிட்டத்தட்ட சுமார் 1000 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டிருந்தோம். ஸ்கோடா கோடியாக் கார் கரடுமுரடான பல்லாங்குழி சாலைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. பெரும்பாலாக அலுங்கள் குழுங்கள்கள் காரின் பயனத்தின் போது பயணிகளுக்கு தெரியாமல் இருக்க வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

இந்த காரின் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம், சிறந்த டிராக்ஸன் சிஸ்டம் சில கடினமான பாதைகளையும் எளிதாக சமாளித்து சென்றது. கடுமையான குளிர் மற்றும் உயரம் ஆகியவற்றிலும் இன்ஜின் சிறப்பாக செயல்பட்டது. ரோட்டிலும், ஆப் ரோட்டிலும் ஸ்கோடா கோடியாக் சிறந்த பெர்பாமராகவே இருக்கிறது.

Most Read Articles
English summary
The Skoda Kodiaq Expedition — A Journey To ‘The Middle Land’.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X