இந்தியாவில் புதிய சிறிய ரக காரை களமிறக்கும் முடிவில் ஃபோக்ஸ்வேன் நிறுவனத்திடம் சரணடைந்த ஸ்கோடா..!!

Written By:

ஸ்கோடா நிறுவனம் அனைவருக்கும் ஏற்ற வகையிலான புதிய என்டரி - லெவல் காரை தயாரித்து வரும் செய்தி ஏற்கனவே உறுதியான நிலையில், அதைப்பற்றி புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

செக் குடியரசு நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்கோடா, 2021ம் ஆண்டில் இந்த புதிய என்டரி-லெவல் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

முன்னதாக டாடா மோட்டார்ஸுடன் இணைந்து கார்களை தயாரிக்க ஸ்கோடா ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அது முறிந்த நிலையில் தற்போது ஃபோக்ஸ்வேகனின் எம்.கியூ.பி ஏ0 பிளாட்ஃப்பார்மின் கீழ் இந்த என்டரி - லெவல் காரை ஸ்கோடா தயாரிக்கிறது.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

என்ட்ரி-லெவல் செக்மென்டில் தனியாக களமிறங்குவது பற்றி ஸ்கோடாவின் தலைமை செயல் அதிகாரியான பெர்ன்ஹார்டு மேயர் கூறும்போது, ஃபோக்ஸ்வேகனின் பிளாட்ஃப்பார்மை தழுவி உருவாக்கப்படும் இந்த கார்கள் உள்நாட்டிலேயே தயாராகும் என்று கூறினார்.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

தற்போது, இந்தியாவில் ஸ்கோடா பெரியளவிலான கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. முன்னதாக பயன்பாட்டிலிருந்த ஃப்பேபியா காரின் தயாரிப்பு பணிகளையும் ஸ்கோடா நிறுத்திவிட்டது.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

தவிர ஃப்பேபியா ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்கனவே வெளிநாட்டின் சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. அதுவும் ஃபோக்ஸ்வேகன் எம்.கியூ.பி பிளாட்ஃப்பார்மை தழுவி உருவாக்கப்பட்டது தான்.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

சர்வதேசளவில் பல நாடுகளில் ஸ்கோடா சிட்டிகோ என்ற சிறிய ரக காரை விற்பனை செய்து வருகிறது. இதை தான் தற்போது இந்திய சந்தைக்கு அந்நிறுவனம் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

முன்னதாக ஸ்கோடா மற்றும் டாடா செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் படி, ஸ்கோடா ஏஎம்பி பிளாட்ஃப்பார்மின் கீழ் இந்தியாவிற்கு ஏற்ற கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

ஆனால் அதை தவிர்த்து தனது குடும்ப நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் எம்.கியூ.பி பிளாட்ஃப்பாரமை தழுவி சிறிய ரக காரை தயாரிக்கிறது ஸ்கோடா.

இந்தியாவின் கார் சந்தையை பொறுத்தவரை ஸ்கோடா ஒரு ப்ரீமியம் ரக பிராண்டு. தற்போது அது என்டரி-லெவல் செக்மென்டிலும் கால் பதிக்கவுள்ளது.

சிறிய ரக காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்கோடா

அனைவருக்கும் ஏற்ற விலையுடைய கார் தயாரிப்பில் ஸ்கோடா இறங்குவது அந்நிறுவனத்திற்கு ஏறுமுகமாகவே அமையும். மேலும் ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் செடான் கார்களுக்கு இந்திய சந்தை இன்னும் வரவேற்பையே வழங்கி வருவதாகவும் ஆட்டோதுறை நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in Tamil: Skoda To Launch New Small Car In India Expected Launch And More Details. Click for Details...
Story first published: Tuesday, March 6, 2018, 15:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark