சுஸுகி ஸ்விஃப்ட் காரில் புதிய சிறப்பு ஸ்போர்ட் எடிசன் மாடல் வெளியீடு... முழுத் தகவல்கள்..!!

Written By:

ஜப்பானின் சுஸுகி கார் தயாரிப்பு நிறுவனம், ஸ்விஃப்ட் காரில் புதிய ஸ்போர்ட் ஆட்டோ சலோன் வெர்ஷன் மாடலை இம்மாதம் டோக்கியோவில் வெளியிடவுள்ளது.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் வெர்ஷன் காரின் அழகியல் தோற்றம் இந்த வெர்ஷனில் மேலும் மெருக்கேற்றி காட்டப்பட்டுள்ளது.

பரவசத்தை தரும் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் சலோன் வெர்ஷன் லிமிடெட் எடிசனாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் செலோன் கார், 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹேட்ச்பேக் மாடலை பின்பற்றி உருவாக்கப்படவுள்ளது.

சிறப்பு எடிசன் மாடலாக வெளிவரும் இந்த கார் புதிய மேட் பிளாக் நிறத்தில் பூச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

முன்பக்க லிப் ஸ்பாய்லர் மற்றும் காரின் பக்கவாட்டில் உள்ள ஸ்கெர்ட்ஸ் ஆகியவற்றிக்கு சிவப்பு நிற பார்டரிங் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காரின் ஓ.ஆர்.வி.எம் கண்ணாடிகளின் பின்பகுதிகளுக்கு இதே சிவப்பு சிற பூச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

காரின் ரேடியேட்டர் கிரில் பகுதிகள் சேட்டின் கிரே நிறத்தில் உள்ளது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் சலோன் வெர்ஷன் காரின் பக்கவாட்டு பகுதிகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலே காட்சியளிக்கின்றன.

Trending On Drivespark:

இந்தியாவின் முதல் ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் மோட்டார் சைக்கிள்..!!

அதிவேகமாக வந்த காருடன் நேருக்கு நேர் மோதி சாலையில் தூக்கிவீசப்பட்ட பைக்... (வீடியோ)

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

கார் கதவின் ரியர் பகுதிகள், ஸ்போர்ட்டி டீகேல்ஸ் , புதிய வடிவமைப்பை பெற்ற அலாய் சக்கரங்கள் மற்றும் காரின் கருப்பு நிறத்திலான மேற்கூரை ஆகியை இந்த காருக்கு ஸ்போர்ட்டி தரத்தை தருகின்றன.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சினை கொண்டுள்ள ஸ்விஃப்ட் ஸ்போர்ட் செலோன் கார் 138 பிஎச்பி பவர் மற்றும் 230 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டர்போசார்ஜிடு பெற்ற பெட்ரோல் எஞ்சின் மாடலான இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைகளில் வெளிவரும்.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

செயல்திறன், வடிவமைப்பில் பல தனித்துவமான அம்சங்களை பெற்றிருக்கும் இந்த ஸ்விஃப்ட் ஸ்போர்ட் செலோன் கார் முன்பக்க வீல் டிரைவிங் முறையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

சாதாரண ஸ்விஃப்ட் காரின் 3வது தலைமுறைக்கான மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படுகிறது. அப்போதே புதிய ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்ட் வெர்ஷனும் வெளியிடப்படவுள்ளது.

Trending On Drivespark:

புதிய அண்டில் புத்தம் புதிய மூன்று கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி... முழு தகவல்கள்..!!

விபத்தில்லா பெருவாழ்வு... வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய புத்தாண்டு சபதம்!

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

இந்தியாவில் வெளியிடப்படும் மாருதி ஸ்விஃப்ட் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் வெளிவருகிறது.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

மேலும் எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு இந்த புதிய கார் 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விஃப்ட் காரில் புதிய லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் மாடல் கார்... விரைவில்..!

சிறப்பு எடிசனாக சுஸுகி வெளியிடும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஆட்டோ செலோன் கார் இம்மாதம் டோக்கியோ கண்காட்சியில் வெளியிடப்படுகிறது.

தற்போது அறிவிப்பு வாயிலாகவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இந்த சிறப்பு காரின் ஏனைய தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Read in Tamil: Suzuki Swift Sport Salon Version Revealed To Debut At 2018 Tokyo Auto Salon. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark