டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை சுஸுகி கார் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.தென் இந்தியாவில் தனது டீலர்களுக்கு விரைவில் கார்களை அனுப்பும் விதத்தில், ட

By Saravana Rajan

பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை சுஸுகி கார் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா கார் நிறுவனமும் இந்தியாவில் தங்களது சில கார் மாடல்களை இரு பிராண்டிலும் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்கள் டொயோட்டா பிராண்டிலும், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் மாருதி சுஸுகி பிராண்டிலும் வர இருப்பதாக சொல்லி இருந்தோம்.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

இந்த நிலையில், இந்த கூட்டணி தற்போது அடுத்தக் கட்டப் பணிகளில் இறங்கி இருக்கிறது. அண்மையில் பெங்களூரில் உள்ள டொயோடடா ஆலைக்கு மாருதி சுஸுகி அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இதன்படி, பெங்களூர் ஆலையில் மாருதி சுஸுகி கார்களை உற்பத்தி செய்யும் விதமாக, ஆலையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

இதற்காக, மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனம் ரூ.7,000 கோடியை பெங்களூரில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் ஆலையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், தற்போது 50 சதவீத அளவுக்குத்தான் இங்கு கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

எனவே, டொயோட்டா ஆலையின் முழு உற்பத்தி திறனையும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், மாருதி கார்கள் இங்கு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும், பெங்களூர் அருகே தும்கூரில் உள்ள கர்நாடக ஜப்பானிய தொழில் முனையத்தில் மாருதி கார்களுக்கான உதிரிபாக சப்ளையர்களின் ஆலைகளையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

மாருதி கார் நிறுவனம் ஹரியானாவில் 2 கார் ஆலைகளையும், குஜராத்தில் ஒரு கார் ஆலையையும் வைத்திருக்கிறது. இந்த நிலையில், தென் இந்தியாவில் தனது டீலர்களுக்கு விரைவில் கார்களை அனுப்பும் விதத்தில், டொயோட்டா ஆலையை பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு செல்ல இருக்கும் மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள் பெங்களூர் பிடதியில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருப்பது பழைய செய்திதான். ஆனால், இந்த புதிய முதலீட்டு திட்டத்தின்படி, பெரும்பாலான மாருதி கார்கள் இதே டொயோட்டா ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறதுத.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

வரும் 2022ம் ஆண்டில் தென் இந்தியாவிற்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு டொயோட்டா ஆலையை பயன்படுத்தி கார் உற்பத்தி செய்ய மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இரு நிறுவனங்களும் பயன்பெறும்.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வரும் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாருதி சியாஸ் காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்திருந்தோம்.

டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!

இதே பெட்ரோல் எஞ்சினை டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரிலும் பயன்படுத்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. இந்த எஞ்சின் சுஸுகி எஞ்சினியர்களால் ஜப்பானில் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Suzuki To Invest INR 7000Cr In Toyota’s Bengaluru Plant.
Story first published: Tuesday, August 7, 2018, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X