புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

Written By:

'குட்டி யானை' என்று வாடிக்கையாளர்களால் செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸ் மினி டிரக் வரிசையில் ஏஸ் கோல்டு என்ற புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா ஏஸ் வரிசையில் விற்பனையாகும் மாடல்களில் சிறப்பான சொகுசு, செயல்திறன், உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு என முக்கிய விஷயங்களில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது ஏஸ் கோல்டு.

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக்கின் தோற்றம் மற்றும் உட்புற வடிவமைப்புகளில் ஏற்கனவே இருக்கும் மாடல்களை ஒத்திருக்கிறது. அதேநேரத்தில், ஓட்டுனர் மற்றும் பயணிக்கான இருக்கைகள் சவுகரியமாக இருக்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா ஏஸ் கோல்டு மினி டிரக்கில் 702சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 எச்பி பவரையும்,, 37.5 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஏஸ் மினி டிரக் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது. டாடா ஏஸ் வரிசையில் தற்போது 15 மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. டாடா ஏஸ் ஸிப், மெகா, மினி, மேஜிக் மற்றும் மந்த்ரா, சூப்பர் ஏஸ் என பல்வேறு எடை சுமக்கும் திறன்களில் கிடைக்கிறது.

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா ஏஸ் டிரக்குகள் இலகு ரக வர்த்தக வாகன மார்க்கெட்டில் 68 சதவீத பங்களிப்பை பெற்றிருக்கின்றன. குறைவான பராமரிப்பு செலவு, அதிக எரிபொருள் சிக்கனம் போன்றவை இந்த மினி டிரக்குகளுக்கு அதிக வரவேற்பை பெற்று தந்திருக்கிறது.

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த நிலையில், டாடா ஏஸ் வரிசையில் வந்திருக்கும் புதிய ஏஸ் கோல்டு மினி டிரக்கிற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. வாகனம் பழுதானால் 24 மணிநேரமும் அவசர உதவி பெறும் திட்டம், விரைவான சர்வீஸ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் ரூ.3.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் டாடா ஏஸ் வரிசையில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Ace Gold launched in India. Tata Motors has launched the new Ace Gold light commercial vehicle (LCV) in India with a price tag of Rs 3.75 lakh ex-showroom (Delhi). By launching the Ace Gold, Tata Motors has added another premium variant to the existing lineup.
Story first published: Friday, April 13, 2018, 9:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark