2018 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடாவின் இ-விஷன் மின்சார கான்செப்ட் கார்..!!

Written By:

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 2018 மோட்டார் கண்காட்சியில் தொடர்ந்து 20வது முறையாக பங்கெடுத்து இந்தியா ஆட்டோதுறையை பெருமைப்படுத்தியுள்ளது. 

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

இந்தாண்டிற்கான கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய இ விஷன் செடான் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியுள்ளது.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

ஆல்ஃபா பிளாட்ஃப்பாரமில்லாமல், டாடாவின் ஓமேகா பிளாட்ஃப்பாரமின் கீழ் இந்த மின்சார கார் தயாராகியுள்ளது. சமீபகாலத்திற்கு ஏற்றவாறான கட்டமைப்பில் இந்த மின்சார கார் தயாராகியுள்ளது.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

மின்சார கட்டமைப்புகளுக்கு டாடா உருவாக்கியுள்ள பிளாட்ஃப்பாரம் தான் ஓமேகா. எதிர்கால வாகன தேவைக்காக டாடா உருவாக்கியுள்ள பிளாட்ஃப்பாரம் தான் ஆல்ஃப்பா.

இதன் கீழ் எதிர்கால தேவையை கருதி ஹேட்ச்பேக், செடான் மற்றும் சிறிய ரக எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் தயாரிக்கவுள்ளது.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

டாடாவின் ஓமேகா பிளாட்ஃப்பாரமின் கீழ் மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்கள் மட்டுமில்லாமல், அதன் உள்கட்டமைப்பிற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

2018 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட ஹெச்5 எக்ஸ் மற்றும் 45 எக்ஸ் கான்செப்டுகளை பின்பற்றி தான் டாடா இ விஷன் செடான் கான்செப்ட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

21 இஞ்ச் அலாய் சக்கரங்கள், பிளஷ்-ஃப்பிட்டிங் கொண்ட கதவு இயக்கங்கள் மற்றும் சரளை வடிவிலான ஓ.ஆர்.வி.எம் கண்ணாடிகள் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

டாடா இ விஷன் செடான் கான்செப்ட் காரின் உள்புறத்தில் டாஷ் போர்டு மற்றும் மத்தியப்பகுதிக்கான கன்சோல் ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. அது பல்வேறு உயர்ரக பொருட்களைக்கொண்டு தயாராகியுள்ளது.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

மின்சார ஆற்றலில் கொண்ட இந்த காரின் செயல்திறன் சார்ந்த தகவல்களை டாடா இன்னும் வெளியிடவில்லை. இருந்தாலும் ஜெனீவா கண்காட்சியில் பலரையும் கவர்ந்துள்ளது டாடா இ விஷன் கார்.

ஜெனீவா கண்காட்சியில் பார்வைக்கு வந்த டாடா இ விஷன் மின்சார கார்

வருங்காலங்களில் மின்சார ஆற்றல் பெற்ற கார்களுக்கு தான் வரவேற்பு என்பதை நன்கு உணர்ந்து இந்த மின்சார காரை தயாரித்துள்ளது டாடா.

தவிர மின்சார கார்களை தயாரிக்க டாடா உருவாக்கியுள்ள ஓமேகா பிளாட்ஃப்பாரமின் கட்டமைப்புகளிலும் டாடா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

English summary
Read in Tamil: 2018 Geneva Motor Show Tata E Vision Sedan Concept Unveiled - Specs, Features, Images. Click for Details...
Story first published: Wednesday, March 7, 2018, 15:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark