2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ப்ரீமியம் தர எஸ்யூவி காரை வெளியிடும் டாடா..!!

Written By:

பல சஸ்பென்ஸிற்கிடையில் டாடா தயாரித்து வரும் புதிய ரக ப்ரீமியம் எஸ்யூவி மாடல் காரின் வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

இந்தாண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி டெல்லி நொய்டாவில் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது.

உலகளவில் பல்வேறு வாகன நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை இங்கு காட்சிப்படுத்தவுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

இதில் பங்கேற்கவுள்ள டாடா மோட்டார்ஸ், அதிகம் எதிர்பார்க்கப்படும் தனது ப்ரீமியம் ரக ஹேட்ச்பேக் எஸ்யூவி காரை வெளியிட உள்ளது.

இந்த எஸ்யூவி கார் சார்ந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் தற்போது அவை இணையத்தில் வெளியாகியுள்ளது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

டாடாவின் இந்த எஸ்யூவி கார் லேண்டுரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காடிவாடி இணையதளம் இந்த புதிய காருக்கு டாடா 'அட்மோஸ்' என பெயர்சூட்டலாம் என செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ஹெச் 5 அல்லது கியூ501 என்ற புதிய இரண்டு மாடல் எஸ்யூவி கார்களை வெளியிடலாம் என முன்பே தெரிவிக்கப்பட்டது.

அதில் ஹெச்5 என்று குறிப்பிடப்பட்டு வந்த கார் தான் அட்மோஸ் என்ற பெயரில் ப்ரீமியம் தர எஸ்யூவி மாடலாக டாடா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

எனினும் இந்த புதிய வாகனத்தை இந்திய சாலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து அந்நிறுவனம் வெளியிடலாம் என்பது ஆட்டோதுறை வல்லுநர்களின் கருத்து.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் என இருவேறு மாடல்களில் வெளியிடப்படும் இந்த அட்மோஸ் காரின் எஞ்சினை பிரபல ஃபியட் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

2.0 லிட்டர் 4 சிலிண்டர் மல்டிஜெட் II கொண்ட டீசல் திறன் பெற்ற அந்த எஞ்சின் 5 சீட்டர் மாடலில் 140 பிஎச்பி பவர் வழங்கும். அதேபோல 7 சீட்டர் கொண்ட மாடலில் 170 பிஎச்பி பவர் வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

5 சீட்டர் பேஸ் வேரியன்ட் 2 வீல் டிரைவ் சிஸ்டம் முறையிலும், 7 சீட்டர் டாப்-ஸ்பெக் வேரியன்ட் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் முறையிலும் இயங்கும் என டாடா தகவல் தெரிவிக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

டாடா ஹெச்5 குறியீட்டில் தயாரித்திருக்கும் இந்த காரீன் 5 சீட்டர் மாடல் ரூ. 13 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனுடைய டாப் ஸ்பெக் 7 சீட்டர் மாடல் ரூ. 15 லட்சம் வரை விலை பெறலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் ஆடியோ சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றையும் டாடா இந்த அட்மோஸ் எஸ்யூவி காரில் பொருத்தலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

இந்தியாவில் ப்ரீமியர் செக்மென்ட் கார் விற்பனையில் டாடா விஸ்வரூப வளர்ச்சி அடைந்து வருகிறது. அது வெளியிட்ட நெக்ஸான், ஹெக்ஸா, டிகோர் மற்றும் டியாகோ என அனைத்து மாடல்களும் நல்ல விற்பனை திறனை பெற்று வருகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

தற்போது ஹெச்5 என்ற குறியீட்டில் அட்மோஸ் என்ற பெயரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய எஸ்யூவி காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டாடா புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

இதுப்பற்றி மேலும் பல தகவல்கள் நடைபெறவிருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதற்கு தொடர்ந்து இணைந்திருங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழுடன்.

English summary
Read in Tamil: Auto Expo 2018: Tata H5 (Q501) Five-Seater, Seven-Seater SUV To Be Unveiled. Click for Details...
Story first published: Monday, January 29, 2018, 13:25 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark