புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்... டிசைனில் வேற லெவலுக்கு போன டாடா!

Written By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் கார் மாடல்கள் பத்திரிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

குறிப்பாக, டாடா நிறுவனத்தின் புத்தம் புதிய எஸ்யூவியும், பிரிமியம் ஹேட்ச்பேக் கார் கான்செப்ட்டும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த செய்தியில் டாடா நிறுவனத்தின் புத்தம் புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலின் படங்கள், தகவல்களை பார்க்கலாம்.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

டாடா எச்5எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கான்செப்ட் மாடலானது ஒமேகா என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

லேண்ட்ரோவர் எல்ஆர்-4 சொகுசு எஸ்யூவியின் சேஸீயின் அடிப்படையில் இந்த கான்செப்ட் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி கான்செப்ட் மாடலின் டிசைன் கவர்ச்சிகரமாக இருக்கிறது. தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும்போது மாற்றங்கள் இருந்தாலும், மிகச் சிறப்பான வடிவமைப்பில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட்டின் எல்இடி ஹெட்லைட் முகப்பு க்ரில் அமைப்புடன் வெகு நேர்த்தியாக இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்புற பம்பரில் இரண்டு புறங்களிலும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அடிப்பாகத்தில் மிகப்பெரிய ஸ்கிட் பிளேட் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் மிக உயர்த்தப்பட்ட அமைப்புடன் அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கூரை அமைப்பு பின்புறத்தில் மிக கூர்மையாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சி பில்லர் முழுமையாக கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருப்பது கூடுதல் வசீகரத்தை அளிக்கிறது. வீல் ஆர்ச்சும், சக்கரங்களும் பிரம்மாமண்டத்தை தருகின்றன.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் மாடலானது டாடா நெக்ஸான் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களையும் பெற்றிருக்கிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைன் கவரும்படியாக இருக்கிறது. டெயில் கேட் டிசைனும், ஸ்கிட் பிளேட்டும் இணைந்து பின்புற வசீகரத்தை பன்மடங்கு உயர்த்துகின்றன.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

உட்புறத்திலும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மிரட்டுகிறது டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி. மூன்று பிரிவுகளை கொண்ட டேஷ்போர்டு அமைப்பு, லேண்ட்ரோவர் கார்களை போன்ற வசதியான இருக்கைகள், கியர் லிவர் போன்றவை இந்த கான்செப்ட் காரின் மதிப்பை உயர்த்துகின்றன.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

இந்த காரில் இரண்டு திரைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் டிஜிட்டல் திரையாகவே கொடுக்கப்பட்டுவிட்டதால், வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இல்லை. பின் இருக்கை பயணிகளின் பொழுதுபோக்கிற்காக முன் இருக்கையின் பின்புறம் திரைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான எஸ்யூவி மாடலை டாடா களமிறக்கப் போவதை கட்டியம் கூறும் வகையிலேயே வந்துள்ளது. இந்த புதிய கான்செப்ட் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவியுடன் மல்லுக்கட்டும் என நம்பலாம்.

மேலும்... #டாடா #tata #auto expo 2018
English summary
Auto Expo 2018: Tata H5X concept SUV revealed. The Tata H5X concept previews Tata's upcoming premium SUV and is based on the company's Impact Design 2.0 design language and is one of two new concept cars revealed by Tata Motors At Auto Expo 2018.
Story first published: Wednesday, February 7, 2018, 16:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark