டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர் வெளியீடு: பலேனோ, ஐ20 போட்டியாளர்!

Written By:

அடுத்த வாரம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் புத்தம் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ நெருங்கி வரும் இவ்வேளையில், அந்த காரின் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கிறது.

 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்!

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்

அதில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மாடல் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடல். மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த கார் பலரின் கவனத்தை பற்றி இருக்கிறது.

 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்

இந்த நிலையில், இன்று வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டும் வகையில், டீசர் படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் ஹெட்லைட் முகப்பு க்ரில் உள்ளிட்ட விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்

புதிய டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றிருக்கிறது. தற்போதுள்ள டாடா கார்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைனுடன் வருகிறது.

 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்

டாடா எக்ஸ்451 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 என்ற டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முகப்பு க்ரில் அமைப்பு டாடா நெக்ஸான் எஸ்யூவியின் க்ரில் அமைப்பின் அடிப்படையில் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்

டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால், சக்தியை வெளிப்படுத்தும் திறனில் மாறுபடும்.

 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்

இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் தவிர்த்து, எ்ச்5 என்ற பெயரில் அழைக்கப்படும் அட்மாஸ் என்ற பிரிமியம் எஸ்யூவி மாடலையும் டாடா காட்சிப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஸ்யூவி லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மாடல். இது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும்.

 டாடா எக்ஸ்451 பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டீசர்

டாடா டியாகோ, டீகோர் மற்றும் நெக்ஸான் வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரும், எஸ்யூவியும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தமாக 17 விதமான புதிய இருசக்கர வாகனங்களை சுஸுகி அறிமுகம் செய்கிறது. ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் என இருவேறு வாகன பிரிவுகளில் சுஸுகியின் புதிய தயாரிப்புகள் வெளிவருகின்றன.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

அதில் புர்க்மன் ஸ்டீரிட் ஸ்கூட்டர், கம்பிளிட்டி புல்டு யூனிட் (சிபியூ), இந்தியாவிற்கான சுஸுகியின் தயாரிப்புகள், டர்ட் பைக்ஸ் மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் ஆர் , சுஸுகி மோட்டோ ஜிபி ஆகிய பைக்குகள் அடக்கம்.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

இதுதவிர வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்.டி மற்றும் புதிய புர்க்மன் ஸ்கூட்டர் என மேலும் இரண்டு இருசக்கர மாடல்களை சுஸுகி எக்ஸ்போவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

இந்தியாவிற்காக சுஸுகி கொண்டு வரும் பைக் மாடல்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மோட்டார் சைக்கிள் இன்ட்ரூடர் 155. க்ரூஸர் வகை மாடலாக தயாரிக்கப்பட்டுள்ள இன்ட்ரூடர் 155, 2018 ஆட்டோ எக்ஸ்போவின் பெரிய எதிர்பார்ப்பை பெற்ற பைக்.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

புர்க்மன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் பற்றிய எந்த தகவல்களையும் இதுவரை சுஸுகி வெளியிடவில்லை. எனினும் அதில் ஆக்சஸ் 125 மாடலில் உள்ள அதே செயல்திறன் இந்த மாடலில் இடம்பெறலாம் என தெரிகிறது.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

கூடவே அப்ரிலியா எஸ்.ஆர் 150 மற்றும் வெஸ்பா 150 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக புர்க்மன் ஸ்கூட்டர் மாடலை சுஸுகி 150சிசி திறனில் வெளியிடலாம் என்றும் தகவல்கள் கிடைக்கபெறுகின்றன.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் 2ம் அரங்கத்தில் சுஸுகி தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இங்கு இந்தியாவிற்கான தயாரிப்புகள் மற்றும் சர்வதேச சந்தைக்கான மாடல்கள் என இரண்டுமே இடம்பெறும்.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

கூடுதலாக ஜிக்ஸர் கப் ரேஸ் பைக் மற்றும் 2018 சுஸுகி ஆர்.எம்- இசட் 450, 2018 சுஸுகி ஆர்.எம்- இசட் 250, 2018 சுஸுகி டி.ஆர்-270 போன்ற மோட்டார்கிராஸ் வேரியன்டுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

இந்தியாவிற்கான லைன்-அப்பில் சுஸுகி ஏக்சஸ், சுஸுகி ஜிக்ஸர் 155 மற்றும் இன்ட்ரூடர் ஆகிய மாடல்களை அரங்கத்தில் இடம்பெற செய்கின்றது.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

இந்தியா 2018 ஆட்டோ எக்ஸ்போ குறித்து பேசிய சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சதோஷி உச்சிதா, இந்தாண்டில் ஒரு பெரிய வெற்றியை காண சுஸுகி எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களுடன், புதிய வரவு தயாரிப்புகளும் இணைந்து 2020ம் ஆண்டில் ஒரு மில்லியன் வாகன விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற சுஸுகியின் கனவை நிறைவேற்றும் என்று சதோஷி உச்சிதா தெரிவித்தார்.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

சுஸுகியின் புதிய தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் என்றுமே பெரியளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது க்ரூஸர், அட்வென்ச்சர் டூரர் என அந்நிறுவனம் வெளியிடும் வாகனங்களும் பெரிய எதிர்பார்ப்பை வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய 17 விதமான இருசக்கர வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் சுஸுகி: அம்மோடியோவ்..!!

விரைவில் நடைபெறவுள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய வெளியீட்டிற்கு பிறகான உடனடி தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழுடன்.

மேலும்... #டாடா #tata #auto expo 2018
English summary
Tata Motors has revealed a new teaser image of the X451 premium hatchback which reveals the headlamp cluster and bonnet of the car.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark