டாடா நெக்ஸான் ஏரோ மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

Written By:

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அரங்கம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. டாடா எச்5எக்ஸ், டாடா 45எக்ஸ் போன்ற கான்செப்ட் மாடல்கள் எல்லோரையும் கவர்ந்து இழுத்தது போன்றே, அந்த நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கும் நெக்ஸான் காரின் கஸ்டமைஸ் மாடல் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

டாடா நெக்ஸான் ஏரோ என்ற பெயரில் இந்த மாடல் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. கூடுதல் அலங்காரத்துடன் இந்த நெக்ஸான் காரில் பல ஆக்சஸெரீகளும், ஸ்டிக்கர் வேலைப்பாடுகளும் கவர்வதாக இருக்கின்றன. கார் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி இந்த அலங்கார பேக்கேஜை வாங்கும் விதத்தில் இதனை முன்னோட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது டாடா.

 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

இரண்டுவிதமான பேக்கேஜில் இந்த கஸ்டமைஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பியானோ பிளாக் என்ற பளபளப்பான கருப்பு வண்ண கூரை, பாடி ஸ்கர்ட், பம்பர் புரொடெக்டர் மற்றும் பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களுடன் அட்டகாசமாக மாறி இருக்கிறது டாடா நெக்ஸான் கார்.

 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

உட்புறத்தில் சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு ஆகிய இடங்களில் விசேஷ வண்ணத்திலான அலங்கார டீக்கெல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

ஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார ஸ்டிக்கர்கள் அடங்கிய பேக்கேஜ் தவிர்த்து, தனித்தனியாகவும் ஆக்சஸெரீகளை வாங்குவதற்கான வசதியையும் நெக்ஸான் வாடிக்கையாளர்களுக்கு டாடா வழங்க உள்ளது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களில் உள்ள கார் கான்ஃபிகரேட்டர் சாதனத்தின் மூலமாக, தேவையான ஆக்சஸெரீகளை பொருத்தி பார்த்து தேர்வு செய்யும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

அலங்காரத்தை தவிர்த்து எஞ்சின் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் இல்லை. டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர்ர டர்போசார்ஜ்டு எஞ்சின் 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

டாடா நெக்ஸான் காருக்கான ஏரோ மற்றும் ஆக்டிவ் ஆகிய இரண்டு கூடுதல் ஆக்சஸெரீ பேக்கேஜ்களுக்கான கூடுதல் கட்டணம் குறித்த இதுவரை தகவல் இல்லை. எனினும், ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த ஆக்சஸெரீ பேக்கேஜ் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மத்தியில் இந்த ஆக்சஸெரீ பேக்கேஜ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பபடும்.

 டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் அறிமுகம்!

காருக்கான கூடுதல் அலங்கார வசதிகளை கார் நிறுவனங்களே நேரடியாக வழங்குவது வரவேற்கத்தக்கது. அத்துடன், தரமான ஆக்சஸெரீ மற்றும் வாரண்டி பிரச்னைகளை தவிர்க்க இவை உதவும். டாடா நெக்ஸான் ஏரோ பேக்கேஜ் மூலமாக தங்களது நெக்ஸான் காரை தனித்துவப்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும்.

மேலும்... #டாடா #tata #auto expo 2018
English summary
Tata Motors has brought the best of products, concepts and several versions of its vehicles at the Auto Expo 2018. One among them is the Tata Nexon Aero. The Tata Nexon Aero was showcased at the Auto Expo 2018 and previews customisation options for the Tata SUV.
Story first published: Monday, February 12, 2018, 10:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark