2018 ஆட்டோ எக்ஸ்போ: டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

Written By:

அறிவித்தபடியே டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வந்தது.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் புதிய ஏஎம்டி வேரியன்ட் அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இதனுடைய விலை தற்போதைய மாடலை விட ரூ.30,000 வரை கூடுதலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

இந்தியாவில் இந்த கார் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் டியூவி 300 கார்களுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டாடாவின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட நெக்ஸான் கார் 1.2 லிட்டர் டர்போசார்ஜிடு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சின் தேர்வுகளில் வெளிவருகிறது.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

இதில் மேனுவல் கியர்பாக்ஸ் டாடா நெக்ஸான் பெட்ரோல் கார் 108 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல டீசல் எஞ்சின் பெற்ற மாடல் 108 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

இதே எஞ்சின் தேர்வுகளுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட புதிய நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி வேரியன்டுகளை டாடா விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

இதுதவிர டிரைவிங் சூழலுக்கு ஏற்ப ஓட்டுநர் காரின் இயக்கத்திறனை தேர்ந்தெடுக்க ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் போன்ற மூன்று வித டிரைவிங் மோடுகள் நெக்ஸான் ஏஎம்டி காரில் வழங்கப்படுகின்றன.

டிசைன் & அம்சங்கள்

டிசைன் & அம்சங்கள்

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் இருக்கும் அதே வடிவமைப்பு அம்சங்கள் தான் இதே காரிலும் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஏஎம்டி நெக்ஸான் எஸ்யூவி வேரியன்ட் எட்னா ஆரஞ்சு என்ற புதிய நிறத்தில் கூடுதலாக விற்பனைக்கு வரும்.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

தற்போதைய நெக்ஸான் காரில் பயன்பாட்டில் இருக்கும் அதே பாதுகாப்பு அம்சங்கள் புதிய ஏஎம்டி வேரியன்டிலும் உள்ளன. கூடுதலாக ஏஎம்டி நெக்ஸான் காரில் ஹில் அசிஸ்ட் இடம்பெறுகிறது.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நெக்ஸான் ஏஎம்டி காரின் வெளியீடு முதன்மையான நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்த காரை தவிர ஹெச்5எக்ஸ் எஸ்யூவி மற்றும் 45எக்ஸ் ஹேட்ச்பேக் ஆகிய புதிய கார்களையும் இந்த நிகழ்வில் டாடா உலக பார்வைக்கு வெளியிடுகிறது.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

இந்தியாவில் விற்பனையாகி வரும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி 300 போன்ற காம்பேட் எஸ்யூவி கார்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவையிலும் விற்பனையில் உள்ளது.

டாடா நெக்ஸான் காரில் புதிய ஏஎம்டி வேரியன்ட் வெளியீடு..!!

தொடர்ந்து காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் அதிகரித்து வரும் போட்டியால், நெக்ஸான் காரில் ஏஎம்டி வேரியன்டை அறிமுகப்படுத்துவது டாடாவிற்கு அவசியமாகிவிட்டது.

மேலும்... #டாடா #tata #auto expo 2018
English summary
Read in Tamil: Tata Nexon AMT Unveiled - Expected Launch Date & Prices, Features, Images. Click for Details...
Story first published: Wednesday, February 7, 2018, 17:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark