TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
விற்பனையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை வீழ்த்திய டாடா நெக்ஸான்!
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மூன்று மாடல்களில் மாருதி பிரெஸ்ஸா முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரண்டாம் இடத்திற்கு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் இடையிலான போட்டி உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாத விற்பனை நிலவரத்தின்படி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை விற்பனையில் வீழ்த்தி சாதித்துள்ளது டாடா நெக்ஸான் எஸ்யூவி. கடந்த மாதத்தில் 4,128 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. அதே மாதத்தில் 4,717 டாடா நெக்ஸான் எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன.
கிட்டத்தட்ட 600 கார்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் டாடா நெக்ஸான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த விஷயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
மாருதி பிரெஸ்ஸா வந்தபோது, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை அதிரடியாக ரூ.1 லட்சம் வரை குறைக்கப்பட்டது. மேலும், போட்டியை சமாளிக்க அவ்வப்போது புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்து வருகிறது ஃபோர்டு நிறுவனம். ஓர் ஆண்டு இடைவெளிக்குள் இரண்டு புதிய மாடல்கள் வந்துவிட்டன.
இந்த சூழலில், நேற்று புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், தோதான விலை, ஸ்டைலான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.
அதேநேரத்தில், இந்த ரகத்தில் மிகச் சிறப்பான தேர்வு என்றால் அது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்தான் என்றால் மிகையில்லை. டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள் மற்றும் மறுவிற்பனை மதிப்பில் சிறந்த மாடலாக விளங்குகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்.
அண்மையில் டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களிலும், மாருதி பிரெஸ்ஸா டீசல் ஏஎம்டி மாடல்களிலும் விற்பனைக்கு வந்துள்ளன. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் பெட்ரோல் மாடலில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. இதனால், வரும் மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை சற்று ஏற்றம் பெறும் வாய்ப்புள்ளது.