டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

Written By:

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் காரின் மின்சார மாடல் கிரேட்ட்ர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாமோ ரேஸ்மோ என்ற அடக்க ரக ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடலை முதல்முறையாக அறிமுகம் செய்தது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் தயாரிப்பு நிலைக்கு கண்டிப்பாக கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

இந்த சூழலில் இந்த காரை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இந்த சூழலில், கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ரேஸ்மோ மற்றும் ரேஸ்மோ காரின் மின்சார மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், சிசர் டோர் அமைப்புடைய கதவுகள் என மிக அசத்தலாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒட்டுமொத்த டிசைன் நவீன கால டிசைன் தாத்பரியங்களுடன் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஜெர்மனி நாட்டின் உயரிய டிசைன் விருதுக்கும் டாடா ரேஸ்மோ தேர்வானது.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

டாடா ரேஸ்மோ கார் 3,835மிமீ நீளமும், 1,810மிமீ அகலமும், 1,208மிமீ உயரமும் கொண்டது. 2,430மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டது. 165மிமீ தரை இடைவெளியுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் ரேஸ்மோ மின்சார காரின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்த தகவல் இல்லை.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

அதேநேரத்தில், பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் பெட்ரோல் மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடும்.

டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

பெட்ரோல் மாடல் ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக டாடா தெரிவித்திருந்தது. இந்த சூழலில் டாடா டாமோ ரேஸ்மோ கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதால், மீண்டும் இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும்... #டாடா #tata #auto expo 2018
English summary
Tata Racemo Electric Showcased At Auto Expo 2018.
Story first published: Saturday, February 10, 2018, 13:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark