டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படுகிறது!

டாடா ரேஸ்மோ கார் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

By Saravana Rajan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில்ல காட்சிக்கு வைக்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா நகரில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரேஸ்மோ என்ற புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட்டை காட்சிப்படுத்தியது. டாடா மோஃப்ளெக்ஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

இத்தாலியின் டூரின் நகரில் உள்ள டாடா மோட்டார்ஸ் டிசைன் ஸ்டூடியோவில்தான் ரேஸ்மோ கார் வடிவமைக்கப்பட்டது. 2 கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த அடக்க வகை ஸ்போர்ட்ஸ் கார் மாடல் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

டாடா ரேஸ்மோ கார் இரண்டு வேரியண்ட்டுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்கள் பொருந்திய ரேஸ்மோ ப்ளஸ் என்ற வேரியண்ட்டிலும், சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கான ரேஸ்மோ வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

Recommended Video

Auto Rickshaw Explodes In Broad Daylight
டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

ரேஸ்மோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 186 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருந்தது. பேடில் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்பட்டு இருந்தது.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வந்தது. டாடா ரேஸ்மோ கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டும் வல்லமை கொண்டதாகவும், 800 கிலோ எடை கொாண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

வெளிப்புறத் தோற்றம் போன்றே உட்புறத்திலும் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் மிக நவீன முறையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உட்புறத்தில் சிவப்பு வண்ண அலங்கார பாகங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

புதுமையான வடிவமைப்புகளுக்காக ஜெர்மனி நாட்டின் உயரிய டிசைன் விருதையும் டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் பெற்றது. இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த காரை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதில்லை என்ற முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்தது. இது கார் பிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

எனினும், நாளை துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் பார்வைக்கு வைக்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ஒருவேளை, கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டால் பார்வையாளர்களை வெகுவாக கவரும்.

டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருகிறது!

அதேபோன்று, இது தயாரிப்புக்கு செல்லுமா என்பது குறித்த தகவலும் தெரிய வர வாய்ப்பு இருக்கும். தயாரிப்புக்கு செல்லும் பட்சத்தில், உலக அளவில் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களை டாடா ரேஸ்மோ கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமில்லை.

Most Read Articles
மேலும்... #auto expo 2018
English summary
Tata's Tamo Racemo sports car to be showcased at the Auto Expo 2018. The 2-door sports coupe was first unveiled at the 2017 Geneva Motor Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X