மின்சார திறன் பெற்ற டியாகோ இவி & டிகோர் இவி கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய டாடா..!!

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிகோர் மற்றும் டியாகோ கார்களின் மின்சார திறன் பெற்ற மாடல்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

இங்கிலாந்தில் டாடாவிற்கு சொந்தமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு தான் டிகோர் மற்றும் டியாகோ கார்களின் மின்சார திறன் பெற்ற மாடல்கள் உருவாக்கப்பட்டன.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் சப்-காம்பேக்ட் செடான் மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்சார கார்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் திறன்களில் விற்பனையில் உள்ள டியாகோ, டிகோர் கார்களை அப்படியே மின்சார திறனுக்கு ஏற்றவாறு டாடா தயாரித்துள்ளது.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

தோற்றத்தில் இந்த கார்கள் எந்தவித மாறுபாடுகளையும் பெறவில்லை. மின்சார திறன் என்பதால், டிகோர் மற்றும் டியகோ என்ற பெயருக்கு அருகில் இ.வி என்ற பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

உள்கட்டமைப்பில் கியருக்கு பதிலாக இவற்றில் ஒரு கினாப் இடம்பெற்றுள்ளது. இதுதான் எஞ்சின் மற்றும் மின்சார திறன் பெற்ற டிகோர், டியாகோ கார்களுக்கு இடையிலிருக்கும் வித்தியாசம்.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

இந்த கார்களில் எலெக்ட்ரிக்கா இ.வி என்ற நிறுவனம் தயாரித்துள்ள மின்சார திறன் அளிக்கும் சிஸ்டத்தை டாடா பொருத்தியுள்ளது.

3 ஃபேஸ் ஏசி மோட்டாரான இது 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இருந்தாலும் இதற்கான சார்ஜிங், டிரைவிங் திறன் பற்றி டாடா எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

டாடாவின் சனந்த் ஆலையில் தான் டிகோர் இ.வி மற்றும் டியாகோ இ.வி கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. முன்னதாக அரசின் எரிபொருள் மேலாண்மை நிறுவனம் தான் இந்த கார்களை பயன்படுத்த ஆர்டர் எடுத்துள்ளது.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சுமார் 350 எண்ணிக்கையில் டிகோர், டியாகோ கார்களை அந்நிறுவனத்திற்கு டாடா வழங்கியுள்ளது.

மின்சார திறன் கொண்ட டிகோர், டியாகோ கார்களை டாடா இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியிடும் என எதிர்பார்கக்ப்படுகிறது.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

அவ்வாறு வரும் போது இந்த இரண்டு கார்களுக்கும் ரூ. 10 லட்சம் வரை டாடா மோட்டார்ஸ் விலை நிர்ணயம் செய்யும் என ஆட்டோ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

அனைவருக்கும் ஏற்ற வகையில் கார் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது டாடா. தற்போது விற்பனையில் கலக்கி வரும் டிகோர், டியாகோ கார்களை டாடா மின்சார திறனுக்கு மாற்றியுள்ளது பாராட்டத்தக்கது தான்.

டாடாவின் டியாகோ இவி & டிகோர் இவி கார்கள் அறிமுகம்..!!

அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் மாடலாக உள்ள டிகோர் மற்றும் டியாகோ கார்கள் மின்சார தேர்விலும் தயாரிக்கப்படுவது மின்சார வாகன விற்பனையை மேலும் வலிமைப்படுத்தும்.

English summary
Read in Tamil: Tata Tiago EV And Tigor EV Showcased; Expected Launch Date & Price, Specs & Features. Click for Details...
Story first published: Sunday, February 11, 2018, 10:48 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark