ஸ்போர்டி தோற்றத்தில் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்களை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

Written By:

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டன.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

சப்-காம்பேக்ட் வகை மாடலான இந்த கார்களின் பெயரில் உள்ள ஜெடிபி என்பது ’ஜெயம் டாடா ஃபெர்பாமன்ஸ்’ என்பதற்கான சுருக்கம்..

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

இரண்டு கார்களிலும் 1.2 லிட்டர் டர்போசார்ஜிடு 3 சிலிண்டர் கொண்ட எஞ்சின் தான் வழங்கப்பட்டுள்ளது. இதே எஞ்சின் நெக்ஸான் எஸ்யூவி காரிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

டாடா டிகோர் ஜெடிபி & டியாகோ ஜெடிபி கார்கள் மூலம் 109 பிஎச்பி பவர் மற்றும் 150 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். ஜெடிபி இணைந்திருப்பதன் மூலம் காரின் பவர் கொஞ்சம் கூடியுள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

இந்த கார்களில் டாடா நிறுவனம் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது. எனினும் அந்நிறுவனம் இந்த கார்களில் செயல்திறன் குறித்த எந்த தகவலக்ளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் பெரிய ஏர் டேம் மற்றும் ஃபாக் விளக்குகள், ஏர் வென்டஸ், புகைப்படிந்த முகப்பு விளக்குகள், சைடு ஸ்கெர்ட்ஸ் மற்றும் ரியர் டிஃப்யூஸர் போன்றவை வெளிப்புற கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

சராசரியான டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் இருக்கும் 15 இஞ்ச் டைமன்ட் கட் அளவிலான சக்கரங்கள் தான் இந்த ஜெடிபி வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது.

கார்களின் முன் மற்றும் பின் சக்கரங்கள் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆகியவை பிரேக்கிங் தேவைக்காக முறையே வழங்கப்பட்டுள்ளன.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

உட்புற கட்டமைப்பில் டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் முற்றிலும் கருப்பு நிற தீம்மை பெற்றுள்ளன. தொடர்ந்து இருக்கைகளுக்கு உயர ரக லெதர் மற்றும் ஸ்டீயரிங்கிற்கு அலுமினியத்திலான துடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

ஹ்ர்மன் 8 ஸ்பீக்கர் கனெட்டிவிட்டியை பெற்ற உயர் ரக இன்ஃப்பொடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது பெரிய கவனத்தை ஈர்க்கிறது.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

டாடாவின் இந்த புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் புதிய நிறம், தேர்வு மற்றும் ஸ்போர்டி தோற்றத்தில் வந்திருப்பது பல கார் ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாடாவின் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்கள் வெளியீடு

ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் மாடல்களில் சமகாலக்கட்டத்திற்கு ஏற்றவாறு அம்சங்களுடன் இந்த இரண்டு கார்களும் வெளிவந்திருப்பது, இது எப்போது விற்பனைக்கு வரும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

English summary
Read in Tamil: Tata Tiago JTP & Tigor JTP Unveiled - The Sporty Versions Of The Tiago & Tigor. Click for Details...
Story first published: Friday, February 9, 2018, 19:16 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark