இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

நவீன கார்கள் எல்லாம் தற்போது ஏர் பேக் வசதி வந்து விட்டது. அரசு அதை கட்டாயமாக்காவிட்டாலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக அது கார் தயாரிப்பு நிறுவனங்களால் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மேலும் ஏர் பேக் உள்ள கார்களை தான் மக்களும் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். மற்ற கார்களை விட ஏர் பேக் ஆப்ஷன் கொண்ட வேரியன்ட் தான் அதிகம் விற்பனையாகிறது.

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

மக்கள் தாங்களின் பயணத்தின் மீது உள்ள பாதுகாப்பை உறுதி செய்யவதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. அப்படி இருக்கையில் சிலர் காரில் செய்யும் சில காரியங்கள், ஆல்டரேஷன்கள் இந்த் ஏர்பேக்கை செயல்படவிடாமல் தடுக்கிறது.

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

பம்பர் / புல்பார்

கார் விபத்தில் சிக்குவது சென்சார் மூலம் உணரப்பட்டே ஏர் பேக்குகள் வெளியாகிறது. அதன் மூலம் பயணிகளுக்கு காயம் ஏற்படுவதும், உயிரிழப்பதும் குறைகிறது. ஆனால் காரின் முகப்பு பகுதியில் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் புல் பாரால் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் சென்சாரால் அதை உணர முடியாமல் போய்விடும். அதனால் உங்களுக்கு ஏர் பேக் வேலை செய்யாது. இதனால் நீங்கள் காரின் முகப்பு பகுதியில் புல்பார் பொருத்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

டேஷ் போர்டில் கால்களை வைப்பது

காரில் செல்லும் போது முன்பக்கம் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள் சிலர் கால்களை டேஷ் போர்டில் மீது போட்டுக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. பொதுவாக ஏர் பேக் என்பது சிறிய எக்ஸ்பிளோஷன் ஏற்பட்டு பின்பு தான் வெளியேறும் கண்ணிமைக்கும் நொடியில் நடக்கும் இந்த எக்ஸ்புளோஷனால் உங்கள் கால்களில் பெரும்பாதிப்பு ஏற்படலாம் நிரந்திர ஊனம் ஏற்படும் அளவிற்கு கூட அதில் பாதிப்புகள் இருக்கும்.

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

ஸ்டியரிங் வீல் அருகே உட்காராதீர்கள்

பொதுவாக கார்களில் டிரைவர்களுக்கு வழங்கப்படும் ஏர் பேக் ஸ்டியரிங் வீலில் தான் பொருத்தப்படும். இதனால மேல் சொன்னது போல் எக்ஸ்புளோஷன் ஏர்பட்டு டிரைவருக்கு முகத்தில் பெரும் பாதிப்பைஏற்படுத்தக்கூடும் இதனால் ஸ்டியரில் வீலில் இருந்து சற்று தூரம் தள்ளி இருப்பதே சிறந்தது. மேலும் இந்த ஏர் பேக் ஒரு மனிதம் காரில் அமர்ந்து ஸ்டியரிங் வீலை புடித்த படி இருக்கும் போஷனிற்கு ஏற்ற அவர்களை காப்பாற்றும் நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

சீட் பெல்ட் அணியாமல் இருத்தல்

காரில் சீட் பெல்ட் அணிவது மிகவும் முக்கியமானது. ஏர் பேக் டெஸ்ட் செய்யப்படும் போது எல்லாம் சீட் பெல்ட் அறிந்த பொம்மையை வைத்தே டெஸ்ட் செய்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் தான் டிசைன் செய்யப்பட்டிருக்கும் அதனால் ஏர் பேக் சரியாக வேலை செய்ய நீங்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சிலகார்களில் சீட் பெல்ட் லாக் ஆகவில்லை என்றால் ஏர் பேக்வும் வேலை செய்யாது. இதனால் சீட் பெல்ட் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

சீட் கவரை தவிர்க்கலாமே

சில நவீன ரக கார்களில் சைடுகளிலும் ஏர் பேக்குகள் வரும் அளவிற்கு டிசைன் செய்யப்பட்டிருக்கும். விலை உயர்ந்த சொகுசு கார்களில் இந்த வசதிகள் இருக்கிறது. இந்த சைடு ஏர் பேக்குகள் எல்லாம் சீட்களின் சைடு பகுதிகளில் இருந்து தான் வருகிறது. அப்பகுதியில் உள்ள சீட் கவரை கிழத்து கொண்டு வரும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த மாதிரியான கார்களில் நீங்கள் வெளி மார்கெட்டில் கிடைக்குள் சீட் கவர்களை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். கம்பெனி சாவீஸ் சென்டர்கள் பரிந்துரை செய்யும் சீட்கவர்களை மட்டுமே பொருத்த வேண்டும்.

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

டேஷ் போர்டில் பொருட்களை வைப்பது.

டேஷ் போர்டில் காரின் அழகிற்காக சிலர் பொம்மைகள், போன்ற சில பொருட்களை வைப்பார்கள், ஏர் பேக்குகள் டேஷ் போர்டை உடைத்து கொண்டு கண்ணிமைக்கு நொடிக்கு முன்பாகவே விரிவடையும் தன்மைகொண்டது. டேஷ் போர்டு மீது ஏதும் பொம்பைகள், போட்டோ பிரேம்கள் போன்ற பொருட்கள் இருந்தால் அது உடைந்து பயணிப்பவர்களை காயப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. முக்கியமானர் அவர்கள் கண்களை நேரடியாக தாக்க அதிக வாய்ப்பு உள்ளது இதனால் டேஷ் போர்டில் பொருட்களை வைப்பதை தவிர்த்து விடுங்கள்

இந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...

குழந்தைகளுக்கான சீட்

சில சிறிய குடும்பத்தினர் தங்கள் குடும்பத்துடன் வெளியே செல்ல நினைக்கும் போது குழந்தைகளை டிரைவர் சீட்டின் பக்கத்து சீட்டில் முன்பு உள்ள டேஷ்போர்டில் குழந்தைகள் சீட்டை பொருத்துவார்கள். அப்படி பொருத்துவதால் ஏர் பேக் வெளியில் வரும் நேரம் டேஷ் போர்டில் பொருத்தப்பட்டுள்ள சீட்டில் அமர்ந்திருக்கும் குழந்தை தூக்கி வீசப்படலாம் அதனால் இதை தவிர்ப்பது நலம்.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
how to prevent airbag from not working. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X