புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

Written By:

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அடுத்து ஒரு புதிய வரவாக டொயோட்டா யாரிஸ் கார் களமிறங்க இருக்கிறது. இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் மூலமாக இந்தியர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் டொயோட்டா நிறுவனத்திடமிருந்து வரும் இந்த புதிய மாடல் செடான் கார் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட ஜாம்பவான் மாடல்களுக்கு இந்த புதிய டொயோட்டா யாரிஸ் நிச்சயம் குறிப்பிடத்தக்க போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

புதிய டொயோட்டா யாரிஸ் கார் ஜி, வி மற்றும் விஎக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இதில், ஜி வேரியண்ட் மிக குறைவான விலையிலான வேரியண்ட்டாக இருக்கும். வி மற்றும் விஎக்ஸ் வேரியண்ட்டுகளில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

புதிய டொயோட்டா யாரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே வர இருக்கிறது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் சக்தி மற்றும் டார்க் திறன் குறித்து இதுவரை தகவல் இல்லை. ஆனால், இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

புதிய யாரிஸ் காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. 7 ஸ்டெப் பேடில் ஷிஃப்ட் வசதியும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் இடம்பெற்றிருக்கும். மற்றொரு விஷயம், அனைத்து வேரியண்ட்டுகளிலுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருப்பது முக்கிய விஷயம்.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

புதிய டொயோட்டா யாரிஸ் காரில் டீசல் மாடல் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்த மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து கார் மாடல்களிலும் டீசல் எஞ்சின் மாடல் இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த காரில் இல்லாதது முக்கிய விஷயமாக இருக்கிறது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் டொயோட்டா எட்டியோஸ் காரில் இடம்பெறும் டீசல் எஞ்சினுடன் வர வாய்ப்பு இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

புதிய டொயோட்டா யாரிஸ் காரில் சாவி போடாமல் பட்டனை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, நெடுஞ்சாலைகளில் ஆக்சிலரேட்டர் பெடலை மிதிக்காமலேயே கார் குறிப்பிட்ட வேகத்தில் செல்வதற்கான க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, பின்புற பயணிகளுக்கு தனி ரூஃப் ஏசி வென்ட்டுகள், ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். இதனை கை அசைவு மூலமாக கட்டுப்படுத்தும் வசதியும் இருக்கும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, கூல்டு க்ளவ் பாக்ஸ், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதியும் இடம்பெற்றிருக்கும்.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த காரில் 4.2 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் கொடுக்கப்பட்டு இருக்கும். லெதர் இருக்கைகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

புதிய டொயோட்டா யாரிஸ் கார் பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அதிக அளவில் உள்ளூர் உதிரிபாகங்களுடன் தயாரிக்கப்பட இருப்பதால், விலை மிக சவாலாக இருக்கும். ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் குறித்த சிறப்புத் தகவல்கள்!

டொயோட்டா எட்டியோஸ் மற்றும் கரொல்லா ஆல்டிஸ் இடையிலான ரகத்தில் இந்த புதிய செடான் காரை டொயோட்டா நிலைநிறுத்த இருக்கிறது. வரும் மே மாதம் 18ந் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Things to Know about 2018 Toyota Yaris.
Story first published: Monday, April 2, 2018, 8:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark