ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு உறுதியான 4 கான்செப்ட் கார்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் கார்களில் விரைவில் தயாரிப்பு நிலையை எட்ட இருக்கும் கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புத்தம் புதிய கார் மாடல்களை உருவாக்கும்போது, அதன் மாதிரி மாடல்களை ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் கார் நிறுவனங்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம். அங்கு தனது கான்செப்ட் மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை கார் நிறுவனங்கள் ஆய்வு செய்து அதனை உற்பத்திக்கு கொண்டு செல்லும். சில கான்செப்ட் கார்கள் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படாது.

தேறிய 4 கான்செப்ட் மாடல்கள்:

தேறிய 4 கான்செப்ட் மாடல்கள்:

இந்த நிலையில், அண்மையில் கிரேட்டர் நொய்டாவில் நடந்து முடிந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏராளமான கான்செப்ட் கார்கள் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. அதில், விரைவில் உற்பத்தி நிலையை எட்ட இருக்கும் கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 01. மாருதி ஃப்யூச்சர் எஸ்

01. மாருதி ஃப்யூச்சர் எஸ்

ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனம் பார்வைக்கு கொண்டு வந்த ஃப்யூச்சர் எஸ் என்ற மாதிரி கார் மாடல் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. பட்ஜெட் எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதே இந்த எஸ்யூவி மீது அதிக ஆவல் எழுந்தது. மாருதி நிறுவனத்தின் ஹார்ட்டெக் என்ற இலகு எடை கட்டமைப்பில் உருவாக்கப்பட இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு தேறிய 4 கான்செப்ட் கார்கள்!

இந்த காரில் சுஸுகி நிறுவனத்தின் 1.2 லிட்டர் கே- சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பபடும். அதேபோன்று, புதிய டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் மேனுவல் கியர்ரபாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
02. டாடா 45எக்ஸ் கான்செப்ட்

02. டாடா 45எக்ஸ் கான்செப்ட்

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பார்வைக்கு கொண்டு வந்த 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் ரக மாதிரி கார் மாடலும் பார்ப்போரை கவர்ந்து இழுத்தது. மிக அட்டகாசமான டிசைனில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கான்செப்ட் கார் விரைவில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு தேறிய 4 கான்செப்ட் கார்கள்!

இந்த காரில் டாடா நிறுவனத்தின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கார் மிகச் சிறப்பான இடவசதியையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கும். ரூ.5 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும். அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

03. கியா எஸ்பி கான்செப்ட்

03. கியா எஸ்பி கான்செப்ட்

அடுத்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் முறைப்படி களமிறங்குவதற்கான முயற்சிகளில் கியா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் அந்த நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த எஸ்பி கான்செப்ட் என்ற எஸ்யூவி ரக கார் மிகச் சிறப்பான டிசைன் அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு தேறிய 4 கான்செப்ட் கார்கள்!

இந்த கார் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களை இந்த எஸ்யூவியும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இடையிலான விலை ரகத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. டாடா எச்5எக்ஸ்

04. டாடா எச்5எக்ஸ்

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வரும் புதிய பிரிமியம் எஸ்யூவிக்கான மாதிரி மாடல் எச்5எக்ஸ் என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. முதல் பார்வையிலேயே எல்லோரையும் க்ளீன் போல்டு ஆக்கிய இந்த கான்செப்ட் கார் டாடா மோட்டார்ஸ் டிசைன் வல்லமையை உலகுக்கு பரைசாற்றும் படி இருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு தேறிய 4 கான்செப்ட் கார்கள்!

லேண்ட்ரோவர் ஸ்போர்ட் எல்8 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவியில்ல ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட இருக்கும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொராுத்தப்பட இருக்கிறது. இதே எஞ்சின்தான் ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.15 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Launch Worthy Concept Cars At Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X