ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் 7 கார் மாடல்களின் விபரங்களை காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் மாபெரும் சர்வதேச வாகன கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் வழக்கமான உற்சாகத்துடன் நடந்து முடிந்துள்ளது. இதில், நூற்றுக்கணக்கான கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதில், ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த லட்சக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த டாப் - 7 கார் மாடல்களின் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

01. மாருதி ஸ்விஃப்ட்

01. மாருதி ஸ்விஃப்ட்

இந்திய ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையாக விளங்கும் மாருதி ஸ்விஃப்ட் கார் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டது. இந்த புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, கார் வாங்க காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் இந்த கார் தன்பால் ஈர்த்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் முக அமைப்பு, பின்புற டிசைன் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஸ்விஃப்ட் காருக்கு உரிய அந்த தனித்துவமான டிசைன் தக்க வைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இந்த காரில் 84 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டார்ட்- ஸ்டாப் வசதிகளும், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டும் இருக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.4.99 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

02. கியா எஸ்பி கான்செப்ட்

02. கியா எஸ்பி கான்செப்ட்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் களமிறங்க இருக்கிறது. இதற்காக, பல கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் இருந்த தனது அரங்கத்தில் நிறுத்தி இருந்தது. அதில், கியா எஸ்பி என்ற பெயரில் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்த எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

இந்திய மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய எஸ்யூவி கான்செப்ட் இந்திய மார்க்கெட்டிற்கு என உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் கியா நிறுவனம் உற்பத்தியை துவங்கும்போது இந்த கார் உற்பத்திக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

இந்த எஸ்யூவி கான்செப்ட் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதே வடிவமைப்பு தயாரிப்பு நிலை மாடலிலும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. மிகச் சிறப்பான டிசைனும், வண்ணக் கலவையும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

03. ஹோண்டா அமேஸ்

03. ஹோண்டா அமேஸ்

புதிய மாருதி டிசையர் வந்த பின்னர் ஹோண்டா அமேஸ் காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு, வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. டிசையருக்கு நேர் போட்டி நான்தான் என்பதுபோல டிசைன் முற்றிலும் மாறி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

தாழ்வாக இருந்த பானட் அமைப்பு உயர்த்தப்பட்டு, இப்போது மிகச் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புற டிசைனும் மாற்றம் செய்யப்பட்டு முற்றிலும் புதிய கார் மாடலாக மாறிவிட்டது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

புதிய ஹோண்டா அமேஸ் காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது. இந்தியாவின் குறைவான விலை சிவிடி டீசல் கார் மாடல் என்ற பெருமையுடன் சிறந்த தேர்வாக இருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரண்டு ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட இருக்கிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் ஏப்ரலில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

 04. டாடா 45எக்ஸ் கான்செப்ட்

04. டாடா 45எக்ஸ் கான்செப்ட்

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் அரங்கம் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. டாடா 45எக்ஸ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலானது, டாடா மோட்டார்ஸ் கார்களின் டிசைன் வேற லெவலுக்கு முன்னேறி வருவதையே காட்டுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக இருக்கும். அசத்தலான முகப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு மற்றும் கம்பீரமான சக்கரங்களுடன் பார்வையாளர்களை ஒரு கணம் திகைத்து நிற்க வைத்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. கான்செப்ட் மாடலின் டிசைன் அப்படியே தயாரிப்பு நிலை மாடலிலும் தக்க வைக்கப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 05. டொயோட்டா யாரிஸ்

05. டொயோட்டா யாரிஸ்

இந்தியாவின் டாப்- 5 பிராண்டுகளில் ஒன்றாக விளங்கும் டொயோட்டாவிற்கு ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்கள் போட்டி போடும் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட் மீது நீண்ட நாளாக கண் இருந்து வருகிறது. அதற்கு சரியான மாடலை களமிறக்குவதற்கு திட்டம் போட்டு, ஒருவழியாக ஆட்டோ எக்ஸ்போ மூலமாக புதிய யாரிஸ் காரை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்துவிட்டது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டிசைன் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா அளவுக்கு புகழ்ந்து தள்ளுபடி இல்லையென்றாலும், ஒரு புதிய தேர்வாக அமையும். டொயோட்டா கார்களின் நம்பகத்தன்மை, நீடித்து உழைக்கும் எஞ்சின் ஆகியவை இதற்கு வலு சேர்க்கும். இந்த காரில் பீஜ் இன்டீரியர், கூரையில் அமைக்கப்பட்டு இருக்கும் ரூஃப் ஏசி வென்ட் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

இந்த காரில் 108 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது. பின்னர் டீசல் மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

06. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஆல்- டெரைன்

06. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஆல்- டெரைன்

மோசமான நிலபரப்புகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மெர்சிடிஸ் பென்ஸ் இ- க்ளாஸ் ஆல்- டெரைன் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை வெகுவாக கவரந்தது. பொதுவாக சொகுசு செடான் கார்களின் தரை இடைவெளி மிக குறைவாக இருக்கும். மோசமான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவானதாக இருக்காது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

ஆனால், மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஆல்-டெரைன் மாடலானது, ஸ்டேஷன் வேகன் போன்று வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், இ க்ளாஸ் காரின் பூட் ரூம் எடுக்கப்பட்டு, ஸ்டேஷன் வேகன் போல மாற்றப்பட்டு இருக்கிறது. சாதாரண இ க்ளாஸ் சொகுசு காரைவிட தரை இடைவெளி 29மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 194 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவரை செலுத்தும் வசதி உள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், ரூ.65 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.

 07. டாடா எச்5எக்ஸ்

07. டாடா எச்5எக்ஸ்

ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்கள் அதிகம் மொய்த்த கான்செப்ட் மாடலாக டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த எச்5எக்ஸ் எஸ்யூவியை கூறலாம். மிக கம்பீரமாகவும், நவீன காலத்துக்கு ஏற்ற அட்டகாசமான தோற்றமும் இந்த எஸ்யூவி கான்செப்ட்டுக்கு கூட்டத்தை கூட்டியது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

இந்த எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. டாடா நிறுவனத்தின் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் இந்த புதிய மாடலை டாடா உருவாக்கி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்த டாப் - 7 கார் மாடல்கள்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும், ஃபியட் நிறுவனத்தின் புதிய 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் இந்த புதிய எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. மிக நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகளுடன் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.15 லட்ச ரூபாய் பட்ஜெட்டிலான எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

தற்போதைய காலத்தில் கார்களை டிராக் செய்வது மிக எளிதான ஒரு விஷயம். தொழில்நுட்பம் தெரிந்த யாருவேண்டுமானாலும் அதை ஜிபிஎஸ் உள்ளிட்ட மற்ற இணைக்கும் தொழில்நுட்பங்கள் வைத்து எளிதாக செய்துவிடலாம்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

குறிப்பாக போர் விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை கூட டிராக் செய்வது கூட எளிதானதாக உள்ளன . அதற்கென பிரத்யேகமான சில வலைதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா காரை டிராக் செய்ய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிதீவிர ரசிகர் ஒருவர் இணையதள கணக்கை தொடங்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

விண்வெளி தொழில்துறையில் பணியாற்றும் பென் பீயர்சென் என்ற மின்சாரவியல் பொறியாளர் www.whereisroadster.com என்ற முகவரியில் வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா காரின் அனைத்து நகர்வுகளையும் எளிதாக கண்டறியலாம் என தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

கடந்த 6ம் தேதி ஃப்ளோரிடா கென்னடி மையத்தில் இருந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த ஃபால்கான் ஹெவி ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தியது.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

இந்த வின்னோடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பயன்படுத்தி வந்த செர்ரி ரெட் நிறத்திலான டெஸ்லா ரோஸ்டர் கார் வைக்கப்பட்டு இருந்தது.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

மின்சார திறன் பெற்ற இந்த கார் 2017 டிசம்பர் மாதத்தில் உலக பார்வைக்கு வந்தது. துவக்க நிலையிலிருந்து 100 கி.மீ வேகத்தை 1.9 விநாடிகளில் எட்டிபிடிக்கும் திறன் பெற்றது இந்த கார்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடி விலை பெறும் இந்த ரோட்ஸ்டர் எஸ்யூவி கார் மணிக்கு 402 கி.மீ வேகத்தில் செல்லும். மின்சாரத்தில் இயங்கும் சூப்பர் காராகவே இது பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை தொடர்ந்து டெஸ்லாவின் தயாரிப்புகள் இந்தியா உட்பட அடுத்தடுத்து பல நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளன.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

இதை மனதில் வைத்து, முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் என்ற பெயரை பெற்று, அதன் மூலம் புதிய நாடுகளிலுள்ள கார் விற்பனை சந்தையை மொத்தமாக கைப்பற்றவே எலான் மஸ்க் இவ்வாறு சாதனை செய்தார் என்று கூறப்படுகிறது.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

தற்போது பூமியை விட்டு தொலை தூரம் சென்றுவிட்ட டெஸ்லா கார் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கும் தொலை தூரத்தில் உள்ளது. இதன் ஒவ்வொரு நகர்வையும் பல உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

இதை உணர்ந்துகொண்டு பொறியாளர் பென் பீயர்சென் தொடங்கியுள்ள வலைதள கணக்குதான் www.whereisroadster.com என்ற இணையதளம். இந்த வலைதளம் நாசா மற்றும் அதன் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் தரவரிசைக்குள் நுழைந்து டெஸ்லா காரின் ஒவ்வொரு அளவுருக்குகளையும் அங்கியிருந்து எடுத்து வழங்கும்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

www.whereisroadster.com குறித்த தகவல் வெளியானதிலிருந்து பல்வேறு மக்கள், இதற்குள் நுழைந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரோட்ஸ்டர் காரின் தகவல்களை தேடி படித்து வருகின்றனர்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

தனது இணையதள முகவரி பிரபலமாக தொடங்கியிருப்பது பென் பியர்சென்னிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவரும் எலான் மஸ்க் போல மிகவும் குறும்பு பிடித்தவர் போல.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

www.whereisroadster.com தளத்தில் கீழ் பகுதியில் பென் பியர்சன் இவ்வாறு கூறியுள்ளார், "இந்த தளம் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் அல்லது எலான் மஸ்க் உடன் எந்த விதத்திலும் இணைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. நான் விண்வெளி ஆர்வலன்" என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

எலான் மஸ்க் நிர்வகித்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பது மறுக்க முடியாத ஒன்று தான். ஆனால் பென் பியர்சன் போல பல ஆர்வ கோளாறுகள் முளைத்து எலான் மஸ்கின் இந்த சாதனையை மழுங்கடித்து விடுவார்கள் என்பது வானவியல் துறை சார்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

Most Read Articles
English summary
Top 7 cars that stole the show at Auto Expo 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X