ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் - 9 சிறப்பம்சங்கள்!!

Written By:

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதில், இந்த காரை வாங்க பரிசீலிப்பவர்கள் கவனிக்க வேண்டிய டாப் -9 சிறப்பம்சங்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

01. கவரும் தோற்றம்

01. கவரும் தோற்றம்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் தோற்றம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விதத்தில் பல்வேறு சிறப்பு ஆக்சஸெரீகளை பெற்றிருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ காரிலிருந்து வேறுபடுத்தும் புதிய பம்பர் அமைப்பு, 15 அங்குல அலாய் சக்கரங்கள், காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், ஸ்கிட் பிளேட் மற்றும் ரூஃப் ரெயில்கள் போன்றவற்றுடன் தனித்துவத்தை அளிக்கின்றன.

02. புதிய பெட்ரோல் எஞ்சின்

02. புதிய பெட்ரோல் எஞ்சின்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய 1.2 லிட்டர் டிராகன் வரிசை பெட்ரோல் எஞ்சின் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் - 9 சிறப்பம்சங்கள்!!

மூன்று சிலிண்டர்கள் கொண்ட இந்த பெட்ரோல் எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டர்போசார்ஜர் துணை இல்லாமல் அதிக சக்தியை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ஃபிகோ காரைவிட இந்த எஞ்சின் 7 பிஎச்பி கூடுதல் பவரையும், 8 என்எம் கூடுதல் டார்க் திறனையும் அளிக்கும்.

03. கிரவுண்ட் கிளியரன்ஸ்

03. கிரவுண்ட் கிளியரன்ஸ்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் தோற்ற வசீகரத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக தரை இடைவெளி கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. வழக்கமான ஃபிகோ காரைவிட 16 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், கரடுமுரடான சாலைகள் மற்றும் ஆஃப்ரோடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

04. சீட் அப்ஹோல்ஸ்ட்ரி

04. சீட் அப்ஹோல்ஸ்ட்ரி

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று இதன் சியன்னா சீட் அப்ஹோல்ஸ்ட்ரி. உட்புறத்தை பிரிமியமாக காட்டுவதுடன் அமர்ந்து செல்வதற்கு சொகுசான உணர்வை அளிக்கிறது. அதேபோன்று, மிதியடிகளும் மிக தரமானதாகவும், முழுமையானதாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு.

05. ஃபோர்டு சிங்க்- 3 சாஃப்ட்வேர்

05. ஃபோர்டு சிங்க்- 3 சாஃப்ட்வேர்

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிந்ததே இதனுடன் ஃபோர்டு சிங்க் -3 என்ற நவீன வசதிகளை தரும் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேரும் இந்த காரில் இடம்பெற்றிருக்கிறது.

 ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் - 9 சிறப்பம்சங்கள்!!

வாய்மொழி உத்தரவு மூலமாக ஆடியோ சிஸ்டம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சாஃப்ட்வேர்களையும் சப்போர்ட் செய்யும்.

 ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் - 9 சிறப்பம்சங்கள்!!

போன் அழைப்புகளை எளிதாக பேசுவதற்கும், கவனச் சிதறலை குறைக்கும் விதமாகவும் இது செயல்படும். விபத்து உள்ளிட்ட அவசர சமயங்களில் தானியங்கி முறையில் அவசர உதவி மையங்களுக்கு தகவல் அனுப்பும் வசதியையும் இந்த சிங்க்-3 சாஃப்ட்வேர் வழங்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் - 9 சிறப்பம்சங்கள்!!

பிள்ளைகள் அல்லது நண்பர்களிடத்தில் இரவல் கொடுக்கும்போது, அதிகபட்ச வேக வரம்பை குறைத்து வைத்து கொடுக்க முடியும். வேக வரம்பை கடந்து கார் வேகம் எடுக்கும்போது எச்சரிக்கை செய்யும் வசதி உள்ளது. சீட் பெல்ட் அணியவில்லை என்றாலும் எச்சரிக்கும். சாவி அருகில் இருந்தால் பட்டனை அழுத்தி காரை ஸ்டார்ட் செய்யும் வசதியையும் இந்த ஸ்மார்ட் கீ வழங்கும்.

07. பாதுகாப்பு அம்சங்கள்

07. பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள் அளிக்கப்படுகிறது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக ஏர்பேக்குகளை வழங்கும் வெகுசில மாடல்களில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரும் ஒன்றாக இருக்கும். அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் கவிழ்வதை தவிர்க்கும் ஆன்ட்டி ரோல்ஓவர் பிரிவன்ஷன் சிஸ்டம், மலைச்சாலைகளில் செல்லும்போது கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் லான்ச் அசிஸ்ட் வசதிகள் உள்ளன.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டாப் - 9 சிறப்பம்சங்கள்!!

அதுமட்டுமில்லை, கார் அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கான எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அதிக தரைப்பிடிப்புடன் செல்ல உதவும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கார் விபத்தில் சிக்கினால் எஞ்சினுக்கு எரிபொருள் சப்ளையை தானியங்கி முறையில் நிறுத்தும் வசதி, கார் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் வசதிகள் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் பாதுகாப்பு விஷயங்கள்.

08. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

08. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் இடம்பெற்றிருக்கின்றன. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியும் குறிப்பிடத்தக்க வசதியாகவே இருக்கும்.

 09. மைலேஜ்

09. மைலேஜ்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்று கூறுகிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மாடலாக புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரை கூறலாம்.

மதிப்பு மிக்க மாடல்...

மதிப்பு மிக்க மாடல்...

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் விலை இதன் ரகத்தில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் உள்ளிட்ட மாடல்களுக்கு மிகவும் சவாலாகவும், அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் மாடலாகவும் கருதப்படுகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் பெட்ரோல், டீசல் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நிச்சயம் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவே இருக்கும்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Top 9 features of the Ford Freestyle.
Story first published: Tuesday, April 10, 2018, 17:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark