டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

Written By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா, டாடா உள்ளிட்ட பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஏராளமான புதிய கார் மற்றும் பைக் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அதிலிருந்து எம்மை கவர்ந்த டாப் - 10 கார்களை இந்த செய்தயில் காணலாம்.

01. டாடா H5X எஸ்யூவி கான்செப்ட்:

01. டாடா H5X எஸ்யூவி கான்செப்ட்:

ஆட்டோ எக்ஸ்போவில் எமது கவனத்தை பெரிதும் ஈர்த்த மாடல்களில் டாடா எச்5எக்ஸ் முக்கிய இடம்பெறுகிறது. டாடா பிராண்டு மீதான மதிப்பையும், மரியாதையையும் உலக அளவில் கொண்டு செல்லும் விதத்தில், இதன் டிசைன் அமைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

புதிய டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் மாடலான ஒமேகா என்ற புதிய பிளாட்ஃபார்மில் லேண்ட்ரோவர் எஸ்யூவியின் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்யூவி கான்செப்ட் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விட்டது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 லட்ச ரூபாய் எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது.

02. டாடா 45X கான்செப்ட்

02. டாடா 45X கான்செப்ட்

மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடல்களுக்கு நேர் போட்டியான ரகத்தில் டாடா களமிறக்க இருக்கும் காரின் முன்னோட்டமாக இந்த கான்செப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரும் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களின் கவனத்தையும் இந்த புதிய டாடா 45எக்ஸ்க கான்செப்ட் ஈர்த்தது என்றால் மிகையில்லை. டாடா கார்களின் டிசைனை புதிய கோணத்தில் எடுத்துச் செல்லும் விதத்தில் மிக அற்புதமாக இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், கவர்ச்சிகரமான டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது. இந்த மாடலும் தயாரிப்பு நிலை மாடலாக விரைவில் வெளியிடப்படும் வாய்ப்புள்ளது.

03. டொயோட்டா யாரிஸ் செடான் கார்

03. டொயோட்டா யாரிஸ் செடான் கார்

எம்பிவி, எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் டொயோட்டா நிறுவனம் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டிலும் வரிந்து கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் புத்தம் புதிய யாரிஸ் செடான் காரை விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த கார் தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சிின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 107 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும் என்பது எதிர்பார்ப்பு. டீசல் மாடல் குறித்த தகவல் இல்லை. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு நேர் போட்டியாக இருக்ககும்.

04. ஹோண்டா அமேஸ்

04. ஹோண்டா அமேஸ்

ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புறம் மிக தாழ்வான அமைப்புடன் இருந்த அமேஸ் கார் இப்போது மிக கம்பீரமான பானட் அமைப்புடன் புதிய க்ரில் மற்றும் ஹெட்லைட் க்ளஸ்ட்டருடன் வந்துள்ளது. புதிய அலாய் வீல்கள், புதிய டெயில் லைட்டுகள் என பழைய மாடல் சாயல் துளியும் இல்லாமல் முற்றிலும் புதிய மாடலாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

புதிய ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதேநேரத்தில், சற்று கூடுதல் பவரை அளிக்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. வீல் அளவும், டயர் அளவும் பெரிதாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும். புதிய மாருதி டிசையர் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

05. மாருதி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட்

05. மாருதி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட்

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் கார் மாடல்களில் எல்லோரது ஆவலையும் தூண்டி இருக்கும் மாடல் மாருதி நிறுவனத்தின் ஃப்யூச்சர் எஸ் என்ற எஸ்யூவி ரக கான்செப்ட்தான். மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியியைவிட விலை குறைவாக வரும் புதிய மாருதி எஸ்யூவியின் முன்னோட்டமான மாடல் என்பதே இந்த கான்செப்ட் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணம்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

பிரம்மாண்டமான முகப்பு, கம்பீரமான வீல் ஆர்ச்சுகள், இரு வண்ணக் கலவையிலான வீல்கள் என எஸ்யூவி பிரியர்களின் ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

06. புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்

06. புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்

வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட மிக முக்கியமான ஒரே மாடல் புதிய மாருதி ஸ்விஃப்ட் என்றால் மிகையில்லை. புதிய பிளாட்ஃபார்மில் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வாடிக்கையாளர்களை வழக்கம்போல் வசீகரித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.4.99 லட்சம் விலையில் நிறைவான பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது புதிய மாருதி ஸ்விஃப்ட். வழக்கம்போல் பெரும் வெற்றியை பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

07. மஹிந்திரா ஸ்டிங்கர்

07. மஹிந்திரா ஸ்டிங்கர்

கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா ஏரோ என்ற கான்செப்ட் எஸ்யூவி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. அதே எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவை எதிர்நோக்கியவர்களுக்கு மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் சிறப்பான மாடலாக அமைந்துவிட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் வல்லமையை காட்டும் விதத்தில், திறந்து மூடும் கூரை அமைப்புடைய மாடலாக இந்த எஸ்யூவி கான்செப்ட் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

மஹிந்திரா டியூவி300 காரின் அடிப்படையிலான கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவி மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வெறும் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவி 4 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது. முன்புறத்தில் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் டிசைன் அருமையாக இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவிற்கு வரும் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். ஆனால், மஹிந்திரா ஏரோ போன்று கிடப்பில் போடாமல், தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

08. ஹூண்டாய் எலைட் ஐ20

08. ஹூண்டாய் எலைட் ஐ20

அடுத்த தலைமுறை டிசைனுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இப்போது மேலும் மெருகு கூட்டப்பட்டு ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் புதிய புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புதிய 16 அங்குல அலாய் வீல்கள், புதிய டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்புற பம்பர் கருப்பு வண்ண பிளாஸ்டிக் சட்டத்துடன் கூடுதல் பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இனி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.5.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் இருந்தும், டீசல் மாடல் ரூ.6.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் இருந்தும் கிடைக்கும்.

09. கியா எஸ்பி கான்செப்ட்

09. கியா எஸ்பி கான்செப்ட்

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் களமிறங்குவதற்கு முன்னோட்டமாக தனது பல கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது. அதில், எம்மை கவர்ந்த மாடல் கியா எஸ்பி கான்செப்ட் என்ற பெயரில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்யூவி ரக கார் மாடல்.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

எஸ்யூவி பிரியர்களின் கவனத்தை எளிதாக கவர்ந்துவிடும் டிசைன் மற்றம் சிறப்பம்சங்களுடன் இந்த கார் காட்சி தருகிறது. ஆட்டோ எக்ஸ்போவிற்கு வரும் பார்வையாளர்களை நிச்சயம் இந்த மாடல் கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமில்லை.

10. மெர்சிடிஸ் மேபக் எஸ்-650

10. மெர்சிடிஸ் மேபக் எஸ்-650

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்650 கார் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லிமோசின் ரக கார்களுக்கு இணையான ரகத்தில் வந்துள்ள இந்த புதிய மாடல் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் வாடிக்கையாளர்களை கரைத்து தன் பால் ஈர்க்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

இந்த காரில் பாரத் -4 மாசு உமிழ்வு தர நிர்ணயம் கொண்ட 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 621 பிஎச்பி பவரையும், 1,000 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த காரில் ரேடார் சிஸ்டத்தின் உதவியுடன் இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மேஜிக் பாடி கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற அதி உயர் வசதிகளை பெற்றிருக்கிறது. ரூ.2.73 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மெர்சிடிஸ் மேபக் பிராண்டின் மற்றொரு புதிய எஸ்560 மாடல் ரூ.1.94 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் எம்மை கவர்ந்த டாப் - 10 கார்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் மேற்கண்ட கார்கள் தவிர்த்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரேஸ்மோ மின்சார ஸ்போர்ட்ஸ் கார், டியோகா ஜேடிபி போன்ற மாடல்களும் சிறப்பானதாக இருக்கின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனம் பல மாடல்களை களமிறக்கியது. அதில், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரை சச்சின் டெண்டுல்கர் விற்பனைக்கு அறிமுகம் செய்தார். இதுதவிர, சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியானது மஹிந்திரா பிராண்டுடன் நிறுத்தப்பட்டு இருப்பது அனைவரின் ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது.

English summary
Before you decide to head to Greater Noida and witness the Auto Expo for yourself, here is a list of the Best Cars at Auto Expo 2018 that were either launched, unveiled or showcased that you should definitely see.
Story first published: Saturday, February 10, 2018, 16:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark