இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி காரான டெஸ்லா காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இதை அந்நிறுவனத்தின் சிஇஓ மஸ்க் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

By Balasubramanian

அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி காரான டெஸ்லா காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இதை அந்நிறுவனத்தின் சிஇஓ மஸ்க் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். விரைவில் டெஸ்லா கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதனால் மற்ற கார் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

அமெரிக்காவில் தானியங்கி காராக இயங்கும் டெஸ்லா கார் மிகவும் பிரபலம். டிரைவரின் கட்டுபாடு இல்லாமல் தானாக இயங்கக்கூடிய தொழிற்நுட்பம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய புரட்சியை செய்துள்ளது டெஸ்லா கார் இன்று விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்த காரை பயன்படுத்துவதற்காகவே அமெரிக்காவில் பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

டெஸ்லா காரை காரை பார்த்து இன்று மற்ற நிறுவனங்கள் திகைத்து போயுள்ளனர். இனியும் டெஸ்லாவிற்கு போட்டியாக தானியங்கி கார்களை தயாரிக்க தவறினால் அவர்கள் நிறுவனத்தை அடுத்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத நிலைக்கு தொலைந்து போகும் என அவர்கள் உணர்ந்து விட்டனர்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

இந்நிலையில் கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தன் பங்கிற்கு தானிங்கி கார்களை தயாரிக்க ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

சமீபத்தில் டெஸ்லா நிறுவனவத்தின் சிஇஓ எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தின் வரும் 2019ம் ஆண்டு இறுதிக்குள் 10,000 சூப்பர் சார்ஜ் மையங்களை நிறுவப்போவதாக அறிவித்து அது எந்த எந்த இடங்கிளில் இடம் பெற்றும் என்று குறிக்கபட்ட மேப்பை டுவிட்டரில வெளியிட்டிருந்தார். அதில் இந்தியாவில் ஒரு மையம் கூட இல்லை.

இந்தியாவை சேர்ந்த இன்ஜினியரிங் படித்த இளைஞர் வினித் சுவாமி என்பவர் எலான் மஸ்க்கின் டுவிட்டிற்கு இந்தியாவில் டெஸ்லா இல்லையா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மஸ்க் இந்தியாவிற்கு நாங்கள் வர விரும்புகிறோம். ஆனால் அரசின் சில விதிமுறைகள் எங்களுக்கு சவாலாக உள்ளது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

எங்கள் நிறுவனத்தின் சிஎப்ஓ தீபக் அஹூஜா இந்தியாவை சேர்ந்தவர். அவர் விரைவில் இந்தியாவிற்கு டெஸ்லாவை கொண்டு செல்ல முடியும் என நம்புகிறார். என பதில் அளித்துள்ளார். தீபக் அஹூஜா என்பவர் 15 ஆண்டுகள் ஃபோர்டு நிறுவனத்தின் பணியாற்றி கடந்த 2010ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் சேர்ந்தார்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

கடந்த 2015 டெஸ்லாவில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் 2017ல் டெஸ்லாவோடு இணைந்துள்ளார். இதற்கு முன்னர் டெஸ்லா இந்தாண்டு இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள விதிமுறைகள் சவாலாக உள்ளாதாக அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

இந்த டுவிட்டரில் கமெண்ட் செய்த பலர் பிரதமர் மோடி, பேக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, உள்ளிட்ட பலரை டுவிட்டரில் டேக் செய்தனர். இதையடுத்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வர முயற்சிப்பதை அறிந்த அரசு மஸ்கிற்கு பதில் அளித்துள்ளது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

முன்னதாக மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கார் தயாரிப்பதற்கு தேவையான 30 சதவீத பாகங்கள் தயாரிப்பு நடக்கும் பகுதியிலேயே கிடைக்க வேண்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யமுடியாது. அந்த பாகங்கள் எல்லாம் தற்போது இந்தியாவில் இல்லை என் கூறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

இதற்கு இந்திய அரசு சார்பில் மேக் இன் இந்தியா என்ற டுவிட்டர் ஹேண்டில் மூலம் நீங்கள் இந்தியாவிற்கு வருவது தொடர்பாக உள்ள சிக்கல் குறித்து தெளிவாக விளக்கம் அளியுங்கள் என கேட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு டெஸ்லா காரை கொண்டு வர இந்திய அரசும் முயற்சி எடுத்து கொண்டு தான் இருக்கிறது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்க ஏற்ப டெஸ்லா காரை தயாரிக்க முடியுமா, அல்லது டெஸ்லா காருக்கு ஏற்ப சட்ட விதிமுறையில் எந்த பாதிப்பும் இல்லாமல் திருத்தங்கள் செய்ய இயலுமா என்ற ஆய்வுகள் இனி நடத்தப்பட்டு டெஸ்லா கார் இந்தியாவிற்கு வரும். இந்தியாவில் இந்த கார் அதிகமாக விற்பனையானால் இந்தியாவிலேயே அந்த கார்கள் தயாரிக்கவும்படும் என தெரிவித்தார்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

தற்போது டெஸ்லா கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்தால் டெஸ்லா மாடல் 3 கார் சுமார் 23 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலோ ஆல்டோ என்ற பகுதியில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது அவரை நேரில் சந்தித்து வரவேற்ற அந்நிறுவனத்தின் சிஇஓ மஸ்க் அவரை வரவேற்ற கார் தயாரிப்பு ஆலைகளை சுற்றி காட்டினார்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

அப்பொழுது எலெக்ட்ரிக் கார்கள் எவ்வாறு இங்குகிறது. தானியங்கி கார்களை செயல்படுத்த உள்ள சவால்கள், செல்போன்கள் மூலம் கார்களை இயக்குவது குறித்து இருவரும் பேசியதாக அப்பொழுது மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

உலகம் முழுவதும் டெஸ்லா நிறுவனம் சார்பில் மொத்தம் 1229 சூப்பர் சார்ஜ் ஏற்றும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில் 9623 சூப்பர் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகள் எல்லாம் 30 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் ஏற்றக்கூடியது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்

டெஸ்லா நிறுவனம் தனது 3 லட்சமானது வாகனத்தை தயார் செய்து விட்டதாக கூறியுள்ளது. இதுவரை உலகில் 2,12,821 டெஸ்லா எஸ் மாடல் கார்கள், 71,927 மாடல் எக்ஸ் கார்கள், 1770 மாடல் 3 கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tough Government Rules Keep Tesla Away From Indian Roads, Says Elon Musk. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X