புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

பிரபல டொயோட்டா நிறுவனம் தனது அடுத்த படைப்பான டொயோட்டா C-HR (TOYOTA C-HR) காரை இந்தியாவில் வெளியிடுவது பற்றியும் அதன் சிறப்பம்சம், தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டது. அதனை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

2017 இல் பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் மோட்டார் ஷோவில்(PARIS MOTOR SHOW) ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா தனது டொயோட்டா CHR என்ற புதிய க்ராஸ்ஓவர் ரக காரை காட்சிப்படுத்தியது. இந்த காலத்திற்கு ஏற்றால் போல் தொழில்நுட்பம், புதிய கட்டுமானம் போன்றவை சிறப்பாய் உள்ளது. பிரபல இணையதளம் இந்த வாகனத்தின் இந்திய வருகை மற்றும் என்ஜின் கோட்பாடுகளை வெளியிட்டுள்ளது.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இதன் ஆய்வுக்கட்டுரை கூறுவதாவது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டொயோட்டா சிஎச்ஆர் காரில் 1 .8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 96 .6 BHP செயல் திறை வெளிப்படுத்தும். இது ஒரு ஹைபிரிட் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் டார்க் 142NM வெளிப்படுத்தும். CVT தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கியர் பாக்ஸ் என்ஜினுடன் பொருந்தி, அனைத்து சக்கரங்களுக்கும் முறையாய் செயல்திறனை பிரித்தளிக்கிறது.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

2020 வெளிவர இருக்கும் இந்த வாகனத்தின் உடல் அமைப்பை சற்று நோக்கலாம். ப்ரொஜெக்டர் முன் விளக்குகள் கொண்ட இந்த வாகனம் கூரான முன்பக்கத்தை கொண்டுள்ளது. இதன் கூரிய முனைகள் தனக்கே உரித்தான அழகியலை வெளிப்படுத்துகிறது. மேலும் பாதுகாப்பு அம்சமான பம்பரின் கீழே கருப்பு நிற பிளாஸ்டிக் CLADDING சட்டம் அமைந்துள்ளது.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இதன் உடலை சுற்றி அமையப்பெற்ற கோட்டிங் வகை CLADDING மற்றும் வடிவமுள்ள முன் பக்க பின் பக்க சக்கரங்கள் பொருந்தும் ஆர்ச்சுகளும் இதன் கட்டுமானத்தின் முக்கியப்புள்ளிகள். வலது மற்றும் இடது புறத்தை காண்கயில் பந்தய வாகனம் போல் காட்சியளிக்கும் ஸ்போர்ட்டி அலாய் வீல்ஸ், சி வடிவிலான பின்பக்க சிகப்பு டேஞ்சர் லெட் விளக்குகள், காற்றை செவ்வனே கையாண்டு வண்டியின் நிலைத்தனையை உறுதி செய்ய ஏதுவாய் உள்ள ரூப் ஸ்பாய்லர்ஸ்(ROOF SPOILERS) ,வலுவான பாதுகாப்பு மிக்க பம்பர் போன்றவை வாகனத்தின் மீதான ஆசையை தூண்டுகிறது.

MOST READ: சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ஒட்டுமொத்தமாக கூறவேண்டுமென்றால் இந்தவாகனம் நச்சென்று வசீகரமாக தோற்றமளிக்கிறது. இதற்கு ராக்கை அமைப்பிலான ரேகுடு விண்ட்ஷீல்டு(RAKED WINDSHIELD) மற்றும் சரிவான மேற்கூரை(SLOPING ROOF) வடிவமைப்பு தான் காரணம்.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த காரில் 8 அங்குல தொடுதிரை கொண்ட பொழுதுபோக்கு மற்றும் தகவல் பலகை(8 INCH TOUCH SCREEN INFOTAINMENT SYSTEM) இதன் உட்பக்கத்தின் முக்கிய அம்சம். மேலும் என்ஜின் ஆன் / ஆப் ஸ்விட்சுகள், க்ரூயிஸ் கண்ட்ரோல் எனப்படும் வேக கட்டுப்பட்டு மென்பொருள் , முற்றிலும் லெதரினால் இழைக்கப்பட்ட இருக்கைகள் வாகனத்தின் உட்பக்கத்தையும் விரும்ப செய்கிறது.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

பாதுகாப்பு அம்சம் போன்றவற்றை காண்கையில், தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை வசதிLANE DEPARTURE ALERT), தானாகவே மாறிக்கொள்ளும் ஹை பீம் முன் விளக்குகள்(AUTOMATIC HIGH BEAM), பாதசாரி குறித்து ஓட்டுனருக்கு எச்சரிக்கை(PEDESTRIAN WARNING) , மற்றும் சாலை விதிகளை கணிக்கும் திறமை (ROAD SIGN ASSIST) வாகனத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகின்றன.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

டொயோட்டா நிறுவனம் இதே வாகனத்தின் மற்றுமோர் பரிணாமாக ஏழு பேர் அமரும் புதிய SUV யின் கட்டுமானத்தை திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது, இருப்பினும் இது உறுதியல்ல. வேகமாக முன்னேறி கொண்டிருக்கு எஸ்யூவி சந்தையில் இந்த டொயோட்டா CHR வாகனம், நல்லதோர் பெயர் தனக்கும் நிறுவனத்திற்கும் பெற்று தரும்.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

CROSSOVER ரக வாகனங்களில் இந்த டொயோட்டா CHR வாகனம் தனி வடிவைமைப்பை பெற்றுள்ளது. மேற்கூறியவாறு இது இந்திய சாலைகளை 2020 இல் தடம் பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வாகன அறிமுகத்திற்கு பின் யுடிலிட்டி வெஹிகிள்(UTILITY VEHICLES) என்ற பிரிவில் ஒரு புதிய காரை களமிறக்க உள்ளதாக தெரிகிறது. இது ஆவலை தூண்டும் விதமாக இருக்கிறது.

MOST READ: ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது.. போலீசார் அதிரடி உத்தரவு

Most Read Articles

Tamil
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Japanese automaker Toyota revealed the C-HR crossover at the 2017 Paris Motor Show. The Toyota C-HR features a modern design and it is based on the new-gen architecture. Now, GaadiWaadi reports that the Toyota C-HR will be launched in India and the engine details have been revealed.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more