விற்பனையில் மாருதி எர்டிகாவை தோற்கடித்தது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்!

Written By:
Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

கடந்த 2017ம் ஆண்டு விற்பனையில் மாருதி எர்டிகாவை முந்தி அசத்தி இருக்கிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார். இதன்மூலமாக, இந்தியர்கள் விலையைவிட பிற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கண்டுணர முடிகிறது. எர்டிகாவை இன்னோவா முந்தியதற்கான காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனை விபரம்

விற்பனை விபரம்

கடந்த ஆண்டில் 72,349 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனையாகி உள்ளன. அதேநேரத்தில், கடந்த ஆண்டு 68,354 மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன.

பலிக்காத மாருதியின் மந்திரங்கள்

பலிக்காத மாருதியின் மந்திரங்கள்

மாருதி நிறுவனத்தின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க், பட்ஜெட் விலை, குறைவான பராமரிப்பு செலவு போன்ற பல அஸ்திரங்களை கடந்து இன்னோவா விற்பனையில் கொடி கட்டி பறப்பத்து இந்த விற்பனை புள்ளி விபரங்கள் மூலமாக தெரிய வருகிறது.

 வெவ்வேறு ரகம்

வெவ்வேறு ரகம்

இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா ஆகிய கார்கள் இருவேறு விலை, வடிவம் கொண்டவை. வெவ்வேறு வகையான வாடிக்கையாளர் வட்டத்தை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டவை. எனினும், எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் இரு மாடல்களும்தான் முன்னிலை வகிக்கின்றன.

கலக்கும் இன்னோவா

கலக்கும் இன்னோவா

இதில், பட்ஜெட் விலை கொண்ட மாடலான மாருதி எர்டிகாதான் விற்பனையில் அதிகம் இருக்க வேண்டும். ஆனால், இங்கு நிலை தலைகீழாக மாறி, விற்பனையில் இன்னோவா க்ரிஸ்ட்டா முன்னிலை வகிக்கிறது.

பிரிமியம்

பிரிமியம்

சொகுசு கார் பிரியர்களை கூட வளைக்கும் டிசைன், வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பெற்றிருக்கிறது. எனவே, பட்ஜெட் பிரிமியம் கார் மார்க்கெட்டில் புகுந்து விளையாடுகிறது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்.

விலை

விலை

சென்னையில் புதிய டொயோட்டா இன்னோவா கார் ரூ.16.80 லட்சம் முதல் ரூ.26.60 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறத்தில் மாருதி எர்டிகா கார் ரூ.7.65 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா இரு மடங்கு கூடுதல் விலை கொண்ட மாடலாக இருக்கிறது.

சலித்து போன எர்டிகா

சலித்து போன எர்டிகா

2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா, அதன் பிறகு பெரிய அளவிலான மாற்றங்கள் கொடுக்கப்படவில்லை. பழமையான டிசைனாக இருக்கிறது. ஆனால், இன்னோவா கார் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசைன்

டிசைன்

இந்த காரின் புத்தம் புதிய டிசைன், பிரம்மாண்டம், நேர்த்தி ஆகியவை பட்ஜெட் வாடிக்கையாளர்களையும் எர்டிகாவை விட்டு இன்னோவா பக்கம் இழுத்து வருகிறது. பட்ஜெட் அதிகமானாலும், மன நிறைவை தரும் மாடலாகவும், அந்தஸ்தான மாடலாகவும் இருக்கிறது.

சவுகரியம்

சவுகரியம்

இரண்டுமே 7 பேர் செல்வதற்கான இடவசதி கொண்டவை. ஆனால், இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இருக்கைகள் அனைத்துமே மிக சவுகரியமான உணர்வை தருகின்றன. மாருதி எர்டிகாவில் முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் போதிய இடவசதியை அளிக்கின்றன. ஆனால், மூன்றாவது வரிசை இருக்கை மிகவும் நெருக்கடியான உணர்வை தருகின்றன.

இன்டீரியர்

இன்டீரியர்

மாருதி எர்டிகாவின் இன்டீரியர் சாதாரணமான டிசைன் அமைப்பை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இன்டீரியர் மிகவும் பிரிமியமாகவும், தரமாகவும் இருக்கிறது. காரில் பயணிக்கும்போது மிக உன்னதமான அனுபவத்தை வழங்குகிறது.

 சொகுசு வசதிகள்

சொகுசு வசதிகள்

மாருதி எர்டிகா காரைவிட டொயோட்டா இன்னோவா காரில் ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இன்னோவா காரில் எல்சிடி டச்ஸ்கிரீன் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிவிடி ப்ளேயர், புளூடூத் வசதி ஆகியவை குறைவான வேரியண்ட்டில் கிடைக்கிறது. ஆனால், இந்த வசதிகள் எர்டிகாவின் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

டொயோட்டா இன்னோவா காரில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின், 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மாருதி எர்டிகா 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. 7 சீட்டர் மாடலுக்கு சற்று சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் தேவை. அதனை நிறைவு செய்கிறது இன்னோவா க்ரிஸ்ட்டா.

கையாளுமை

கையாளுமை

மாருதி எர்டிகா காரைவிட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் கையாளுமை மிகச் சிறப்பானது. அதிவேகத்தில் செல்லும்போது நம்பிக்கையான உணர்வையும் கொடுக்கிறது. பாதுகாப்பான உணர்வையும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தருகிறது.

 டாக்சி மார்க்கெட்

டாக்சி மார்க்கெட்

பழைய இன்னோவா காரைவிட புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார் சில லட்சங்கள் கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், டாக்சி ஆபரேட்டர்கள் விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுற்றுலா செல்வோரின் முதல் சாய்ஸாக இருப்பதால், டாக்சி மார்க்கெட்டிலும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது இன்னோவா க்ரிஸ்ட்டா கார்.

பிரதிபலிப்பு

பிரதிபலிப்பு

விலையில் மட்டுமே மாருதி எர்டிகா வாடிக்கையாளர்களை மனம் குளிர செய்யும் காராக இருக்கிறது. மற்ற அனைத்து அம்சங்களிலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்தான் சிறப்பானதாக இருக்கிறது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் வந்தால், விற்பனை சற்று உயரும். ஆனால், அது டொயோட்டா இன்னோவா காரின் மார்க்கெட்டில் பாதிப்பை அதிக அளவில் ஏற்படுத்த முடியாது என்றே கருதப்படுகிறது.

Via- Cartoq

English summary
Toyota Innova Beats Maruti Ertiga By Sales in 2017.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark