டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

Written By:

மாருதி கார்கள் டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

நிஸான்- ரெனோ உள்ளிட்ட உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் கார் தயாரிப்புக்கு செய்யப்படும் முதலீட்டை குறைக்கும் விதத்தில், ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் கார் மாடல்களை இரண்டு பிராண்டுகளிலும் விற்பனை செய்யும் யுக்தியை கையாண்டு வருகின்றன.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

ரெனோ நிறுவனத்தின் பிரபலமான டஸ்ட்டர் எஸ்யூவி நிஸான் பிராண்டில் டெரானோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, நிஸான் பிராண்டின் சன்னி மற்றும் மைக்ரா கார்கள் ரெனோ பிராண்டில் ஸ்காலா மற்றும் பல்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

ரெனோ க்விட் மற்றும் நிஸான் நிறுவனத்தின் டட்சன் ரெடிகோ கார்களும் ஒரே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டன. எஞ்சின் உள்ளிட்ட பல அம்சங்கள் இரண்டு கார்களும் பகிர்ந்து கொண்டுள்ளன. இதே அடிப்படையில், ஜப்பானை சேர்ந்த டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்களும் கூட்டணி அமைத்தன.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

மேலும், இந்த கூட்டணியின் வர்த்தக விஷயங்களை இந்தியாவிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அதன்படி, சுஸுகி நிறுவனம் தனது மாருதி பிராண்டில் விற்பனை செய்து வரும் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களை டொயோட்டா பிராண்டிற்கு பகிர்ந்து கொடுக்க முடிவு செய்துள்ளன.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

பதிலுக்கு டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரை மாருதி பிராண்டில் விற்பனை செய்வதற்கான உரிமத்தை டொயோட்டா வழங்க இருக்கிறது. இதன்மூலமாக இரு பிராண்டுகளும் பயன்பெறும்.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 30,000 முதல் 50,000 வரையிலான பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

அதேபோன்று, 10,000 டொயோட்டா கரொல்லா கார்களை தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாம். இவை ஹைப்ரிட் மாடலும் அடக்கம் என்பது தகவல்.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

இதனால், இரு நிறுவனங்களுக்கும் அந்தந்த ரகத்தில் உள்ள காலி இடத்தை நிரப்பிக் கொள்ளவும், வர்த்தக பயனை பெறவும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த கார்கள் உற்பத்தி செய்யப்படும்.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

இதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளன. இரு நிறுவனங்களும் எத்தனை கார்களை பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளன உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

டொயோட்டா பலேனோ, டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் மாருதி கரொல்லா ஆல்டிஸ் கார்களை விரைவில் பார்ப்பதற்கான வாய்ப்பு நமக்கு விரைவாகவே கிட்டும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த கார்களை புதிய பெயரில் வெளியிடவும் இரு நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Motor Corporation (Toyota) and Suzuki Motor Corporation (Suzuki) have announced that both the Japanese companies have concluded a basic agreement to supply hybrid and other vehicles for the Indian market.
Story first published: Friday, March 30, 2018, 13:34 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark