டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

Written By:

வரும் 18ந் தேதி புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட் மற்றும் இதர விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

புதிய டொயோட்டா யாரிஸ் கார் ஜே, ஜி, வி மற்றும் விஎக்ஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் க்ரே, வைல்டுஃபயர் ரெட், ஃபான்டம் பிரவுன், சூப்பர் ஒயிட் மற்றும் ஒயிட் பியர்ல் க்றிஸ்ட்டல் ஷைன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

புதிய டொயோட்டா யாரிஸ் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமா 106 எச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களில் வர இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

யாரிஸ் ஜே வேரியண்ட் வசதிகள்

 • புரொஜெக்டர் ஹெட்லைட்
 • பாடி கலர் கைப்பிடிகள் மற்றும் ரியர் வியூ மிரர்கள்
 • சுறா துடுப்பு ஆன்டென்னா
 • 7 ஏர்பேக்குகள்
 • பிரேக் அசிஸ்ட், இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
 • முன்புற சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக்குகள்
 • எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ மிரர்கள்
 • கீ லெஸ் என்ட்ரி
 • 60:40 ஸ்பிளிட் இருக்கைகள்
 • கூல்டு க்ளவ் பாக்ஸ்
 • 4 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம்
 • ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி
 • டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் சிஸ்டம்
 • ரியர் ஆர்ம் ரெஸ்ட்
 • எல்சிடி மல்டி இன்ஃபர்மேஷன் திரை
 • ஈக்கோ இண்டிகேட்டர்
டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

யாரிஸ் ஜி வேரியண்ட் வசதிகள்

 • மேற்கண்ட வசதிகளுடன் கூடுதலாக கீழ்கண்ட வசதிகள் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.
 • க்ரோம் க்ரில் அமைப்பு,
 • டர்ன் இண்டிகேட்டர் பொருத்தப்பட்ட ரியர் வியூ மிரர்கள்
 • முன்புற மற்றும் பின்புற பனி விளக்குகள்
 • ரியர் பார்க்கிங் சென்சார்கள்
 • வேகத்தை உணர்ந்து கதவுகள் தானாக பூட்டும் வசதி
 • பின்புற கண்ணாடியில் பனி படலத்தை நீக்கும் ரியர் டீஃபாகர்
 • ஆட்டோமேட்டிக் ஏசி
 • 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • சாவி அருகில் இருந்தால் பட்டனை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி
 • சாவியுடன் அருகில் வரும்போது தானாக கதவுகள் திறக்கும் ஸ்மார்ட் என்ட்ரி வசதி
 • ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள்
 • ஆம்பியன்ட் லைட்டுடன் கூடிய கூரையில் பொருத்தப்பட்ட ரியர் ஏசி வென்ட்டுகள்
 • டிஎஃப்டி திரையுடன் கூடிய மல்டி இன்பர்மேஷன் திரை ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.
டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

யாரிஸ் வி வேரியண்ட் வசதிகள்

 • மேற்கண்ட இரண்டு வேரியண்ட்டுகளிலும் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரம் கீழே...
 • 15 அங்குல அலாய் வீல்கள்
 • நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள்
 • முன்புறம் மற்றும் பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்கள்
 • 7 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம்
 • நெடுஞ்சாலைகளில் ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் சீரான வேகத்தில் செல்ல உதவும் க்ரூஸ் கன்ட்ரோல்
 • ரியர் வியூ கேமரா
 • ஆட்டோமேட்டிக் வைப்பர்
 • ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்
 • ஃபாலோ மீ ஹெட்லைட்
 • எல்இடி ரியர் காம்பி லைட்
டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

யாரிஸ் விஎக்ஸ் வேரியண்ட் வசதிகள்

இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் வசதிகள்

 • எல்இடி பகல்நேர விளக்குகள்
 • க்ரோம் கதவு கைப்பிடிகள்
 • சிவிடி மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி
 • அதிக நிலைத்தன்மையுடன் செலுத்தும் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம்
 • ஏற்றமான சாலைகளில் கார் பின்னோக்கி செல்வதை தவிர்க்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
 • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
 • லெதர் இருக்கைகள்
 • 8 விதமான நிலைகளில் மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை
 • பின்புற சன்ஷேடு ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன
டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

விலை குறைவான ஜே பேஸ் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பாடி கலர் கதவு கைப்பிடிகள், ஷார்க் ஆண்டெனா, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமான விஷயம். ஏனெனில், இங்கே பல நிறுவனங்கள் இந்த வசதிகளை மிட் வேரியண்ட் அல்லது விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே வழங்குகின்றன.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

பேஸ் மாடல் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலுமே சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும் என்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விஷயமாக இருக்கும். ஆனால், விஎக்ஸ் டாப் வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. சிவிடி மாடலில் மட்டுமே கிடைக்கும்.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில், அதிக வசதிகளுடன் பேஸ் மாடலை டொயோட்டா களமிறக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க மாடலாகவும் இருக்கும் என்பதை இந்த வசதிகளை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு ரூ.50,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலாலன விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Team-BHP

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
As reported earlier, the Toyota Yaris is all set to be launched in India on 18th May. Now, according to recent reports from Team-BHP, details of all the Yaris variants along with its features have been leaked.
Story first published: Wednesday, April 11, 2018, 12:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark