இந்தியாவில் களமிறங்கும் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

Written By:

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களிடையே கடும் குடுமிப்புடி நடந்து வருகிறது. இந்த யுத்தத்தில் களம் காண்பதற்கு டொயோட்டாவும் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், தனது புதிய யாரிஸ் செடான் காரை பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

போட்டியாளர்களை வென்றெடுக்க இந்த டொயோட்டா யாரிஸ் செடான் காரில் இருக்கும் சிறப்பம்சங்களை கண்டெடுக்கும் முயற்சியில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் இறங்கியது. அந்த முயற்சியில் கிடைத்த தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு...

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா கார்களின் நவீன டிசைன் தாத்பரியங்களை இந்த காரும் பெற்றிருக்கிறது. முகப்பின் முத்தாய்ப்பான விஷயம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள். அடுத்து, முகப்பின் முக்கால் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் க்ரில் அமைப்புடன் கூடிய பம்பர். இது பிரம்மாண்டத்தை கூட்டுகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

இண்டிகேட்டர் விளக்குகளும், எல்இடி பார்க்கிங் லைட்டுகளும், ஹெட்லைட் ஹவுசிங்கின் உட்புறத்தில் இடம்பிடித்துள்ளன. பம்பரின் இருபுறத்திலும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

பக்கவாட்டில் செடான் காருக்குரிய தாத்பரியங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், காரின் பிரம்மாண்டத்தை 15 அங்குல அலாய் வீல்கள் குறைத்துவிடுகிறது. அலாய் வீல்கள் சிறியதாக தோன்றுவதால், காரின் தோற்றத்துடன் பொருந்தி போகவில்லை என்பது குறைதான்.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

பின்புறத்தில் கவர்ச்சியான விஷயம், டெயில் லைட்டுகள்தான். முழுவதுமான எல்இடி டெயில் லைட்டுகள்உள்ளன. கூரை அமைப்பு மெதுவாக தாழ்ந்து, பூட் ரூமுடன் இயைந்து போயிருக்கிறது. கூரையில் சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா அமைப்பும் குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் உட்புறமானது கருப்பு மற்றும் பேஜ் வண்ணங்கள் கொண்ட பாகங்களால் ஆக்கிரமித்துள்ளது. இது காரின் உட்புறத்திற்கு உயர்தரமான உணர்வை வழங்கும். இதன் கேபின் 1,700மிமீ அகலத்தை பெற்றிருப்பதும், சற்றே விசாலமான உணர்வை அளிக்கிறது. தொடுதிரை இன்ஃபோடெயிமென்ட் சாதனம் சென்டர் கன்சோலில் பிரதானமாக அமர்ந்து இருக்கிறது.

ஸ்டீயரிங் வீலின் உயரத்தை மட்டுமே அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதி இருப்பது ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

பின் இருக்கையில் போதுமான இடவசதி இருக்கிறது. முழங்கால் மற்றும் தலை இடிக்காத அளவுக்கு இடவசதி இருப்பது விசேஷம். இந்த காரில் 60: 40 என்ற விகிதத்தில் இருக்கைகளை மடக்கி விரிக்கும் வசதி சிறப்பு. இந்த காரின் மிக முக்கிய அம்சமாக, ஏசி வென்ட்டுகள் கூரையில் அமைந்துள்ளன.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரில் அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், 7 ஏர்பேக்குகள், சரிவான மலைச்சாலைகளில் கார் நகரும்போது பின்னோக்கி செல்லாமல் தவிர்ப்பதற்கான ஹில் ஸ்டார்ட் அசிஸ்டம் வசதி, அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் காரை நிலைத்தன்மையுடன் செல்ல உதவும் இஎஸ்பி போன்ற அத்தியாவசியமான அடிப்படை பாதுகாப்பு விஷயங்களை பெற்றிருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

டொயோட்டா எட்டியோஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், எரிபொருளை உள்ளே இழுப்பதற்கும், கழிவாகும் புகையை வெளியேற்றுவதற்குமான வால்வுகளை இயக்கும் கேம்ஷாஃப்ட் இயங்கு நேர இடைவெளியில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

இதனால், யாரிஸ் காரின் எஞ்சின் அதிகபட்சமாக 105.5பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எட்டியோஸ் காரைவிட யாரிஸ் கார் எஞ்சின் 15.5 பிஎச்பி கூடுதல் பவரையும், 8 என்எம் அளவுக்கு கூடுதல் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாறி இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சிவிடி ஆப்ஷன் என்பது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விஷயமாக இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 20 மிமீ அதிகரிக்கப்பட்டு, 153மிமீ ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்திய சாலைகளுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இதனை கூறலாம்.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுக்கு கடும் போட்டியை தரும் விதத்தில், மிக சவாலாக விலையை நிர்ணயிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய டொயோட்டா யாரிஸ் கார் ரூ.8.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார்: சிறப்பு பார்வை!

டொயோட்டா கார் பிராண்டு மீதான நம்பகத்தன்மை இந்த காருக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கும். எனினும், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களை வென்றெடுக்க, விற்பனை கொள்கையும், விலையும் மிக முக்கிய காரணியாக அமையும்.

English summary
DriveSpark takes a detailed look at the newly launched Toyota Yaris to find out.
Story first published: Wednesday, February 14, 2018, 10:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark