டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

டொயோட்டா நிறுவனத்தின் யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் வெளிநாடுகளில் சக்கை போடு போடும் போது அந்த காரை இந்தியாவில் விற்க வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

டொயோட்டா நிறுவனத்தின் யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் வெளிநாடுகளில் சக்கை போடு போடும் போது அந்த காரை இந்தியாவில் விற்க வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு என்ன காரணம்? அப்படி அந்த காரில் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

டொயோட்டா யாரீஸ் செடன் கார்கள் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்க வந்தது. ரூ 8.75 லட்சத்தில் இருந்து விற்பனையாகும் இந்த கார்கள் நேற்று முதல் நாளே 1000 கார்களை விற்பனை செய்தது. மேலும் பலர் காரை புக் செய்துவிட்டு காத்து கொண்டிருக்கின்றனர்.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த யாரீஸ் கார் ஏற்கனவே வெளிநாடுகளில் நன்றாக விற்பனையாக வரும் மாடல் தான். இந்த மாடல் காரை தான் இந்தியாவிற்கு ஏற்பட சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் டொயோட்டா யாரீஸ் காரின் ஹேட்ச் பேக் கார் மிகவும் பிரபலம்.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

ஆசிய கார் சந்தையில் தாய்லாந்தில் டோயோட்டா நிறுவனம் யாரீஸ் காரின் ஹேட்ச் பேக் மாடலை விற்பனை செய்து வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 10 லட்சம் முதல் ரூ 13 லட்சம் வரை பல வித வேரியன்ட்களில் விற்பனையாகிறது.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 87 பிஎச்பி பவரையும், 108 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடனேயே வருகிறது.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

இந்த கார் யாரீஸ் செடன் ரக காரின் டிசைனை பொருத்தே அமைந்துள்ளது. முன்பகதியில் கருப்பு நிற கிரில் மற்றும் பகல் நேர எல்இடி லைட், புரோஜக்டர் ஹெட்லைட், பம்பரில் ஃபாக் லைட் என அனைத்தும் யாரீஸ் செடன் காரின் டிசைனையே இந்த காரும் பெற்றுள்ளது.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

இந்த காரின் பக்கவாட்டு பகுதியை பொருத்தவரையில் காரின் பின்பக்க பக்கவாட்டில் எல்.இடி லைட் கிளஸ்டர், ரூப் மவுண்டட் ஸ்பாயிலர்கள், கருப்பு நிற பில்லர் என ஹேட்ச் பேக் காருக்கான அனைத்து வித டிசைன்களையும் பெற்றுள்ளது.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

மேலும் இந்த காரில் ஆட்டோமெட்டிக் கிளைமெட் கண்ட்ரோல், இன்ஜின் ஆன் ஆப் பட்டன், ஸ்மார்ட் கீ, கீ லெஸ் என்ட்ரி, ஆடியோ சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, என தொழிற்நுட்ப வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா?

இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தால் ரூ 10-12 லட்சம் என்ற விலையில் தான் விற்பனை செய்ய முடியும். ஆனால் அந்த காருக்கு போட்டியாகவுள்ள ஸ்விப்ட், கிராண்ட் ஐ10 ஆகிய கார்கள் அதைவிட பாதி விலையில் விற்பனையாகி வருகிறது. அதனால் இந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்தால் விற்பது கடினம். அதனால் இந்த காரை விற்பனைக்கு டொயோட்டா நிறுவனம் கொண்டு வரவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Hatchback Is Not Coming To India.Read in Tamil
Story first published: Saturday, May 19, 2018, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X