இன்று முதல் விற்பனைக்கு வந்தது டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

டொயோட்டா நிறுவனம் தனது யாரீஸ் என்ற செடன் ரக காரை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ 8.75 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இந்த கார் குறித்து முழு தகவலை இங்கு செய்தியாக காணலாம்.

By Balasubramanian

டொயோட்டா நிறுவனம் தனது யாரீஸ் என்ற செடன் ரக காரை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ 8.75 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இந்த கார் குறித்து முழு தகவலை இங்கு செய்தியாக காணலாம்.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

டொயோட்டா நிறுவனம் யாரீஸ் என்ற தனது புதிய செடன் ரக காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலை கடந்த மாதம் புக்கிங் துவங்கும் போதே வெளியானது. தொடர்ந்து புக்கிங் நடந்து வந்த நிலையில் இன்று நாடு முழுவதும் அதன் விற்பனை துவங்கியுள்ளது.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

முதல் நாளான இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு டீலர்கள் மூலம் சுமார் 1,000 கார்களை டெலிவரி செய்யப்படுகிறது. இந்த கார் நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

ஜே, ஜி, வி, மற்றும் விஎக்ஸ் ஆகிய வேரியண்ட்களில் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ்களுடன் விற்பனை வந்துள்ளது. இந்த பேசிக் வேரியன்ட் ரூ 8.75 லட்சத்தில் இருந்து டாப் வேரியன்ட் ரூ 14.07 லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த காரின் விலை பட்டியலை கீழே காணலாம்.

Variant MT CVT
J ₹ 8,75,000 ₹ 9,95,000
G ₹ 10,56,000 ₹ 11,76,000
V ₹ 11,70,000 ₹ 12,90,000
VX ₹ 12,85,000 ₹ 14,07,000
இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

இன்ஜின்

டொயோட்டா யாரீஸ் காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் டுயல் விவிடி-ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 108 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து வேரியன்ட்களிலும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

மைலேஜ்

டொயோட்டா யாரீஸ் மேனுவல் கியர் பாக்ஸ் வேரியன்டில் 17.1 கி.மீ. மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் வேரியண்ட்டில் 17.8 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

டிசைன், இன்டிரீயர் மற்றும் அம்சங்கள்

இந்த காரின் முகப்பு பகுதியில் உள்ள பம்பரில் கிரில் அமைக்கப்பட்டுள்ளுது. எல்இடி டிஆர்எல் உடன் கூடிய ஸ்லீக் ஹெட்லைட், பம்பரில் பாக் லேம்ப், லோகோவின் இரண்டு பக்கங்களிலுமு் க்ரோம் ஸ்லாட், ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

இந்தகாரின் பக்கவாட்டு பகுதியில் 15 இன்ச் 6 ஸ்போக் அலாய் வீல்கள், பக்கவாட்டில் உள்ள பின் பகுதியில் செமி எல்.இ.டி டெயில்லைட் கிளஸ்டர், மற்றும் பம்பர், ஆகிய அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

இந்த கார் வைல்டுபயர் ரெட், பாந்தோம் பிரவுன், க்ரே மெட்டாலிக், சூப்பர் ஒயிட், பியர்ல் ஒயிட், சில்வர் மெட்டாலிக் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

இந்த காரின் இன்ட்டீரியரை பொருத்தவரை கருப்பு மற்றும் பேட்ஜ் கலரில் டுயல் டோன் தீமில் டேஸ்போர்டு, மற்றும் வாட்டர்பால் டிசைன் சென்டர் கன்சொல் ஆகிய அம்சங்கள் உள்ளன. சென்டர் கன்சொலில் 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மென்ட், கெஸ்டர் கண்ட்ரோல், மற்றும் நேவிகேஷன், 4.2 இன்ச் எம்ஐடி, ஸ்டியரிங் மவுன்டட் கண்ட்ரோல், சிவிடி மாடல்களுக்கான பெடல் ஸிப்டர் ஆகிய வசதிகள் உள்ளன.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

மற்றொரு முக்கிய அம்சமாக யாரீஸ் காரில் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், பவர் டிரைவர் சீட், ரூப் மவுண்டட் ஏசி, அம்பியண்ட்ன லைட்டிங், புரேஜக்டர் ஹெட்லைட், க்ரூஸ் கண்ட்ரோல், லேதர் சீட் அப்ஹோல்சரி, ரியர் ஆர்ம் ரெஸ்ட், கீ லெஸ் என்ட்ரி, ரெயின் சென்சிங் வைப்பர், ஸ்கார்க் பின் ஆன்டனா, பின் பக்கம் 60: 40 என பிரிக்கப்பட்ட சீட் ஆகிய வசதிகளும் உள்ளது.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

பாதுகாப்பும் அம்சம்

டொயோட்டா யாரீஸ் காரன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 7 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் வசதியும் இதில் உள்ளது. இதன் டாப் என்ட் மாடலில் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்பக்கம், பின்பக்க பார்க்கிங் சென்சார், பின் பக்க கேமரா, சென்ரல் லாக்கிங் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள்இந்தகாரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

இந்திய மார்கெட்டில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் சி செக்மெண்ட் காராக இந்த கார் வெளியாகியுள்ளது. இந்த ரக காரில் யாரீஸ் காரில் தான் அதிகளிவில் வசதிகளும் அம்சங்களும் நிறைந்துள்ளது. ரூ10 லட்சத்திற்கு குறைவான கார்களில் சிவிடி கியர் பாக்ஸ்களுடன் கூடிய கார் இது தான்.

இன்று முதல் விற்பனைக்கு டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை

இந்த காரின் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. இதன் பாதுகாப்பு அம்சமான 7 ஏர் பேக் வசதி தான். இந்த கார் நேரடியாக ஹோண்டா சிட்டி, ஹீண்டாய் வேர்னா, மாருதி சியஸ் ஆகிய கார்களுக்கு யாரீஸ் கார் நேரடி போட்டியாக திகழ்கிறது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Launched In India; Prices Start At Rs 8.75 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X