புதிய டொயோட்டா யாரிஸ் காரின் விலை அதிகாரப்பூர்வமாக வெளியானது!!

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. ரூ.8.75 லட்சம் முதல் ரூ.14.07 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். பெரும்பாலான டீலர்களில

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் மே 18ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அன்றைய தினம் விலை விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென யாரிஸ் காரின் விலை விபரத்தை வேரியண்ட் வாரியாகவே முழுமையாக வெளியிட்டுள்ளது டொயோட்டா கார் நிறுவனம்.

முன்பதிவு துவக்கம்...

முன்பதிவு துவக்கம்...

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு இன்றுமுதல் முன்பதிவும் டொயோட்டா டீலர்களில் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டொயோட்டா எட்டியோஸ் காருக்கு கார் மாடலை பார்க்காமல் பலரும் முன்பதிவு செய்தனர். கார் அறிமுகம் செய்யப்பட்டபோது, பாதியளவு முன்பதிவு ரத்தானது. இது டொயோட்டாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

டீலர்களுக்கு வந்த யாரிஸ்...

டீலர்களுக்கு வந்த யாரிஸ்...

இதுபோன்று மீண்டும் நிகழாமல் தவிர்க்கும் விதத்தில், இந்த முறை டீலர்களில் வாடிக்கையாளர்கள் காரை பார்த்து பிடித்து போனால் முன்பதிவு செய்யும் வசதியை அளிக்க முடிவு செய்தது. இதன்படி, பெரும்பாலான டீலர்களில் யாரிஸ் கார்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, காரை பார்த்து பிடித்து போனால் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்டசாலிகள்...

அதிர்ஷ்டசாலிகள்...

முதலில் முன்பதிவு செய்யும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கும் அறிமுக நிகழ்ச்சியில் கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேரியண்ட்டுகள் விபரம்:

வேரியண்ட்டுகள் விபரம்:

டொயோட்டா யாரிஸ் செடான் கார் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டும் வருகிறது. மொத்தம் 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. J என்ற விலை குறைந்த வேரியண்ட் G, V ஆகிய நடுத்தர விலை வேரியண்ட்டுகள் மற்றும் VX என்ற அதிக வசதிகள் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் தேர்வு வாய்ப்பு உள்ளது.

மேனுவல் மாடல் விலை

மேனுவல் மாடல் விலை

ரூ.8.75 லட்சம் முதல் ரூ.14.02 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கியர்பாக்ஸ் தேர்வு மற்றும் வசதிகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. நாடுமுழுவதும் ஒரே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருவதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் விலை அதிகாரப்பூர்வமாக வெளியானது!!

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட்டுகளில், விலை குறைவான ஜே வேரியண்ட் ரூ.8.75 லட்சம் விலையிலும், ஜி வேரியண்ட் ரூ.10.56 லட்சத்திலும், வி வேரியண்ட் ரூ.11.70 லட்சத்திலும், அதிக வசதிகள் கொண்ட விஎக்ஸ் வேரியண்ட் ரூ.12.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

ஆட்டோமேட்டிக் விலை விபரம்

ஆட்டோமேட்டிக் விலை விபரம்

சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஜே வேரியண்ட் ரூ.9.95 லட்சத்திலும், ஜி வேரியண்ட் ரூ.11.76 லட்சத்திலும், வி வேரியண்ட் ரூ.12.90 லட்சத்திலும் மற்றும் அதிக வசதிகள் நிரம்பிய விஎக்ஸ் வேரியண்ட் ரூ.14.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

விலைப் பட்டியல்

விலைப் பட்டியல்

வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் சிவிடி கியர்பாக்ஸ்
ஜே வேரியண்ட் ₹ 8,75,000 ₹ 9,95,000
ஜி வேரியண்ட் ₹ 10,56,000 ₹ 11,76,000
வி வேரியண்ட் ₹ 11,70,000 ₹ 12,90,000
விஎக்ஸ் வேரியண்ட் ₹ 12,85,000 ₹ 14,07,000
எஞ்சின் விபரம்:

எஞ்சின் விபரம்:

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105.5 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.எட்டியோஸ் காரைவிட 15.5 பிஎச்பி கூடுதல் பவரையும், 8 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் பேடில் ஷிஃப்ட் மூலமாக காரை மேனுவல் முறையில் கியர் மாற்றும் வசதியும் கொடுக்கப்படுகிறது.

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

கியர்பாக்ஸ் தேர்வுகள்:

புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரில் முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் கொண்ட ஹெட்லைட் ஹவுசிங் இடம்பெற்றுள்ளது.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

15 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. வெளிநாடுகளில் சற்று கூடுதல் அளவுடைய சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சுறா துடுப்பு ஆன்டென்னாவும் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணக் கலவையிலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சில்வர் தகடு அலங்கார பாகங்களும் இடம்பெற்றுள்ளன. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டில்ட் ஸ்டீயரிங் வீல் இருக்கிறது. ஆனால், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் வசதி இல்லை.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் 7 அங்குல தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சொகுசு கார்களில் இருப்பது போன்று, கை அசைவு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இந்த சாதனம் சப்போர்ட் செய்யாது.

ரியர் ஏசி வென்ட்

ரியர் ஏசி வென்ட்

புதிய டொயோட்டா யாரிஸ் காரில் முக்கிய அம்சமாக உட்புற கூரை மீது ரியர் ஏசி வென்ட்டுகள் மற்றும் அதனுடன் சேர்த்து ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இடவசதி

இடவசதி

இந்த காரின் பின் இருக்கையை 60: 40 என்ற அளவில் மடக்கி வைக்கும் வசதி உள்ளது. உட்புறம் இடவசதி தாராளமாக தெரிவதும் வாடிக்கையாளர்களை கவரலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் பொதுவானதாக கொடுக்கப்படுகிறது. இது கொடுக்கும் பணத்திற்கு மிகச் சிறப்பான தேர்வாக அமையும்.

வண்ணங்கள்:

வண்ணங்கள்:

மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் க்ரே, வைல்டுஃபயர் ரெட், ஃபான்டம் பிரவுன், சூப்பர் ஒயிட் மற்றும் ஒயிட் பியர்ல் க்றிஸ்ட்டல் ஷைன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

மதிப்பு மிக்க மாடல்...

மதிப்பு மிக்க மாடல்...

விலை குறைவான வேரியண்ட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருப்பது, போட்டி மாடல்களைவிட மதிப்புமிக்க மாடலாக இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Prices Revealed: To Launch In May
Story first published: Wednesday, April 25, 2018, 12:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X