டாப் வேரியண்ட் அளவுக்கு வசதிகளுடன் அசத்தும் டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் வேரியண்ட்!!

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா போன்ற ஜாம்பவான்கள் உலவும் மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் டொயோட்டா யாரிஸ் புதிய வரவாக களமிறங்கி உள்ளது. அண்மையில் விலை விபரம் வெளியிடப்பட்ட நிலையில், போட்ட

By Saravana Rajan

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா போன்ற ஜாம்பவான்கள் உலவும் மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் டொயோட்டா யாரிஸ் புதிய வரவாக களமிறங்கி உள்ளது. அண்மையில் விலை விபரம் வெளியிடப்பட்ட நிலையில், போட்டியாளர்களை ஒப்பிடும்போது டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடல் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பம்சங்களை பெற்று அசரடிக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

பொதுவாக பேஸ் மாடலில் பல முக்கிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அந்த எழுதப்படாத விதியை உடைத்தெறிந்து இந்த செக்மென்ட்டிலேயே அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட பேஸ் மாடலாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது டொயோட்டா யாரிஸ்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

டொயோட்டா யாரிஸ் காரின் ஜே என்ற பேஸ் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதுதான் இப்போது வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கும் விஷயம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே அதிகபட்சமான ஏர்பேக்குகளை கொடுப்பது கார் நிறுவனங்களின் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது டொயோட்டா. 7 ஏர்பேக்குகள் மட்டுமின்றி, அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் உறுதியை வழங்குவதுடன், பணத்திற்கு அதிக மதிப்பு வாய்ந்த பேஸ் மாடலாகவும் இருக்கிறது. இதேபோன்று, பெரும்பாலான கார்களில் டாப் வேரியண்ட்டில்தான் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெறும். ஆனால், டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

விலை குறைவான மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு சங்கோஜத்தை தரும் விஷயம். கைப்பிடிகள், ரியர் வியூ கண்ணாடிகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும். முன்புறம் மற்றும் பின்புறத்தில் கொடுக்கப்படும் க்ரோம் பட்டைகள் தவிர்க்கப்படும். ஆனால், இந்த காரில் பாடி கலர் கைப்பிடிகள் இருப்பதுடன், பின்புற நம்பர் பிளேட்டில் க்ரோம் பட்டை இடம்பெற்றிருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

மற்றொரு முக்கிய அம்சம், பேஸ் மாடலில் அனைத்து ஜன்னல் கண்ணாடிகளுக்கும் பவர் விண்டோஸ் வசதி இருக்கிறது. அதேபோன்று, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

யாரிஸ் பேஸ் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டமும் உண்டு. டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங், பின்புற இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட் ஆகியவையும் இதற்கு வலு சேர்க்கும் சிறப்பம்சங்கள். இந்த காரில் கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் டியூவல் டோன் இன்டீரியர் தீம் போன்றவையும் நம்ப முடியாத சிறப்பம்சங்களாகவே கூறலாம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

இதுவரை கண்ட சிறப்பம்சங்கள் அனைத்தும் வாடிக்கையாளர் அத்தியாவசியமாக பார்க்கப்படுவதுடன், நடுத்தர விலை அல்லது விலை உயர்ந்த மாடலில் மட்டுமே பெறக்கூடிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்த காரின் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.8.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், சிவிடி மாடல் ரூ.9.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

இந்த செக்மென்ட்டில் மாருதி சியாஸ் காரின் பேஸ் மாடல்தான் விலை குறைவானது. ஆனால், சிறப்பம்சங்கள் என்று ஒப்பிடும்போது டொயோட்டா யாரிஸ் கார் பலபடிகள் முன்னே நிற்கிறது. குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்களில் யாரிஸ்தான் பெஸ்ட் என்று சொல்ல வைக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் ஜே என்ற பேஸ் மாடல் தவிர்த்து ஜி, வி மற்றும் விஎக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டுகளில் கூடுதலாக பனி விளக்குகள், முன்பக்க, பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, 15 அங்குல அலாய் வீல்கள், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஆட்டோமேட்டிக் வைப்பர்களுடன் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

எல்இடி பகல்நேர விளக்குகள், பேடில் ஷிஃப்ட் வசதி, பவர் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், லெதர் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும். எனினும், இந்த கார் விற்பனையில் பேஸ் மாடல் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!

புதிய டொயோட்டா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105.5 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து வேரியண்ட்டுகளுமே மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் மாடலில் எக்கச்சக்க வசதிகள்!!
வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் சிவிடி கியர்பாக்ஸ்
ஜே வேரியண்ட் ₹ 8,75,000 ₹ 9,95,000
ஜி வேரியண்ட் ₹ 10,56,000 ₹ 11,76,000
வி வேரியண்ட் ₹ 11,70,000 ₹ 12,90,000
விஎக்ஸ் வேரியண்ட் ₹ 12,85,000 ₹ 14,07,000
Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Sedan Base Model Features.
Story first published: Monday, April 30, 2018, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X