யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான யுனட்டி ஒன் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

யுனிட்டி ஒன் மின்சார கார் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிக பிரத்யேக அம்சங்களை கொண்ட இந்த காரின் படங்கள் மற்றும் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சிறிய குழுவினர்தான் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம்தான் இந்த காரை தயாரித்துள்ளனர். இந்தியாவில் பேர்டு நிறுவனம் யுனிட்டி ஒன் காரை அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான உரிமையை பெற்றிருக்கிறது.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

மஹிந்திரா நிறுவனத்தின் இ2ஓ எலக்ட்ரிக் கார் ஒத்த வடிவத்தில் இருக்கும் இந்த கார் 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி மற்றும் 5 பேர் செல்வதற்கான இரண்டு மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடல்தான் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. 5 பேர் செல்வதற்கான மாடல் குறித்து விளக்கும் வீடியோ வடிவில் பார்க்கும் வசதி ஆட்டோ எக்ஸ்போவில் செய்யப்பட்டு இருக்கிறது.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த கார் மிக எளிமையாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு வித்தியாசமான வடிவமைப்புடன் இருக்கும் இந்த காரில் வீல்கவர் முழுவதும் மறைக்கப்பட்ட அமைப்புடன் இருக்கிறது.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

யுனிட்டி ஒன் காரில் 22kW திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 200 கிமீ தூரம் பயணிப்பதற்கான திறனை வழங்கும்.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த காருக்கு வழங்கப்படும் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக பேட்டரி வெறும் 20 நிமிடங்களில் 90 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்; 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஆனால், சாதாரணமாக சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்ய 3 மணிநேரம் பிடிக்கும் என்று யுனிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த மின்சார காரில் ஸ்டீயரிங் வீல் இல்லாமல், ஜாய் ஸ்டிக் அமைப்பு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் வீல் உள்ள மாடலையே இந்தியர்கள் விரும்புவார்கள் என்ற கருத்தும் உள்ளது.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த காருக்கு லெவல் 4 என்ற நிலையிலான தானியங்கி முறையில் இயங்கும் நுட்பமும் உள்ளது. ஆனால், இப்போதைக்கு இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த காரில் இரண்டு ஜாய் ஸ்டிக்கிற்கு இடையில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் தகவல்களை காட்டும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியும் இருக்கிறது.

யுனிட்டி ஒன் மின்சார கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ரூ.7.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது யுனிட்டி ஒன் எலக்ட்ரிக் கார். வரும் 2019ம் ஆண்டில் யுனிட்டி ஒன் 2 சீட்டர் காருக்கான டெலிவிரியும், 2020ல் யுனிட்டி ஒன் 5 சீட்டர் காருக்கான டெலிவிரியும் துவங்கும். ரூ.1,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Uniti One launched at Rs 7.14 lakh ex-showroom (India) in India at Auto Expo 2018. The Uniti One is an electric vehicle built by a small team in Sweden, which the company plans to bring to India in 2020.
Story first published: Sunday, February 11, 2018, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X